பைவ் இன் ஒன் ஸ்பாஞ்ச் பொம்மை செய்வது எப்படி?

தேதி: November 11, 2007

4
Average: 3.9 (14 votes)

எளியமுறையில் ஸ்பான்ஞ்ச் கொண்டு அழகிய பொம்மை செய்வது எப்படி என்பதை திருமதி. சாந்தி மோகனசுந்தரம் அவர்கள் விளக்குகின்றார்கள்.

 

ஸ்பாஞ்ச் - ஒன்று
டேப்
ஸ்கெட்ச்
ஊசி நூல்
சம்கி
ப்ளேடு
ஒட்டும் பசை

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் ஸ்பாஞ்சின் அகலத்தை டேப்பால் அளந்து பாதியாக பிரித்து ஸ்கெட்ச்சால் சுற்றிலும் கோடுப் போட்டுக் கொள்ளவும்.
அதே போல் பக்கவாட்டில் உயரத்தை அளந்து பாதியாக பிரித்து ஸ்கெச்சை வைத்து பாதி அளவிற்கு கோடு போட்டுக் கொள்ளவும்.
ஸ்பாஞ்சை நிமிர்த்து வைத்து நடுவில் ப்ளேடால் வெட்டவும். ஸ்பாஞ்ச் அடிவரை வெட்டாமல், கோடுப் போட்டு வைத்திருக்கும் பாதி அளவு வரை வெட்டவும். இரண்டாக பிரித்த ஸ்பாஞ்சின் ஒரு பகுதியை செங்குத்தாக பாதி அளவு வெட்டவும்.
வெட்டிய பாதியை இரண்டு சரி பாதி துண்டுகளாக வெட்டவும். படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பெரியதாக இருக்கும் ஸ்பாஞ்சின் இரு முனைகளையும் படத்தில் காட்டியுள்ளவாறு நூலை வைத்து கட்டி காதுகள் செய்துக் கொள்ளவும்.
பிறகு ஸ்பாஞ்சின் நடுவில் நூலை வைத்து கட்டவும். அது தலை போன்ற வடிவம் பெறவேண்டும்
அடுத்து இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள ஸ்பான்ஞ்சையும் இதேபோல் நுனிகளை நூலால் கட்டி காதுகள் செய்யவும். சரி பாதியில் நூலைக் கொண்டு கட்டி முகம் மற்றும் உடல் அமைப்பு கொண்டு வரவும்
முகத்தில் கண்கள் ஒட்டுவதற்கு இரண்டு இடங்களில் பசை தடவவும்.
பசை தடவிய இடத்தில் ஜமிக்கி வைத்து கண் போன்று கொண்டு வரவும்
அடுத்து பெரிய அளவில் உள்ள ஸ்பான்ஞ்சில் ஏற்கனவே ஒரு தலை செய்து வைத்து இருந்தோம். இப்போது அதன் முன்புறத்தில் பாதி வெட்டப்பட்டு இருக்கும் இடத்தில், மையத்தில் ப்ளேடு கொண்டு கொஞ்சம் வெட்டி விடவும். அதில் இரண்டு தலைகள் கொண்டு வரவேண்டும். நான்கு முனைகளிலும் நூலைக் கொண்டு கட்டி முதலில் காதுகள் கொண்டு வரவும்.
பின்னர் லேசாக வெட்டி விட்ட பாகத்தை பிரித்து, அதில் நூலால் கட்டி முகம் கொண்டு வரவும்.
எல்லா முகங்களிலும் கண்கள் வைத்து, உதடுகள் வரையவும். உதட்டுக்கு ஸ்டிக்கர் பொட்டை யூ வடிவில் வெட்டி ஒட்டவும். இமைகளும் வைக்கலாம். அழகான பைவ் இன் ஒன் பொம்மை தயார். மிக எளிதாக செய்யக்கூடிய இந்த பொம்மையை குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கலாம். இந்த அழகிய பொம்மையை செய்து காட்டியவர், திருமதி. சாந்தி மோகனசுந்தரம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹலோ சாந்தி எப்படி இருக்கீங்க? உங்க இந்த ஸ்பான்ச் பூனைகுட்டி பொம்மைகள் பார்க்க ரொம்ப கியூட்டா இருக்கு. வீட்டில் இருக்கும் ஸ்பான்ச்சை பார்க்கும் போதெல்லாம் உங்கள் பொம்மைகள் தான் நினைவுக்கு வருகின்றது. ஆகவே இதை நானும் ஒருநாளைக்கு செய்து பார்த்து மகிழப்போகின்றேன். மேலும் இதைப் போலவே எளிதாக செய்யக்கூடிய கைவிணைப் பொருட்களையும் செய்து காட்டும்படி கேட்டுக் கொள்கின்றேன், நன்றி.

ஹாய் சாந்தி,
உங்கள் குறிப்பைப் பார்த்து நானும் ஸ்பான்ச் பொம்மைகள் செய்தேன். செய்வதற்குச் சுலபமாக இருந்தது. அழகாக வந்தது. குறிப்புக்கு நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இந்த செய்முறையை பார்த்து திருமதி. இமா அவர்கள் செய்த 5 இன் 1 ஸ்பாஞ்ச் பொம்மைகளின் படம்

<img src="files/pictures/five in one.jpg" alt="picture" />

சென்ற வாரம் மூன்றாவது தடவையாக இந்தச் செய்முறையை என் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். சிறுவர்களுக்குப் பிடித்திருக்கிறது இந்தப் பொம்மைகள். பூனைகள் அழகாக வந்திருக்கின்றன.
அறுசுவையோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ;) நன்றி.

‍- இமா க்றிஸ்

hai santhi. how r u? nan padikumbodhu sponch bommai seidhiriken. but 1sponch vechu 5 bommaihal. kalakiteenga.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

நன்றி திருமதி. சாந்தி மோகனசுந்தரம்.உங்களது பைவ் இன் ஒன் ஸ்பாஞ்ச் பொம்மை செய்துவிட்டேன். அழகாக உள்ளது. எங்கள் வீட்டு ஷோ கேஸிலும் வைத்தாகி விட்டது. நேரத்தை உபயோகமாக செலவிட வைத்த அறுசுவைக்கு நன்றிகள் பல. பொம்மையின் photo சேர்ப்பது எப்படி.

By
JP

"கலங்கிய கண்களை நேசி....
ஆனால் நேசித்த கண்களை கலங்க விடாதே".

JP