வாழ்த்துக்கள் திருமதி.செந்தமிழ் செல்வி

அன்புள்ள செல்வி உங்கள் குறிப்புகள் மிகவும் எளிமையானதாகவும் ,டயட் போன்ற பயனுள்ள குறிப்புகளும்,உங்கள் குறிப்புகளின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் உங்கள் குணமும் சுறுசுறுப்பும் என்னை கவர்ந்தவிஷயங்கள்.முண்ணூறூ குறிப்புகள் கொடுத்து இமாலய சாதனை படைத்த உங்கள் பணி மேலும் தொடர மனதார வாழ்த்துகிறோம்

அன்புடன் பர்வீன்.

அன்பு ரீட்டா,
இங்கு நான் மட்டும் இல்லை. என்னைப் போல நிறைய பேர் இருக்காங்க. சகோதரிகள் ஜெயந்தி, ஜலீலா, தேவா இன்னும் எனக்கு தெரியாமல். அறுசுவை இருக்கும் போது சமையலுக்கு எதற்கு கஷ்டப் படணும்? அடிக்கடி ஓட்டல் வேண்டாம். உடம்புக்கு நல்லதில்லை.
சின்ன பொண்ணு நீங்கல்லாம். பம்பரம் மாதிரி சுத்த வேண்டாமா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி மேடம்! எப்படியிருக்கீங்க? பல சந்தர்ப்பர்த்தில், குறிப்பாக அறுசுவையின் பர்த்டே சமயத்தில் தங்களுடன் பேசலாம் என்று நினைத்தேன். பற்பல தடைகள், முடியவில்லை. இன்று நிறைய பதிவுகளில் பதிலளிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், விட்டுப்போன வாழ்த்துக்களை முடிந்தவரை ஒவ்வொருவருக்காக சமர்ப்பிக்கிறேன். தங்களின் அலுவலக வேலைகளுக்கிடையிலும், செமவேகத்தில் 350 குறிப்புகள்!!! சூப்பர் எக்ஸ்பிரஸ்தான் போங்க! இன்னும் அசத்த, அசத்திக்கொண்டேயிருக்க வாழ்த்துக்கள்!

செல்விம்மா
எப்டி இருக்கீங்க?
350 யை தொட்டுவிட்டீர்கள்..
எது எல்லை என்று வைத்துக்கொள்ளாமல் எதையோ தேடி ஓடுகிறீர்களே!!
எல்லையில்லா வானம் போல நிலைக்கட்டும் உங்கள் பணி...

இந்த த்ரெட்டையே கொஞ்ச நாளா படிக்கல..அதனால் பதிவுகளை இப்ப தான் பாத்தேன்..
செல்வீக்கா விபத்து எப்படி நடந்ததுன்னு ஏன் கேட்டேன்னு தெரியுமா?இதுக்கு தான்...
எனக்கு ரோட்டில் விபத்தை பாத்தா அப்ரம் கொஞ்ச நாளைக்கு மனசை விட்டு போகாது வீட்லையும் யார்டயும் பேசமாட்டேன்..முக்கியமா அவங்களுக்கு விபத்து நேரத்தில் அவங்களுக்கு வலிக்குமா இல்லை மரத்துப் போயிருமான்னு டவுட்.
அதான் கேட்டேன்...இவ்வளவு பெரிசா இருக்கும்னு நெனக்கல.மனசுக்குள்ள ஒரு தைரியம் வந்துடுச்சு..சரி என்னவோ கை கால், முகமெல்லாம் திரும்ப நல்ல படியா கெடச்சுதே அதுவே பெரிய பாகியம்.
எனக்கு என்னவோ மாதிரியும் இருக்கு ஆனா சிரிப்பும் வருது..முனொரு முறை எனக்கு அப்ப ஒரு 15 வயசிருக்கும்..காரில் சின்னதா வந்து ஒரு லாரி உரசினதுல கார் ஒரு பக்கம் போய் நின்னுது...அப்ப வேற யார்க்கும் எதுவும் ஆகல எனக்கு மட்டும் கால் முட்டியில் தோல் சிறன்டின மாதிரி வந்தது..மூகு போய் சீட்டில் இடிச்சதால் மூக்கில் ரத்தமும் வந்தது...அப்ரம் வீட்டுக்கு வந்துட்டு கன்னாடி பாத்தா என் முகம் ஜபான்காரி மாதிரி இருக்கு...நீளமா இருந்த மூக்கு இப்படி ஆயிடுச்சே இனி என் மூஞ்சி இப்படி தான் இருக்கும்னு ரூம்குள்ள தனியா உக்காந்து ஒரே அழுக :-)
அப்ரம் மெல்ல 1 வாரத்துல சரியாய்டுச்சு..இப்ப நெனச்சா சிரிப்பு.

என்னப்பா சொல்ரீங்க?எப்பவோ ட்நின்ஸ் பத்தி என்னவோ எழுதின நியாபகம் இருக்கு..ஆனா என்ன எப்பன்னு நியாபகம் இல்ல...அதுகப்புரம் வேற கேட்டீங்களா?நான் பாகல போலிருக்கு..நான் பதில் சொல்லாட்டி ஒன்னு பாத்திருக்க மாட்டேன்..இல்லாட்டி பதில் தெரியாததால...எங்கன்னு இன்னொரு முறை வரும்போது சொல்லுங்க சரியா..கோச்சுக்க வேண்டாம்.

என்னப்பா சொல்ரீங்க?எப்பவோ twins பத்தி என்னவோ எழுதின நியாபகம் இருக்கு..ஆனா என்ன எப்பன்னு நியாபகம் இல்ல...அதுகப்புரம் வேற கேட்டீங்களா?நான் பாகல போலிருக்கு..நான் பதில் சொல்லாட்டி ஒன்னு பாத்திருக்க மாட்டேன்..இல்லாட்டி பதில் தெரியாததால...எங்கன்னு இன்னொரு முறை வரும்போது சொல்லுங்க சரியா..கோச்சுக்க வேண்டாம்.

செல்வி அக்காவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 300 குறிப்புகள் கொடுத்து அசத்திட்டீங்க.எனக்கும் ஆலோசனை கூறியிருக்கிறீர்கள்.அதற்க்கும் நன்றி

அன்புடன்
சங்கீதஜகராஜன்,

vazhga vazhamudan

செல்வி மேடம் எப்படி இருக்கிறீகள் அசத்தோ அசத்துன்னு அசத்திக்கொண்டிருகிறீகள்.
எப்படி முடியுது. நீங்கள் எங்கு வேலை பார்க்கிறீர்கள். இப்பதான் உங்களுடைய காரட் பாதுஷாவையும், மனோ மேடம் உடைய அதிரசமும் பார்த்து வைத்துள்ளேன் முடிந்தால் செய்யனும்.
ஜலீலா

Jaleelakamal

அன்பு சகோதரி அஸ்மா,
நலமா? எவ்வளவு நாட்களாச்சு பேசி! ஆனாலும் காணோம்னு விளம்பரம் கொடுக்காத குறையா நான் பதிவு போட்டப்பறம்தான் நீங்க வந்திருக்கீங்க:-) இது இரண்டாம் முறையா அடிக்கிறேஎன். முத்ல்ல அடிச்ச பதிவைக் காணோம், போயேபோச்சு, போயிந்தி... ஆனாலும் ஒரு பதிவு போட ரொம்பவே போராட வேண்டி இருக்கு. சூப்பர் எக்ஸ்பிரஸா, பாசஞ்சரான்னு போகப் போக பார்த்தால்தானே தெரியும். பாராட்டுக்கு நன்றி.
அடிக்கடி அறுசுவையிலும் தலையக்(!) காட்டுங்க.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்