விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

என் பெண்ணுக்கு ஆறு வயது ஆகப்போகிற்து. அவளால் இன்னும் இதை நிறுத்த முடியவில்லை. நான் என்னென்ன செதேன் என்று சொல்கிரேன்,
மூன்று வயதாகும் போது, விரலில் வேப்பெண்ணை தடவினேன். 2,3 தடவை கஷ்டப்பட்டு சப்பி விட்டு திரும்பவும் விரல் சூப்பினாள்.
ஊற்காய் தடவினேன், அதுவும் பலனில்லை.
கைகளில் சக்ஸ் போட்டு கட்டி விட்டேன், அதையும் எடுத்து விடுவால்.
5 வயதில், இரண்டு விரல்களில் tape போட்டு விட்டேன், எப்படியாவது எடுத்து விடுவாள்.
எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவளல் கன்ட்ரோல் பண்ண முடியவில்லை.
பல் முன்புறம் நீண்டு வுள்ளது.
யாராவது ஏதேனும் idea சொல்லுங்களேன் please!!!

Malini

இத்ற்கு யாராவது பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்......

மாலினி

அன்புள்ள மாலினி,

என் குட்டி மகளிடமும் ( 1.5 yrs) எனக்கு இதே பிரச்சனை தான் நீங்கள் எழுதியிருந்த அனைத்தும் நானும் செய்து பார்த்திருக்கிறேன் ஆனால் ஒன்றும் பலன் தரவில்லை . நான் டாக்டரிடம் கூட கேட்டு பார்த்தேன் அவர் குழந்தை வளர வளர விவரம் தெரிந்துவிடும் பின்பு விரல் சூப்பும் பழக்கத்தை தானாக மறந்துவிடுவாள் என்றார். ஆனால் நீங்கள் சொன்னது போல் குழந்தைக்கு இப்பவே லேசாக பல் எத்தினது போல் இருக்கிறது அதை பார்க்க எனக்கும் மிக வருத்தமாக இருக்கிறது. குழந்தையை விரல் சூப்ப கூடாதுன்னு எப்பவும் அடிக்கவும் மனசு வரமாட்டிக்கிறது அப்படியே அடித்தாலும் ரொம்ப அடம் பிடிக்க ஆரம்பிக்குறா .இன்னொரு வருத்தம் என்னவென்றால் உறவுகாரர்கள் அவளை கிருத்திகா என்று அழைப்பதற்கு பதிலாக "கைச் சூம்பி" என்று கூப்பிடுவது தான்.நம்ம அறுசுவை சகோதரிகளிடம் இருந்து நமக்கு கண்டிப்பா ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.

குழந்தைதை கருவரைக் குள்ளிருந்தே விரலை சூப்பத் தொடங்கும்..அது வளர்ந்து வரும்பொழுதும் அதே பழக்கம் இருந்தால் ஒரு 6 மாதம் வரை பரவாயில்லை..அதற்கு மேல் மெல்ல அதனை மாற்ற முயர்ச்சித்தால் தான் பின்னளில் ரொம்ம்ப கஷ்டபட வேன்டாம்....விரல் சூபும் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளை விட கொஞ்சம் சமத்தா இருக்கும்..அவங்களுக்கு சூப்புரதில் ஒரு நிம்மதி,சபோர்ட் கிடைக்கிர மாதிரி ஒரு உணர்வு,சந்தோஷம்..
பொதுவாக வளர்ந்த குழந்தைகள் சப்புவது அவர்களுக்கு இனி விளையாட எதுவும் இல்லை,,செய்ய எதுவும் இல்லை,யாரும் கூட விளையாட கவனிக்க இல்லை என்ற நேரத்தில் தான்....விரல் சூப்பும் குழந்தைகளின் பழக்கத்தை நிறுத்த ஓரளவு தான் கைய்யில் கசப்பாய் எதையாவது தேய்த்து நிறுத்தும் முறை உதவும்...
நாம் நல்ல கஷ்டப்பட்டால் தான் அந்த பழக்கத்தை \விட =முடியும்....சின்ன வயசில் சூப்பிக் கொன்டே அது பாட்டுக்கு விளையாடுவதைப் பார்த்து நாமும் சந்தோஷமாக இருப்போம்...
முதலில் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கியோ அல்லது பல் முன்னே வந்த படங்களை கான்பித்தும் அழகான பல் வரைசை உள்ள குழந்தைகளின் படங்களை கான்பித்தும் சொல்லிப் புரியவைக்கலாம்....கைய்யை சூப்புவதால் தான் இப்படி என்று சொல்லிப் புரியவைக்கவும்...கை சூப்பாமல் இருந்தால் என்னெவெல்லாம் அவர்களுக்கு பரிசு கொடுக்கமுடியோ எப்படி எல்லாம் என்கரேஜ் பன்ன முஇட்யுமோ அது போல செய்து பாருங்கள்
கை சூப்பும்போது திட்டாமல் தன்டிக்காமல் சிரித்துக் கொன்டே அது கெட்ட பழக்கம் கைய்யை எடு என்று சொல்லவும்....அப்படியும் கேக்கா விட்டால் ரெண்டு கைய்யையும் உபய்Pகித்து விளையாடும் படியாக வேலைகளை கொடுத்துக் கொன்டே இருக்கவும்.
பெயின்ட்,க்லே,பீட்ஸ் என பலதும் வாங்கி ரெண்டு கைய்யாலும் விளையாடும் படி சூப்பும்போதெல்லாம் செய்யவும்..கொஞ்சம் கொஞ்சமாக அது அந்த பழக்கத்தை விடத் தொடங்கும்.என்ன செய்தும் பலனில்லாவிட்டால் கன்டிப்பாக ஒரு நல்ல பல் மருத்துவரை அனுகவும்...மருத்துவரின் ஆலோசனையை கேட்டும் குழந்தை தானாக மாறலாம்..அல்லது அவரது ஆலோசனையின் படி அந்த பழக்கத்தை மாற்ற நமக்கு நிறைய டிப்ஸ் கிடைக்கும்....
கொஞ்சம் சிரமம் பார்க்காமல் கொஞ்ச நாள் வேறு வேலை எதுவும் செய்யாவிட்டாலும் குழந்தையுடனேயே முழு நாளும் இருந்து விளையான்டு கொன்டே சூப்ப விடாமல் செய்தால் சீக்கிரத்தில் அது பழ்க்கத்தை விட்டு விடும்.:-)

குழந்தைகள் தூங்கும் போது மட்டும் விரல் சூப்பும் போது என்ன செய்வது?

நன்றி தலிகா, நீங்கள் கூறியவற்றை எல்லாம் செய்து பார்த்தேன், பல் முன் துருத்திய படங்கள் பார்த்தால் '' நான் braces போட்டுக்கொள்கிறேன் என்கிராள். என்னத்த சொல்றது! ஒரு நாள் முழுவதும் கைசூப்பாமல் இருந்தால் ஒரு பரிசு கொடுப்பேன் என்றேன், ஒரே ஒரு நாள் தான் அவளால் முடிந்தது. அவ்ளுடய டென்டிச்டிடம் கேட்டதற்கு நீங்கள் சொன்னதையே தான் சொன்னார்.அப்புறம் thumb guard பற்றி சொன்னார்.ஆனால் அது பலனளிப்பது சந்தேகம் என்று சொன்னார்.
யுவா,RSMV நீங்களும் இந்த site போய் பாருங்கள்.
http://www.thumbguard.net/english/ourproduct.asp யுவா, நீங்கள் குழ்ந்தையை அடிக்காதீர்கள், அது எத்ர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்!

மாலினி

நலமா?? ரீமா பாப்பா நலமா? தங்களின் விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி. உங்களிடம் இருந்து கண்டிப்பாக பதில் வரும் என்று எதிர்பார்த்தேன் . நம் இருவரின் குழந்தைக்கும் ஒரே வயது தான் ஆனால் என் குட்டி பாப்பாக்கு சாப்பாடே பிடிக்காது நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு பற்றி படித்தேன் என் குழந்தைக்கும் அதே போல் சில உணவை செய்து கொடுத்தேன் கொஞ்சம் சாப்பிட்டால். நான் வேலைக்கு செல்வதால் முழு நேரமும் குழந்தையிடம் செலவிட முடியவில்லை. நீங்கள் சொன்னதை செய்து பார்க்கிறேன்.

யுவா

மாலினி,

பார்த்தேன் பல புதுமையான விஷயங்களை படித்தேன். பல் மருத்திவரிடம் இதை பற்றி கேட்டு பார்க்கிறேன். அய்யோ, குட்டி பாப்பாவை எனக்கு அடிக்க மனசு வராது.மிக்க நன்றி.

யுவா

விறல் சூப்பும் குழந்தைக்கு
டியர் கலா மாலினி நேற்று இந்த பகுதியில் என்னால் நுழைய முடியவிலை. வேறு எங்கோ பதில் கொடுத்துள்ளேன்.
என் பையன்கள் இர்வரும் விறல் சூப்புவார்கள்.
போக போக சையாகிவிடும்.
1. கையில் வேப்பிலையை அரைத்து பூசுங்கள்.
2. பகற்காயை தொப்பி போல் போட்டுவிடுங்கள்.
3. இரண்டு விறலையும் சேர்த்து கட்டிவிடுங்கள்.
4. இரண்டு கையையும் சேர்த்து பிண்ணாடி கட்டிவிடுங்கள்.
5.னைட் தூங்கும் போது ஏதாவது பாட்டு போடவிட்டு கை தட்ட வையுங்கள் அப்படியே மறந்து துங்கிவிடுவார்கள்.
6. இல்லை கையில் குட்டி,குட்டி காரை கொடுத்து தலையணை மீது ஓட்ட சொல்லுங்கள்.

7. மருதானி பூசிவிடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

என்ன ஆளையே கானலை?பாப்பாவோட நேரம் செலவிடவே சரியா இருக்கா?என் ஆன்டியின் பேரக்குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் 1 வயதில் தொடங்கி மூன்று வயதாகும்போது டாக்டர் இந்த அட்வைச் சொன்னார்..அம்மாவுக்கு எவ்வளவு நேரத்தை குழந்தையுடன் செல்விட முடியுதோ அவ்வளவு சீக்கிரம் குழந்தை இந்த பழக்கத்தை கைவிடும்னு சொல்லி அவங்க ஊருக்கு போய் 3 மாசம் கூட இருந்து முயர்சித்ததில் அது பழக்கத்தையே விட்டுவிட்டது..அதனால் மனசு தளராமல் முயற்ச்ச்சி செய்யுங்கள்..மாலினி உங்க பொண்ணு சரி ஆளு தான்ம் போங்க..எனக்கு சிரிப்பா வருது நான் ப்ரேசெச் போடுக்கரேனு சொன்னது நெனச்சு:-)இன்னக்கி பிள்ளைக செம்ம விவரமாஅ இருக்காங்கப்ப
யுவா என் பொன்னு கடந்த ரெண்டு வாரம் எதுவும் சாப்பிடல...என்ன பன்னி கொடுத்தும் சாப்பிடல..அப்ரம் 2 நாள் முன்ன நான் அவளை ஹை சேரில் உக்கார வெச்சு ஒரு பெரிய பவுளில் சாதமும்,மீனும், கொஞ்சம் குழம்பும் போட்டு மேஷ் செய்ததை ரெண்டு ஸ்பூன் போட்டு அவ முன்னாடி வெச்சு..ஒரு ஸ்பூனில் அவ கிளறிட்டே இருக்க நான் இன்னொரு ஸ்பூனில் ஊட்டி விட கிளறும் இன்டெரெஸ்டில் வாயை திறந்து தன்னை அறியாம சாப்பிட்டா...இப்ப 2 நாளாஅ இப்படி தான் கொடுக்கரேன்..ட்ரை பன்னி பாருங்க...சில ச்மயம் ராகியை நல்ல கெட்டியாக நெய் விட்டு காய்ச்cஆஹி ஆற விட்டால் செட் ஆகிவிடும் .. அதை குட்டி குட்டி துண்டா வெட்டி
குழந்தையில் கைய்யில் வைத்து நாமும் ஒன்று வைத்து நாம் சாப்பிட அதுவும் நம்மை போல சாப்பிடும்(எப்படியெல்லாம் கஷ்டபட வேண்டியாதா இருக்கு பாரு).. அப்படி சில மூடில் சாப்ப்பிடுவா..ட்ரை பன்னி பாருங்க.

தளிகா:-)

தளிகா எப்படி இருகீங்க பேசவே முடியவில்லை. உங்கள் குழந்தை எப்படி இருக்கிறாள்.
இன்று என் சமையல் தேங்காய் பால் சோறு, சீலா மீன் சால்னா, மீன் பிரை, பிளெயின் தால். எல்லா வேலையும் முட்ந்தது.
மதியம் போய் மீன் மட்டு சூடாக பொரித்து சாப்பிடனும்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்