வாழ்த்துக்கள் திருமதி.செந்தமிழ் செல்வி

அன்புள்ள செல்வி உங்கள் குறிப்புகள் மிகவும் எளிமையானதாகவும் ,டயட் போன்ற பயனுள்ள குறிப்புகளும்,உங்கள் குறிப்புகளின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் உங்கள் குணமும் சுறுசுறுப்பும் என்னை கவர்ந்தவிஷயங்கள்.முண்ணூறூ குறிப்புகள் கொடுத்து இமாலய சாதனை படைத்த உங்கள் பணி மேலும் தொடர மனதார வாழ்த்துகிறோம்

அன்புடன் பர்வீன்.

அன்பு சுஜி,
என்னை எப்படி கூப்பிட விருப்பமோ அப்படி கூப்பிடலாம்.
உங்கள் கணவரின் பாராட்டை அடிக்கடி பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி. கண்டிப்பாக இன்னும் நிறைய குறிப்புகள் கொடுப்பேன். நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள ஜானகி,
நலமா? அதனாலென்ன? தூங்கினவங்களை எழுப்பி விட்டப்பறம் நாம தூங்கறதுல தப்பே இல்லை.
வாழ்த்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி.

உன்னோட யூசர் நேமை ஜானகி2411ன்னு வச்சுகிட்டு நீ என்ன கேட்கிறியா?(யாருக்கு தெரியும்,ஜானகியே போட்டுக்கிட்ட நம்பர்தான அது).

போகட்டும் தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடாட்டா என்ன? எங்க வீட்டுக்கு வா, கிறிஸ்துமஸுக்கு
விருந்தே வச்சுடறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் நர்மதா,
எப்படியிருக்கே? பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நம்ம ரோஸ் தான் ரொம்ப கவல பட்டாங்க, உடல் இளைக்கணும்னு. அதுனால தான் கொஞ்சம் சிரமம் பார்க்காம இந்த குறிப்புகள் பதிவு செஞ்சேன். யாராவது ஒருத்தருக்காவது இது பயன்பட்டாக்கூட போதும். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் மாலி(னி),
எப்படியிருக்கே? இந்தியாவில இருக்கறதால இந்திய உணவு வகைகள் மட்டும் தான்பா எனக்கு தெரியும் ;-(
யார் கொ.வைத்தவர்கள்? அவங்கள கேட்டாத்தான் தெரியும் எ.கொ.சா.இன்னு சொல்வாங்க.
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் ரோஸ்,
எப்படியிருக்கே? உனக்கு வாக்கு கொடுத்ததால தான் 1 மாசமா கஷ்டப்பட்டு (ராத்திரி, பகல் பாராம !) இந்த குறிப்புகளைக் கொடுத்தேன்.
பாராட்டுக்கு நன்றி.
எப்ப இந்தியா வரப்போறே? முன்னாடியே சொல்லிடு, அப்பத்தான் அலங்கார வளைவெல்லாம் ஏற்பாடு பண்ணனும், ஓக்கே. :-)
(சந்தோஷத்தில மறுபடியும் ஒரு சுத்து......, பாத்து ரோஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள ஜலீலா,
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.
ஒரு வாரம் இல்ல ஜலீலா, ஒரு மாசம்ன்னு வேணா சொல்லலாம். உண்மையிலேயே ஒரு பரீட்சைக்கு மாதிரி தான் தயார் பண்ணினேன்.
1000 குறிப்பா? பார்ப்போம், முடிந்த வரை கொடுக்க முயல்கிறேன். மீண்டும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் தேவா,
நலமா? பையன் எப்படியிருக்கான்? வேலை எப்படியிருக்கு? (கிண்டலான்னு கேட்கிறது காதில விழுது, ச்சும்மா கொஞ்சம் வம்பு தான்).
நீ சும்மா செல்வின்னே கூப்பிடு, இதிலென்ன இருக்கு? உடம்பு கொஞ்சம் பரவால்ல. அதனால தான் இவ்வளவு வேகம். எல்லா வேலையோட அறுசுவைக்குக் குறிப்புக் குடுக்கறதையும் ஒரு வேலையாவே வெச்சுக்கிட்டேன். அதனால தான் முடியுது.
எங்க வீட்டில பெரிய சண்டையே நடக்கும். யார் லக்கின்னு? நாங்க சொல்லுவோம், இப்படி புள்ளைங்க கெடச்சதுக்கு நாங்க தான்னு. அவங்க சொல்லுவாங்க அவங்க தான் லக்கின்னு, இப்படி அம்மா, அப்பா கெடச்சதுக்கு. மொத்தத்தில எங்க குடும்பமே ரொம்ப லக்கி தான். ரொம்ப அறுத்திட்டேன்னு நினைக்கிறேன்.
உன்னோட மனமார்ந்த பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சர்ப்ரைஸெல்லாம் முன்னாடியே சொல்ல முடியுமா, அப்பப்ப தான் வெடி வைப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரர் பாபு,
மிக்க நன்றி. இந்த அருமையான தளத்தின் வாயிலாக எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி.
எண்ணிலடங்கா சகோதரிகளையும், தோழிகளையும் கிடைக்க செய்ததற்கு கோடானு கோடி நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி ஜெயந்தி,
உங்க மாதிரியெல்லாம் என்னால பாட்டு படிக்க முடியாது, நான் அப்பீட்டு.
உங்கள் அன்புக்கும் ஆசிகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வணக்கம். 300 குறிப்புகள் கொடுத்து அசத்தீட்டீங்க. வாழ்த்துக்கள். உங்கள் குறிப்புகள் எல்லாம் அருமை. நீங்கள் 3000 குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்