வாழ்த்துக்கள் திருமதி.செந்தமிழ் செல்வி

அன்புள்ள செல்வி உங்கள் குறிப்புகள் மிகவும் எளிமையானதாகவும் ,டயட் போன்ற பயனுள்ள குறிப்புகளும்,உங்கள் குறிப்புகளின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் உங்கள் குணமும் சுறுசுறுப்பும் என்னை கவர்ந்தவிஷயங்கள்.முண்ணூறூ குறிப்புகள் கொடுத்து இமாலய சாதனை படைத்த உங்கள் பணி மேலும் தொடர மனதார வாழ்த்துகிறோம்

அன்புடன் பர்வீன்.

அன்புள்ள செல்வி

//போகப் போக வாழ்க்கை அனுபவங்கள்தான் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது//

நீங்கள் சொல்லியது உண்மை.என் வாழ்க்கைல வெளிநாட்டு வாழ்கைக்கு முன் இந்தியாவில் இருக்கும் போது ஒரு சின்ன விஷயத்துக்கு நான் அலரிஅடிச்சுருக்கேன்.இப்போ நினச்சாலும் சிரிப்பு வரும்.

வெளிநாட்டுக்கு பின் அதாவது இங்கு வந்த பின்பு எனக்கும் (உங்க அளவுக்கு சீரியஸ் கிடையாது)2விபத்து நடந்திச்சு.அப்பரம் சில விஷயங்கள்(சொல்ல விரும்பவில்லை)ஏற்பட்டுச்சு.எல்லாமே தைரியமா தாண்டிவந்தேன்.சொந்தங்கள் பொறாமை படும் அளவுக்கு இறைவன் எனக்கு தைரியத்தை கொடுத்திட்டான்.

இப்போ நினச்சுக்குவேன் நானா அதுன்னு ஆமா நானே தான் சூல்நிலை தைரியத்தை
தந்துவிடும்.ஒரு சிலர் என்னிடம்
சொல்லியிருக்காங்க.நானா இருந்தா என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னு ஆனால் அவங்களிடம் நான் சொல்வது அது அப்படி அல்ல அந்த சூல்நிலையில தைரியம் நிச்சையமா வரும் என்று.

சந்தர்பம் ,சூழ்நிலை ஏற்படும் பிரச்சனைகளை இதையெல்லாம் நான் சமாளித்துவிட்டாலும் ஒரு சில விஷயங்களில்....????காலம் எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உங்கள் வாழ்க்கை அனுபவம் படிக்கும் போது வலித்தாலும் உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆகனும்.

எனக்கு தைரியமான பென்கலை ரொம்ப பிடிக்கும்.

உங்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டததுக்கு நன்றி.

அன்புடன் பர்வீன்

அன்பு செந்தமிழ் செல்வி அவர்களுக்கு இப்போதான் இங்கு வரமுடிந்தது.தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும்.உங்கள் விபத்துபற்றிய விவரம் படித்து முதலில் மனது கஷ்டமானலும் அதில் உங்கள் தைரியம் என்னை ஆச்சரியப்படவைத்தது.நீங்கள் பலமுறை இதுபற்றி குறிப்பிட்டபோதும் விவரம் கேட்க தயக்கம்.இப்பொழுது எப்படி சுகம்?முழுவதும் நலமாகிவிட்டீர்களா?அந்த நேரத்தில் உங்கள் தைரியமான செயல்கள்தான் உங்கள் குடுப்பத்தினரை காப்பாற்ற உதவியிருக்கும்.

ஹாய் ரோஸ்,
நலமா? எங்கே அடிக்கடி காணாம போயிடுறீங்க? இப்பத்தான் முழுவதுமாக சரியாகி இருக்கோம். பிள்ளைகள் நலமா? மீண்டும் சந்திப்போம். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு தோழி மனோகரி,
நலமா? டைகர் எப்படியிருக்கான்? எல்லோருடைய வாழ்க்கையிலும் விபத்து வந்துதான் போயிருக்கு போலிருக்கு. இனி ந்டக்கப் போவதைப் பற்றி் மட்டுமே யோசிக்கப் போகிறேன். சரியா? எப்படியோ இப்ப நல்லாயிட்டோமே அதுவே போதும்.
எங்கே அடிக்கடி லீவு போட்டாகுது அறுசுவைக்கு? அட்டெணன்ஸ் அடிக்கடி ஆப்சண்ட் ஆகக கூடாது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

300 குறிப்புகள் என்ற சாதனைக்கு வாழ்த்துக்கள்.உங்கள் அனுபவத்தை வாசித்த போது பீனிக்ஸ் பறவையும்,எப்போதோ வாசித்த சாம்பல் மேட்டில் பூத்த சாதனை அலைகள் என்ற புத்தகமும் நினைவுக்கு வந்தது. உங்களிடம் கற்றுக் கொள்ள எவ்வளவோ உள்ளது. என்றும் நலமே வாழ பிரார்த்திக்கிறேன்

ஹலோ செல்வி நீ எப்படி இருக்க? இங்கு எல்லோரும் நலமே. ஆமா அறுசுவை கொண்டாட்டத்துக்கு ஏதோ விருந்தெல்லாம் தயார் செய்யப்போறீங்கலாமே. பாத்து எதுக்கும் இந்த பேதி மாத்திர, வவுத்துவலி மாத்திரையெல்லாம் ஹான்ட் பேக்கில் வெச்சிக்க இன்னா, உங்க தம்பிக்கும் தேவைப்படும்.எனக்கு என்னமோ தெரியல நேத்திலிருந்து ஒரே ஸ்டமக் பர்ன்னா இருக்கு, ஏதாவது ஒரு ஐடியா சொல்லேன்பா.

அன்பு சுகன்யா,
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சுகு,
நலமா? நீங்க சொன்னது சரியே. மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் நானும் பீனிக்ஸ் பறவையைத்தான் நினைத்துக் கொள்வேன். நான் ஒரு சாதாரணப் பெண்தான். நீங்கள் சொல்லும் அளவுக்கு எல்லாம் ஒன்றும் இல்லை. உங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வணக்கம் செல்வி மேடம் .முதலில் எனது வாழ்த்துக்கள். நான் தங்களின் குறிப்புக்களை படித்திருக்கிறேன். செய்தும் பார்த்திருக்கிறேன் நன்றாகவே வந்திருக்கின்றன. நன்றி. அத்துடன் தங்களின் அனுபவத்தை படித்து மிகவும் கவலையடைகிறேன். அத்துடன் உங்கள் தைரியத்தை மிகவும் பாராட்டுகிறேன். நீங்கள் மிக்க நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்புடன் அம்முலு

அச்சோ, ஸ்டமக் பர்ன் ரொம்ப டேஞ்ஜர். உடனே கவனிக்கணும். ஜெலுசில் சாப்பிடலாம், ஐஸ் வாட்டர் குடிக்கலாம். கோஸ் ஜூஸ் குடிக்கலாம். இது எதுக்குமே நிக்கலைன்னா உடனே ஃபிளைட் டிக்கெட் எடுத்துகிட்டு நேரா நாகப்பட்டினம் வந்தா சரியா போயிடும்:-)

என்னென்னவோ மாத்திரையெல்லாம் சரியாக்கவா, வரவழைக்கவா?

விருந்து தயார் செய்யப் போறதா பாபுவே முடிவு பண்ணிகிட்டா நான் சொல்லறது? என் வீட்டுக்காரர் வேறே அங்க வந்தும் உன்னோட சமையல் கொடுமைதான்னா நான் வரலைப்பாங்கறார்.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்