வாழ்த்துக்கள் திருமதி.செந்தமிழ் செல்வி

அன்புள்ள செல்வி உங்கள் குறிப்புகள் மிகவும் எளிமையானதாகவும் ,டயட் போன்ற பயனுள்ள குறிப்புகளும்,உங்கள் குறிப்புகளின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் உங்கள் குணமும் சுறுசுறுப்பும் என்னை கவர்ந்தவிஷயங்கள்.முண்ணூறூ குறிப்புகள் கொடுத்து இமாலய சாதனை படைத்த உங்கள் பணி மேலும் தொடர மனதார வாழ்த்துகிறோம்

அன்புடன் பர்வீன்.

எந்த ஒரு மனக்கவலை வந்தாலும் ங்களை மனசுக்குள் ஒரு முறை நெனச்சுட்டா எல்லா கவலையும் லேசாயிடும்...எதற்கும் அன்பான ஆலோசனை...உங்களுக்கு குடும்பத்தில் யாருடைய உதவியும் கிடைக்காட்டியும் எங்களுக்கு குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலத்தான் நீங்க...ரோஸ் கேட்ட உழுந்து கேள்விக்கு முன்னொறு முறை பதில் சொன்னீங்களே" உழுந்து விக்கிர விலைக்கு அதை வீனாக்க வேண்டாம் உழுந்து கஞ்சி தயாரிக்கலாம்னு" அதை எப்பவும் யோசிப்பேன்...அம்மால்லாம் சொல்லித் தர மாதிரி யான யதார்த்தமான உங்க பே ச்சை காலம் பூறா கூட இருந்து கேக்கும் பாகியத்தை கிடைக்க உங்க பிள்ளைகளும் ,கனவரும் கொடுத்து வெச்சவங்க தான்...சுறுசுறுப்புக்கு உங்களை வெல்ல யாரும் இல்லை..இங்க உடம்பு நல்ல கல் மாதிரி இருந்தே சோம்பேரித்தனம்..உடம்பு சரியில்லாமலும் நீங்கள் அனுப்பும் குறிப்பும்..கைவேலைபாடுகளும் என்னையும் உஷாராக்கும்....இன்னும் 300 என்ன 3000 குறிப்பு கொடுப்பீன்க..அதற்கு இறைவன் துனைபுரியட்டும் என்று ப்ராத்திக்கிரேன்

தளிகா:-)

செல்வி மேடம்,
வாழ்த்துக்கள். நான் உங்கள் உர்ருக்கு ரொம்ப பக்கம்தான் (ஆனா இப்ப ரொம்ப துரத்தில் இருக்கேன்). அதனால் என்ன பில் கேட்ஸ் க்கு முதல் தேங்க்ஸ் அண்ட் அட்மின் சார் பாபு அவர்களுக்கு இரண்டாவது தேங்க்ஸ்.
உங்கள் குறிப்புக்கள் அனைத்தும் எளிமை + சுவை இனிமை. என்ன ரொம்ப அவசர அவசரமா பிரிண்ட் எடுத்துட்டுபோய் சமைப்பேன்.

Sorry madam i will continue in english. Though i am good at tamil typing, i dont have enough time to type. since, i am littlebit busy with my thesis work. I have to submit my thesis on november 19th. After that i would communicate with you through arusuvai, e-mail or by both.
(mpt in my name denoted my native place mangalampet in vridhachalam tk).

(PS: To thalika madam also. please dont mistake me thalika madam. i will write to you soon. I never miss your writings in arusuvai. But i disappointed, since no response for that thread about twins. on hebalf of my sister i am asked that. Y especially from you means i know your interest in medical area.)
(PS ii: Admin sir, please give exemption for this thanlish pathivu.)

இப்படிக்கு
இந்திரா

indira

உங்கள் பதிவை படித்து ஆடி போய் விட்டேன். சரியாக ஒரு வருடம் முன்னால் விபத்து நடந்ததா? நினைத்தே பார்க்க முடியவில்லை. எப்படி அக்கா சமாளித்தீர்கள்? Strong will என்று சொல்வார்களே அதுதான் காரணமா? உங்கள் அன்பு கணவரும் முக்கிய காரணம் இல்லையா?

Well done அக்கா! You certainly are a role model to lot of women like me! உங்கள் குடும்ப மகிழ்ச்சிக்கு என் பிரார்த்தனைகள்.

அன்புடன்
உமா

சாரிம்மா, 2, 3 நாட்களாக விபத்து ஏற்பட்டு ஒரு வருடம் முடியும் நிலையில் ரொம்பவும் டிப்ரஸ்டு ஆக இருந்ததில் இந்த பதிவுகளை நான் கவனிக்கவே இல்லை. உங்களின் இந்த அன்புக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அந்த அளவுக்கு எனக்கு தகுதிகள் இருப்பதாக தெரியவில்லை. எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லத்தான் எனக்கு ஆசை, ஆனால் நேரத்தை எங்கே கடன் வாங்குவது என்றுதான் தெரியவில்லை. உங்களுக்கெல்லாம் கிரியா ஊக்கியாக நான் இருந்தால் அது எனக்கு சந்தோஷமே. உங்களின் அன்புக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி பர்வீன்,
உங்கள் பாராட்டுக்கு நன்றி. மனமிருந்தால் மார்க்கம் உண்டு. கண்டிப்பாக நீங்கள் நினைப்பதே உங்களுக்கும் தைரியுமும், தன்னம்பிக்கையும் வரும். நானும் ஆரம்பத்தில் கோழைதான்.
போகப் போக வாழ்க்கை அனுபவங்கள்தான் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது.
இன்னும் சொல்லப் போனால் இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டாவது மிகப் பெரிய அடி. முதலில் ஏற்பட்ட அடியில் இருந்து நான் மீண்டது தான் பெரிய விஷயம். அது என்னவென்று சொல்ல விரும்பவில்லை. அந்த அனுபவமே விபத்து நேரத்தில் என்னை துணிந்து செயல் புரிய உதவியது என நினைக்கிறேன்.

என் கணவர் கூட சொல்வார், ஒரு ஆணான நானே அடிபட்டவுடன் செயலற்றுப் போனேன். நீ எப்படித்தான் அப்படி துணிச்சலாக காரியம் செய்தாயோ என்று. ஆனால் இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சரியம் நான் எப்படி அப்படி காரியம் செய்தேன் என்று.

ஆக்ஸிடெண்ட் ஆன அடுத்த செகண்ட் நான் தலைதூக்கி பார்க்க, காதிலிருந்து கொடகொடன்னு இரத்தம் கொட்டுது. அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு நாம பிழைக்க மாட்டோம்னு. கடவுளே நான் கஷ்டப்பட்ட போதெல்லாம் என்ன உயிரோட விட்டிட்டு, நான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் போது என் உயிரை எடுக்கிறியேன்னு மனசுக்குள்ளே நினைச்சாலும் ஐயோ அவரும், பொண்ணும் என்ன ஆனாங்களோன்னு பார்த்தா, பக்கத்தில இருந்த என் பொண்ண காணோம். பதறியடிச்சு தேடினா முன்னாடி டிரைவர் சீட்டுக்கு அடியில கிடக்கறா. கஷ்டப்பட்டு அவளைத் தூக்கி சீட் மேலே போட்டு மூச்சு இருக்கான்னு பார்த்து, மூச்சு இருக்கு, மயக்கம் தான்னு தெரிஞ்சதும், முன்னாடி இருந்த அவரைப் பார்த்தா பானெட் நசுங்கி உள்ளே வந்ததில் பின்னாடி சீட்டும் அவரை அழுத்தியதில் மடங்கிப் போய் கிடந்தார். என்னால் இயன்ற வரை சீட்டை பின்னாடி இழுத்ததில் கொஞ்சம் நிமிர அவரால் முடிந்தது. அதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து கார் கதவை கடப்பாரையால் ஒடைச்சு அவரை வெளியே தூக்கினாங்க.

ஒருபக்கம் மயங்கி கிடக்கிற பொண்ணு, இன்னொருபக்கம் வலியால கண்ணைக்கூட திறக்க மாட்டேன்னு அவர் கிடக்கிறார். கடவுளே இவங்களையெல்லாம் பத்திரம்மா என்னோட பெரிய பொண்ணு கிட்ட சேர்க்கற வரையாவது என்னை உயிரோடு விட்டு வைன்னு வேண்டிகிட்டு, மூச்சு விட கஷ்டப்பட்டுகிட்டு இருந்த பொண்ண ஓங்கி ஒரு அறை விட்டேன். அந்த அதிர்ச்சியில அவ ஒழுங்கா மூச்சு விட ஆரம்பிச்சா, கொடுத்த பாலையும் முழுங்கினா. அப்படியே அவள விட்டு, அவர் பக்கம் போய் அவர்கிட்ட என்னோட இரத்தத்தையே காண்பிக்காம (பார்த்தா ரொம்ப பயந்துடுவார்) ஒண்ணுமில்ல, பயப்படாதீங்க, கால்தான் ஃபிராக்ஸர் போலன்னு சொல்லி தேத்திட்டு அவரோட ஃபிரண்டுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னதும், அவர் முதலுதவி மட்டும் எடுத்துகிட்டு முடிஞ்சவரை இங்கே வந்துடுங்கன்னு சொன்னார். பொண்ணுக்கு போன் செய்து பயப்படாதே, ரொம்ப ஒண்ணும் இல்ல. நாங்க எப்படியும் பாண்டிச்சேரி வந்துடறோம். நீ அங்க வந்து தம்பியுடன் இரு, அவன்கிட்ட எதுவும் சொல்லாதேன்னு சொல்லிட்டு இருக்கும் போதே அங்கே இருந்தவங்க (இந்த காலத்தில், நல்ல மனுஷங்க இன்னும் இருக்காங்க) சாரோட கையில இருக்கிற வாட்ச், ப்ரேஸ்லெட், மோதிரங்கள் எல்லாத்தையும் கழட்டிடுங்க. இங்க (ஆத்தூர்) கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில எல்லாம் காணாமப் போயிடும்னாங்க.

அதெல்லாம் கழட்டி பேக்கில போட்டுட்டு (ஏற்கனவே கையில ஐம்பதாயிரம் பணம் வேறு) திரும்ப ஆம்புலன்ஸ் வர, ரெண்டு பேரையும் மத்தவங்க உதவியோட தூக்கி ஆம்புலன்ஸில் படுக்க வைத்து ஆஸ்பத்திரி வந்தால், அந்த ஊர் கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதி கூட இல்லை ( இந்தியா ! ). இருந்த டாக்டர் அவங்க ரெண்டு பேருக்கும் முதலுதவி (?!) கொடுத்துட்டு, எனக்கு அந்தம்மா பிழைக்காது, போகச் சொல்லுன்னு, தாடையில் வெட்டிய காயத்திற்கு ஒரு தையல் கூட போட மறுத்துட்டார். எல்லோருக்கும் ரொம்ப அடி. நீங்க பக்கத்துல இருக்கிற பெரிய ஊருக்கு போங்கன்னு அவரை ஆம்புலன்ஸில ஏத்திட்டாங்க. நான் முடியவே முடியாது, எங்க ஊருக்கே போறோம்னு சொன்னதுக்கு அப்ப எங்க ஆம்புலன்ஸ் எல்லாம் தரமுடியாது, நீ வேறே என்னமோ பண்ணிக்கோங்கன்னுட்டார். அந்த ஊர் பையன் ஒருத்தர் அவரோட பணத்தைக் கட்டி பிரைவேட் ஆம்புலன்ஸ் ஏற்பாடு பண்ணிக் கொடுக்க, அந்த ஆம்புலென்ஸ் டிரைவரும் ஸ்டேட் எல்லை தாண்ட மாட்டேன்னு சொல்ல, நாங்க போன கார் டிரைவர் கிட்ட சொல்லி, இங்கிருந்து ஒரு வண்டி அனுப்ப ஏற்பாடு செய்து, இரண்டும் பாதி வழியில் பார்த்து அதிலிருந்து இந்த வண்டிக்கு மாறி ஒரு வழியாக இந்த ஊர் ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தோம்.

வந்து பொண்ண பார்த்ததும் நான் சொன்ன வார்த்தைகள் பத்திரமா ரெண்டு பேரையும் கொண்டு வந்து சேர்த்திட்டேன். நான் இருக்க மாட்டேன்னு நினைக்கிறேன், எல்லாரையும் பார்த்துக்கொள்வது உன் பொறுப்பு என்றுதான்.

அதற்குள் என்னை எமர்ஜென்சி வார்டுக்கு கொண்டு போய் அவங்களையெல்லாம் விட இவங்கதான் சீரியஸ்னு சொல்லி எல்லா டெஸ்டும் எடுத்துட்டு நலைந்து மணி நேரம் கழிச்சு பயப்பட வேண்டாம், சரி பண்ணிடலாம்னு சொல்லியிருக்காங்க, அது வரையிலும் எல்லாரும் பயந்துகிட்டே இருந்திருக்காங்க.

அதற்கப்பறம் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவுன்னு கண்டு பிடிச்சு, அறுவை சிகிச்சை பண்ணும் நிலையில் இல்லைன்னு கன்சர்வேட்டிவ் மேனேஜ்மெண்ட் முறையில்தான் சரியாக்க வேண்டுமென சொல்லி ஒரு மாதம் ஆஸ்பெட்டலில் தான். எனக்கு கன்னத்து எலும்பு ஃபிராக்ஸர்னு கண்டு, சாப்பிட கூட வாய் திறக்க முடியாம பட்ட கஷ்டங்களும், அதற்கப்பறம் பிசியோதெரபிக்காக பட்ட கஷ்டங்களும், அவரை நான்கு மாதங்கள் படுக்கையில் வைத்து கவனித்ததும் தனிக் கதை.

இப்ப நான்கைந்து நாட்களாகத்தான் அவரால் கீழே உட்காரவே முடிகிறது.

மன்னிக்கவும், மனசுக்குள்ளேயே இருப்பதை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்ததை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது. சொல்லி விட்டேன்.

உங்களையெல்லாம் கஷ்டப்பட வைக்க வேண்டும் என்றில்லை. கஷ்ட நேரத்தில் கொஞ்சம் சமாளித்தால் போதும், தன்னாலே தைரியம் வந்து விடும் என்பதைச் சொல்லத்தான்.

இவ்வளவு அருமையான சகோதரிகளையும், தோழிகளையும் கொடுத்த அறுசுவைக்கும், அன்பு தம்பி பாபுவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் ரூபி,
உங்க குடும்பத்தில நானும் ஒருத்தின்னு சொன்னதே போதும். எனக்காக இவ்வளவு பேர் இருக்காங்கன்னு சந்தோஷமா இருக்கு. என்னோட டிப்ரஷனெல்லாம் எங்கேயோ போயிடிச்சு, தேங்க்ஸ் ரூபி. எப்பயோ நீ கேட்ட, ஆக்ஸிடெண்ட் எப்படியாச்சுன்னு, அதுக்கு பதில் இப்ப மேலே.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் ஜானகி,
நீ சொன்னது ரொம்ப கரெக்ட், வாழ்க்கையில் கஷ்டம் வரும் போதுதான் எல்லாரையும் புரிந்து கொள்ள முடிகிறது. நான் உனக்காகவும் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டுள்ளேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு இந்திரா,
வாழ்த்துக்கு நன்றிம்மா, ஊருக்கு ரொம்ப பக்கம்னா கண்டிப்பா இங்க வரும் போது வீட்டிற்கு வரவும். என்னோட அபிமானிய பார்க்க எனக்கு ரொம்ப ஆவலா இருக்கு. உன்னோட தீசிஸ் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இவ்வளவு வேதனையான சூழ்நிலையிலும் 300க்கு மேற்பட்ட குறிப்புகள் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் திருமதி செந்தமிழ் செல்வி அவர்களே

ஹலோ செல்வி எப்படி இருக்க? இன்னாப்பா இப்படியெல்லாம் பயம்காட்டுர, உனக்கும் உன் குடும்பத்தாரருக்கும் வாகன விபத்தால் ஏற்பட்ட அனுபவத்தை படிக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. நீங்கள் வணங்கும் கடவுள் தான் உங்கள் எல்லோரையும் காப்பாற்றியிருக்கனும். எங்களுக்கும் இது போன்ற வாகன விபத்தின் அனுபவம் இந்தியாவில் ஒரு முறை கேரளாவிற்கு பயணித்த போது இருந்திருக்கின்றது. ஆனால் இவ்வளவு சீரியஸ் இல்லை.நீ கூறியுருப்பதுப் போல் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப தைரியம் தானாக வந்துவிடும் என்பது தான் உண்மை, என்னைப் பொருத்தவரையில் அதை தான் கடவுள் என்று சொல்லுவேன். சரி போகட்டும் விடு நடந்ததையே நினைத்து கவலைப் படுவதை விட்டுவிட்டு இனி நடப்பதை மட்டும் யோசி சரியா? எப்போதும் போல தைரியமா இருப்பா. நா மறுபடியும் உன்கிட்ட பிறகு பேசுகின்றேன்.

மேலும் சில பதிவுகள்