வாழ்த்துக்கள் திருமதி.செந்தமிழ் செல்வி

அன்புள்ள செல்வி உங்கள் குறிப்புகள் மிகவும் எளிமையானதாகவும் ,டயட் போன்ற பயனுள்ள குறிப்புகளும்,உங்கள் குறிப்புகளின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் உங்கள் குணமும் சுறுசுறுப்பும் என்னை கவர்ந்தவிஷயங்கள்.முண்ணூறூ குறிப்புகள் கொடுத்து இமாலய சாதனை படைத்த உங்கள் பணி மேலும் தொடர மனதார வாழ்த்துகிறோம்

அன்புடன் பர்வீன்.

அன்புள்ள வித்யா,
கொடுத்த குறிப்புகளுக்கும், கொடுக்கப் போகும் குறிப்புகளூக்கும் சேர்த்து வாழ்த்தியதற்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி பீவி,
ஆமாம், முத்ன் முறையாகத்தான் பேசுகிறோம். வாழ்த்துடன் ஆரம்பிக்கும் உறவு என்றென்றும் தொடரட்டும். உங்களுடைய குறிப்புகளையும் நான் பார்த்திருக்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் பணி தொடரட்டும்.
நன்றிக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் குயின்,
எப்படியிருகீங்க? நீங்கள்ளாம் தான் சாதனைன்னு சொல்றீங்க. நான் அப்படி நினைக்கல. இதெல்லாம் ஒண்ணுமேயில்லை. வளர்ந்த பசங்க மட்டும் காரணமில்லை.காரணம் பின்னால் வருகிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி உங்கள் சமயல் குறிப்புக்கள் பலவும் நான் சமைத்திருக்கிறேன். அருமயாக இருந்தது. மிகவும் எளிமயான விளக்கங்கள்.உங்கள் சாதனைக்கு பாரட்டுக்கள்.உங்கள் பணி துடர வாழ்த்துக்கள்

Today is a new day.

இதுவரை என்னை வாழ்த்திய, இனி வாழ்த்தப்போகும் சகோதரிகள் அனைவருக்கும் நன்றி.

வெற்றி பெற்ற அனைத்து ஆண்களுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதுதான் பழமொழி. ஆனால் என்னுடைய இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பது என் கணவர்தான்.

போன வருடம் இதே நேரத்தில் (நவம்பர் 14) நாங்க மிகப் பெரிய விபத்தில் சிக்கி, இன்று உயிருடன் இருப்பதே பெரிய விஷயம். என்னைப் பொருத்தவரை மறுஜென்மம் என்பதில் நம்பிக்கை இல்லை. ஆனால் நான் இன்று வாழ்வதே மறு ஜென்ம வாழ்க்கைதான். நான் உயிரோடு இருக்க மாட்டேனென டாக்டரில் இருந்து அனைவரும் முடிவு செய்து விட்டனர். என்ன அற்புதமோ, காதில் இருந்து இரத்தம் வந்தும் கூட இன்று நான் உங்களுடன் இருக்கிறேன். அப்ப ஏற்பட்ட ஏகப்பட்ட இரத்த இழப்புக்கிடையேயும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து உட்காரக்கூட முடியாத நிலையில், படுத்த படுக்கையாய் இருந்த அவரையும் கவனித்து, சமையல், வீட்டுவேலை, ஆபீஸ், பள்ளி இறுதி படிக்கும் பையனின் படிப்பு, காலேஜில் இறுதி வருடம் படிக்கும் பெண்(அவளுக்கும் அடி) என யாருடைய உதவியும் இன்றி எல்லாவற்றையும் நானே பார்த்தது, விபத்தில் ஏற்பட அதிர்ச்சி எல்லாமாக சேர்ந்து மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்த என்னை மாற்ற என் கணவர் தேடிக் கண்டுபிடித்த வழிதான் அறுசுவை. உனக்கு பிடித்த சமையல் தளம், போய்ப் பார், கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பாய் என்று சொல்லி அறுசுவையை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு நான் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்த போதும், நீ செய்யும் இந்த குறிப்பை கொடுத்தாயா என கேட்டு, கேட்டு என்னை உற்சாகப்படுத்தியதும், எனக்கு வேண்டிய மென்பொருளை நிறுவிக் கொடுத்தும் எனக்கு பின்னால் இருந்தது முழுக்க அவர்தான். அதனால் எனக்கு கிடைத்த அத்தனை பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் என் கணவருக்கே சமர்ப்பிக்கிறேன்.

அடுத்து நான் அனுப்பிய குறிப்பை ஏற்று, எனக்கும் குறிப்புகள் கொடுக்க வாய்ப்பளித்த அட்மின் அவர்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக முதல் குறிப்பு கொடுத்த போதே உன் குறிப்பு நல்லாயில்லை, போ என தூக்கி எறிந்திருந்தால் நான் எங்கோ போயிருப்பேன். அப்படியின்றி என் குறிப்புகளையும் பாராட்டி, ஏற்றுக்கொண்ட அறுசுவை தள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

எங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட விபத்தால் எவ்வளவோ பாதிப்புகள் ஏற்பட்டாலும் உண்மையான நண்பர்கள் யார், யார் நடித்தார்கள் என்றும், சொந்த, பந்தமே எங்களுக்கு இல்லை என்பதையும் புரிய வைத்தது விபத்து. இன்று உலகம் முழுவதும் எங்கெங்கோ இருக்கும் இத்தனை சகோதரிகளும், அறுசுவையும் எனக்கு அறிமுகமாகக் காரணமாக இருந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கும் ஒரு வகையில் நன்றி சொல்ல வேண்டும்.

மன்னிக்கவும் சகோதரிகளே! விபத்து ஏற்பட்டு ஒரு வருடம் முடியும் இவ்வேளையில் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் எனக்குள் ஏற்படுத்திய நினைவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததன் விளைவே இது.

சந்தோஷக் கண்ணீருடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள சோலை அவர்களுக்கு,
என் குறிப்புகளை நீங்கள் சமைத்ததது குறித்து மிக்க சந்தோஷம். உங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா,
எங்களை உங்கள் சகோதரிகளாக நினைத்து உங்கள் நினைவலைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. விபத்திலிருந்து மீண்டு வந்ததற்கு அந்த ஆண்டவனுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எங்களுக்கு இவ்வளவு குறிப்புகள் கிடைத்ததற்கு காரணகர்த்தாவான உங்கள் கணவருக்கு எங்கள் நன்றிகள். என் வீட்டில் நீங்க ரொம்ப ஃபேமஸ். இன்று என்ன சமையல் என்று கணவர் கேட்டால், செல்வி அக்காவின் குறிப்பு என்று ஒரே வரியில் சொல்லிவிடுவேன். அந்த அளவுக்கு நீங்க ஃபேமஸ்.

உங்கள் டயட் குறிப்புகளை எங்களுக்கு படிப்பதற்கே ஒரு நாள் போதவில்லை. அப்படியென்றால் அதை தயாரித்து, அதை டைப் செய்து வெளியிட நீங்கள் எவ்வளவு உழைத்திருப்பீர்கள்!! அதுவும் வேலைக்கும் சென்றுகொண்டு. அக்கா யூ ஆர் க்ரேட். நீங்கள்தான் என்னைப்போன்றோருக்கு கிரியா ஊக்கி. நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

செல்விக்கா, இப்போது தான் உங்க சுரைக்காய் பால் கறி செய்து முடித்தேன், நன்றாக வந்தது. உங்கள் அனுபவங்களை படித்ததும் மிகவும் கஷ்டமாகவும் இவ்வளவு தூரம் கடந்து விட்டதனால் மிகவும் மகிழ்சியாகவும் உள்ளது. உங்கள் கணவருக்கு என் நன்றிகள். நீங்கள் எங்களுக்கு ஒரு ரோல் மாடல் என்பதில் சந்தேகமில்லை!

மாலினி

அன்புள்ள செல்வி

உங்கள் அனுபவம் எங்களுக்கும் படிப்பினை கிடைத்திருக்கு.வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வாழ் உடனே துவண்டு போவார்கள்.

அதை நீங்கள் தன்நம்பிக்கையுடன் அதிலிருந்து வெளியே வந்து அனைத்தும் சமாளித்திருகின்றீர்கள்.உங்களுக்கும் உங்களை ஊக்குவித்த கணவருக்கும் எங்களது நன்றிகள் ,பாராட்டுக்கள்.

உங்களை போன்ற தைரியமும் தன்நம்பிக்கையும் எங்களுக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டத்துக்கு மிகவும் நன்றி

அன்புடன் பர்வீன்.

விபத்திலிருந்து மீட்டு உங்களை எங்களுக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் துவண்டு போயிருந்த போது உங்களை ஊக்குவித்த உங்கள் கணவருக்கு நன்றி. வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது தான் எல்லோரையும் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. நிஜமாகவே உங்கள் பதிவை படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது.

ஜானகி

மேலும் சில பதிவுகள்