வாழ்த்துக்கள் திருமதி.செந்தமிழ் செல்வி

அன்புள்ள செல்வி உங்கள் குறிப்புகள் மிகவும் எளிமையானதாகவும் ,டயட் போன்ற பயனுள்ள குறிப்புகளும்,உங்கள் குறிப்புகளின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் உங்கள் குணமும் சுறுசுறுப்பும் என்னை கவர்ந்தவிஷயங்கள்.முண்ணூறூ குறிப்புகள் கொடுத்து இமாலய சாதனை படைத்த உங்கள் பணி மேலும் தொடர மனதார வாழ்த்துகிறோம்

அன்புடன் பர்வீன்.

அன்புள்ள செந்தமிழ்செல்வி மேடம்,

முண்ணூறு குறிப்புகள் கொடுத்து அசத்திட்டிங்க, இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுத்து அசத்த எனது மனமார வாழ்த்துக்கள்.

முந்நூறு(!!!!!!!) குறிப்புகளைக்கொடுத்து மாபெரும் சாதனையைப்படைத்த செல்வி அக்காவை மனதார வாழ்த்துகிறேன்.

புதுசு கலா புதுசுவைப்பாத்துவிட்டு அறுசுவையில்தான் ஏதோ மிஸ்டேக்கோ என்று திரும்ப திரும்ப அழுத்திக்கொண்டிருந்தேன். அப்புறம் பார்த்தால் அது நம் செல்வி அக்காவின் டயட் குறிப்புகள். உங்களுக்கு எங்கள் அனைவரின் நன்றிகள் பல.

செல்வி அக்கா நல்லா இருக்கீங்களா? அடேயப்பா!300 குறிப்புகளா!வியப்பாக இருக்கிறது,மேலும் நல்ல நல்ல பயனுள்ள எளிமையான சமையல் குறிப்புகள்!அசத்திட்டீங்க அக்கா!மேலும் பல நூரை தொடவும் வாழ்த்துகுறேன்!

அன்பு செல்விமா,

சூப்பரா டயட் குறிப்புகள் கொடுத்து கலக்கிட்டீங்க:-) அழகா முன்னூறுக்கு மேல குறிப்புகளையும் கொடுத்து இப்ப நம்பர் ஒன் ஆயிட்டீங்க:-) இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து இன்னும் நிறைய பாராட்டுக்கள் வாங்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்பு சகோதரி பர்வீன்,

ரொம்ப சந்தோஷமாயிருக்கு. எனக்காக தனி திரியா?

இமாலய சாதனையெல்லாம் ஒண்ணுமில்லம்மா. எனக்கு முன்னால என் தோழி மனோஹரி செஞ்சுட்டாங்க. கண்டிப்பா இன்னும் பலநூறு குறிப்புகள் கொடுப்பேன். நன்றி.

முதல்ல என் நன்றிய ஜானகிக்குத் தான் சொல்லணும். அவங்க தான் சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டுட்டாங்க. உள்ள தூங்கிட்டிருந்தவள எழுப்பி விட்டுட்டாங்க. Thanks Janaki(2411) :-).

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புசகோதரி செந்தமிழ் செல்வி அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா . 300 குறிப்புகள் கொடுத்து அசத்திவிட்டீர்களே என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல நூறு குறிப்புகள் கொடுக்க மனதார வாழ்த்துகிறேன்.
அன்புடன் கதீஜா.

அன்பு சகோதரி பானு,

உங்க வாழ்த்துக்கு நன்றி. கண்டிப்பா இன்னும் நிறைய குறிப்புகள் என்னால் முடிந்தவரை கொடுப்பேன். நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி வானதி,

உன்னோட வாழ்த்துக்கு நன்றிமா. மாபெரும் சாதனைன்னு சொல்ற அளவுக்கெல்லாம் இது ஒண்ணும் பெரிய சாதனை அல்ல. என் மேல் உள்ள அன்புனால அப்படி சொல்றே. இன்னும் கடக்க (?!) வேண்டிய தூரம் நிறைய உள்ளது. நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி ரஸியா,

உங்களோட வாழ்த்துக்கு நன்றி. டயட் குறிப்புகள் எப்பொழுதும் எளிமையாக இருந்தால் தான் பின்பற்ற ஊக்கம் வரும். நிறைய பொருட்களை சேர்த்தாலும் அந்த குறிப்பு டயட்டிற்கு உதவாது. எனவே தான் என் டயட் குறிப்புகள் அனைத்தையும் எளிமையானதும், அதிக பொருட்கள் இல்லாமலும் இருக்கும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு மகள் ஹர்ஷு,

உன்னோட வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றிமா. டயட் குறிப்புகள் நான் கொடுத்துட்டேன், அதற்கான சார்ட் அட்மினுக்கு அனுப்பிச்சிருக்கேன். அவர் இன்னும் அழகுப்படுத்தி வெளியிடுவார். அதுல என்னன்ன நாள், என்னன்ன நேரத்தில, என்னன்ன குறிப்புன்னு விளக்கமா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்