வாழ்த்துக்கள் திருமதி.செந்தமிழ் செல்வி

அன்புள்ள செல்வி உங்கள் குறிப்புகள் மிகவும் எளிமையானதாகவும் ,டயட் போன்ற பயனுள்ள குறிப்புகளும்,உங்கள் குறிப்புகளின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் உங்கள் குணமும் சுறுசுறுப்பும் என்னை கவர்ந்தவிஷயங்கள்.முண்ணூறூ குறிப்புகள் கொடுத்து இமாலய சாதனை படைத்த உங்கள் பணி மேலும் தொடர மனதார வாழ்த்துகிறோம்

அன்புடன் பர்வீன்.

நன்றி தேவா மேடம் ...
இந்த தடவை நாங்க jasmine rice வாங்கிடோம் ...
என் மகன் 11 மாத குழந்தை ,அவன் சாப்பிடலாமா ???
தெரியாம வாங்கியாச்சு ... அது நல்ல ரைஸ் தானா ??

மேலும் இந்த பூச்சி வராம இருக்க என்ன செய்யணும் ??
மிளகாய் தூள் போன்றவற்றில் ??

புன்வநேஷ்வரி .... நீங்க சொல்ரட பார்த்த masoor dhal சாபிடகூடதா ?

thank u maggie.. we bought that rice.. but dont know how far its healthy to eat than sona masoori rice??

வாழ்த்துக்கள் திருமதி செல்வி.உங்கள் டயட் குறிப்புக்கள் பார்த்து சந்தோஷம்.உடம்பு குறைந்தால் இன்னமும் சந்தோஷம்.இந்தியா வரும்போது பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடு பண்ணிவிடலாம்.

11 மாதக் குழந்தைக்கு ஜாஸ்மின் ரைஸ் கொடுக்கலாம். நன்றாக மசித்துக் கொடுங்கள். பச்சரிசியைக் காட்டிலும் குழந்தைகளுகு புழுங்கல் அரிசி நல்லது( Boiled Rice). உடலுக்கு குளிர்ச்சி. ஜாஸ்மின் ரைஸ் நல்ல ரைஸ்தான். தாய்லாந்து, சீனா, மலேசியா போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பூச்சி வராமல் இருக்க மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போன்றவற்றை சலித்து( முடிந்தால் ஒரு நாள் வெயிலில் காய வைத்து) 2 வாரத்துக்கு தேவையான அளவை மட்டும் வெளியில் ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொண்டு மீதியை ஒரு திக்கான பாலித்தீன் பேகில் கட்டி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். Frost Free Fridge ஆக இருந்தால் freezer ல் வைத்து விடுங்கள். நான் இந்தியாவிலிருந்து ஒரு வருடத்துக்கு எடுத்து வந்து இப்படிதான் உபயோகிக்கின்றேன். இட்லி மிளகாய்ப் பொடிக்கூட என் பிரெண்ட் மொத்தமாக எடுத்து வந்து ப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள். அப்படியே இருக்கும்.

வாழ்த்துக்கள் செல்வி மேடம்
உங்களுடைய டயட் குறிப்பு எல்லோருக்கும் அருமையான் மருந்து. இரவு, பகல் தூங்கவில்லை போல இருக்கு ஒருவராம் பரிட்சை முடிந்துவிட்டது என நினைக்கிறேன்.
இன்னும் ஆயிரம் குறிப்புகள் கொடுத்து அசத்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

டயட் குறிப்புகள் சம்பந்தமான பக்கத்தினை விரைவில் ஆரோக்கியம் பகுதியில் கொண்டுவருகின்றேன். கடந்த 20 நாட்கள் அறுசுவைக்கு சோதனைக் காலம் போலும். எல்லாமே பிரச்சனையாக இருந்தது. தற்போது எல்லாவற்றையும் சரி செய்து பழைய நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றேன்.

தீபாவளியின்போது திட்டமிட்டு இருந்தவாறு சிறப்பு குறிப்புகள் எதையும் கொண்டுவர முடியாமல் போனதில் மிகவும் வருத்தம். சகோதரி நர்மதா ஏராளமான குறிப்புகள் (சமையல், கைவினைப்பொருட்கள்) அனுப்பியிருந்தார். அவற்றையும் வெளியிட முடியாது போயிற்று. அடுத்த ஒரு வாரத்திற்கு யாரும் சமைக்கலாமிலும், நீங்களும் செய்யலாம் பகுதியிலும் தொடச்சியாக சகோதரி நர்மதா அவர்களின் குறிப்புகள் வெளியாகும்.

சகோதரி முத்துலெட்சுமி அவர்கள் சென்ற வார மன்றத்திற்கான பட்டங்களை இன்னமும் தேர்வு செய்து அனுப்பவில்லை. அழைப்பினை கவனித்தாரா என்பதும் தெரியவில்லை. கடந்த வாரம் மன்றத்தில் நடந்த சில விரும்பதகாத நிகழ்வுகளாலும் அதன் தொடர்ச்சியாக மன்றத்தில் இருந்து ஏராளமான பதிவுகள் நீக்கப்பட்டிருப்பதாலும் சென்ற வாரம் மன்றம் பகுதியை இரண்டு வாரத்திற்கும் சேர்த்து அடுத்த வாரம் வெளியிடலாம் என்று இருக்கின்றேன்.

நடந்த சில நிகழ்வுகளை வைத்து மன்றம் மற்றும் அறுசுவை பயன்பாட்டிற்கான நிபந்தனைகளை (policy) சில மாற்றங்களுடன் விரைவில் வெளியிட இருக்கின்றோம். இனி அறுசுவையின் வளர்ச்சிக்கு தடையாக கருதப்படும் விமர்சனங்கள், கருத்துக்கள், நபர்கள் கண்டிப்பாக நீக்கப்படுவார்கள். உறுப்பினர்களும் வருகையாளர்களும் எப்போதும் இணையத்தள நிபந்தனைகளை கருத்தில் கொள்ளுதல் வேண்டும். நிபந்தனைகளில் தேவைக்கேற்ப மாற்றங்கள் இருக்கும்.

பாண்டியிலிருந்து அறுசுவைக்கு
வந்தது சுனாமி
அனுப்பியது செல்வி

அறுசுவை தளம் தாங்குமா
சும்மா அதிருதில்ல

தீபாவளி பரிசு மூன்று சதம்
உன்னைத்தொடும் தூரம் ரொம்ப, ரொம்ப அதிகம்

வானமே எல்லை,
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்த சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றி
அன்புடன்
ஜெயந்தி

பூச்சி வராமல் இருக்க ஈர கையை உபயோக படுத்தவேண்டாம்.
கல் உப்பை ஒரு சிறிய மெல்லிய துணியில் கட்டி அரிசி, பருப்பு,மாவு வகைகளில் போட்டு வைக்கவும்.இல்லை என்றால் வேப்பைலையை அதில் போட்டு வைக்கவும்.
ஜலீலா

Jaleelakamal

துவரம் பருப்புக்கு பதில் எந்த பருப்பு வேண்டுமாலும் சாபாருக்கு பயன் படுத்தலாம்.
மசூர் தால் ரொம்ப நல்ல இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

பாலம்மு,புவ்னேஸ்வரி க்கு

வலது பக்கத்தில் சாம்பார் என்ற பகுதியை கிளிக் பண்ணுங்க வித் விதமாக குறிப்புகள் இருக்கும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சாம்பார் வைத்து அததுங்கள்.
சாம்பாரில் சர்க்கரை,வெல்லம் சேர்க்க பிட்க்காதவர்கள் கேரட்டை வட்டமாக அரிந்து போடுங்கள் கல்புல்லாக இர்க்கும்.
சாம்பாரில் போடுகிற காய்களை க்ழந்தை சப்பிடவில்லையே என்ற கவளை வேண்டாம். அந்த எல்ல ஜூஸும் அதில் கொதிப்பதில் இரங்கிவிடும் நல்ல சாம்பாரை கொழ கொழ என் ஊற்றீ வெறவி கொடுத்தாலே போதும்.
ஜலீலா

Jaleelakamal

செல்வி அம்மாவுக்கு(அப்படி கூப்பிடலாமா?) உங்களுடைய அனைத்து குறிப்புகளும் மிகவும் அருமை. அதில் பலவற்றை செய்து என் கணவரின் பாராட்டுக்களை பெற்றேன். 324 என்னும் இமாலய இலக்கினை அடைந்ததற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் இது போல் பல நூறு குறிப்புகள் கொடுக்க என்னுடய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி

மேலும் சில பதிவுகள்