வாழ்த்துக்கள் திருமதி.செந்தமிழ் செல்வி

அன்புள்ள செல்வி உங்கள் குறிப்புகள் மிகவும் எளிமையானதாகவும் ,டயட் போன்ற பயனுள்ள குறிப்புகளும்,உங்கள் குறிப்புகளின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் உங்கள் குணமும் சுறுசுறுப்பும் என்னை கவர்ந்தவிஷயங்கள்.முண்ணூறூ குறிப்புகள் கொடுத்து இமாலய சாதனை படைத்த உங்கள் பணி மேலும் தொடர மனதார வாழ்த்துகிறோம்

அன்புடன் பர்வீன்.

ஐயோ அக்கா.. நீங்க ரொம்ப மோசம் ...என்ங்கா என்னை இப்படி போட்டு கடிகரிங்க...ஐயோ....
ஆ அப்புறம் ராயல்டி வேணுமா.? எனக்கு மசாலா டி, பிளக் டி தான் தெரியும் ...அது என்ன ராயல்டி.....எப்படி எங்க counter டயலாக் .......

ஆ அப்புறம் .. "சுவத்தில போய் முட்டிக்குவே"....எல்லாம் என் நேரம்(dont giv counter for this also...if so, i will kill my hubby..vera yarum ippothaikku pakkathula illa..)...இதை படிக்கும் போது உண்மைல முட்டிகனும் போல இருக்கு...
note: smoke is coming out of my ears...

ஆமா எனக்கு ஒரு டவுட் ...இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு? ரொம்ப சந்தோசமா இருகர மாதிரி தெரியுது? என்ன என்ன மேட்டர் ? எனக்கு சொலுங்க அக்கா....
அம்மா ரொம்ப குஷியா இருகிங்க ......

நன்றி செல்வி மேடம்...
அப்போ red bean வைத்து என்ன செய்யலாம் ...
masoor dhal ku வேற பெயர் இருக்கா ???
is basmati rice better than sona masoori rice??

anyone else know abt jasmine rice?

அன்புள்ள செல்விம்மா
masoor dhal பTறீ சில விஷயங்கள் நான் சொல்ல Vஏண்டும்
அந்த பருப்பு நரம்பு சம்பந்தபட்ட வுபாதைகலை வுன்டுபன்னும்யென படித்து இருக்கிரென்.
பொதுமான கவனிப்பு இல்லாமலெ இது வலரும்.தண்ணிர் அதிகம் THஎவைல்லை
னன்றி
புவனா

அன்பின் செல்வி மேடம் 300(324)ஐ எட்டியதற்கு வாழ்த்துக்கள். :)
உங்களது டயட் குறிப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது. மன்றத்தில் வரும் மெலிவது எப்படி என்ற கேள்விகளைப்பார்த்து நானும் டயட் உணவுக் குறிப்புகள் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அட்மினிடம் டயட்டிற்கு என தனிப்பகுதி தொடங்குவீர்களா எனவும் கேட்க நினைத்தேன். அதற்குள் நீங்கள் தொடங்கி விட்டீர்கள்:) மிகவும் நன்றி. இன்னும் பல குறிப்புகளை கொடுப்பதற்கும் எனது வாழ்த்துக்கள்.
-நர்மதா:)

பாசுமதி அரிசியை விட சோனா மசுறி அரிசி உடம்புக்கு நல்லது.பாசுமதியில் சக்கரை சத்து உண்டுணு சொல்லுவாங்க.
நீங்க jasmine rice , chinese shop இல்ல thai(land) shop-ல வாங்கலாம்..

முந்நூறு குறிப்புகளா? அதுவும் இந்திய உணவு வ்கைகளில் மட்டுமா!!! கண்டிப்பாக இது ஒரு சாதனை தான் செல்விக்கா!!உங்கள் கணவர், பிள்ளைகள் கொ.வைத்தவர்கள்!! உங்கள் சாதனை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!

மாலினி

வாழ்த்துக்கள். தூங்கினவரை எழுப்பிட்டு வாழ்த்த சொல்ல நான் தூங்கிட்டேன். சாரி அம்மா. பிராக்ஜட்ல் கொஞ்சம் பிஸி போன வாரம் பகல், இரவெல்லாம் ஆபிஸில் தான். தீபாவளி அன்று ஒரு ஸ்வீட் கூட சாப்பிடவில்லை. இன்னும் பல சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
அது என்ன ப்ராக்ட்லே 2411 என்க்கு புரியவில்லை.

ஜானகி

செல்வி மேடம், எப்படி இருக்கீங்க? அழகில், இளமையில் மட்டுமல்ல( ஆனாலும் சீக்ரெட் மட்டும் இன்னும் சொல்லல) சமையலிலும் அசத்திட்டீங்க. எப்படி முடிஞ்சது? அதுவும் இத்தனை பொறுப்பை வெச்சுட்டு. வீடு கட்டறது, உடல் நலக் குறைவு, பையன் காலேஜ் அட்மிஷன் என்று இத்தனை விஷயங்களுகு மத்தியில் நீங்க செய்த சாதனை ஆச்சரியமா இருக்கு. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னும் என்ன சர்ப்ரைஸ்லாம் வெச்சிருக்கீங்க. டயட் சமையல் மேளாவே நடத்திட்டீங்க. உங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுட்டே இருக்கேன். சாரி , இன்னும் எனக்கு மேடம்னே வருது. அக்கான்னு சொல்ல முடியாது. பேரும் சொல்ல வரல. ஏன்னா நீங்க என் பின்னி ( சித்தி) வயதில் இருப்பதால் அப்படி மரியாதை இல்லாம சொல்ல வரல. உங்க பசங்க ரொம்ப லக்கி இப்படி ஒரு சூப்பர் அம்மா கிடைச்சதுக்கு. தங்களின் உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது?

ஹாய் Balammu, சோனா மசூரி ரைஸ் நம்ம ஊர் பச்சரிசி போன்றது. அதனை நான் வழக்கமாக செய்யும் சாதத்திற்கு உபயோகிக்கலாம். பாஸ்மதி ரைஸ் பிரைட் ரைஸ், பிரியாணிக்கு பயன் படுத்துங்கள். ஜாஸ்மின் ரைஸ் என்பது தாய்லாந்து பிரைட் ரைஸுக்கும், வியட்நாம்,சைனீஸ் வகை சாதத்திற்கும், பிரைட் ரைஸிற்கும் பயன் படுத்துவது. பல நாடுகளில் ஜாஸ்மின் ரைஸை தண்ணீருக்கு பதில் தேங்காய்ப் பாலை உபயோகித்து சாதம் செய்வார்கள். மாலத்தீவிலும், தாய்லாந்திலும் ஜாஸ்மின் அரிசியை தேங்காய்ப் பாலில் வேக வைத்து உபயோகிப்பார்கள். அப்படி வேக வைத்த சாதத்தில் பிரைட் ரைஸ் செய்தால் மிகவும் நன்றாக நறுமணத்துடன் இருக்கும். ஜாஸ்மின் அரிசி பார்ப்பதற்கு பச்சரிசி பெரிதான அளவில் இருப்பது போன்று வெண்மையாக பள பளப்பாக இருக்கும். சோனா மசூரி பச்சரிசியைப் போன்றே இருக்கும். பாஸ்மதி மெலிதாக வெண்மை நிறத்திலும், சிறிது மஞ்சள் கலந்த நிறத்தில் என்று பல வெரைட்டிகளில் கிடைக்கும். ரெட் பீன் வைத்து சப்பாத்தி, பூரிக்கு சைட் டிஷ் குருமா, கிரேவி செய்யலாம். புளிக்குழம்பில் போடலாம். கவுனி அரிசியுடன் வேக வைத்து சீனி, தேங்காய் கலந்து சாப்பிடலாம். சுண்டல் போன்றும் செய்யலாம்.

மேலும் சில பதிவுகள்