காஞ்சிபுரம் இட்லி 3

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - ஒரு கப்
காரட் - ஒன்று
பட்டாணி - கால் கிலோ
பீன்ஸ் - 6
கடுகு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 8
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

ரவையை நெய்யில் வறுத்து 3 கப் புளித்த தயிரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நறுக்கிய காரட், பட்டாணி, பீன்ஸ் இவற்றை எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு நறுக்கிய காய்கறிகளை வதக்கிக் கொள்ளவும்.
வதக்கியவற்றை ஊற வைத்திருக்கும் ரவையில் கொட்டிக் கலந்து இட்லித் தட்டுகளில் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
காலையில் செய்வதென்றால் முன் தினம் இரவில் புளிக்காத தயிரிலேயே ஊற வைக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்