வாழைக்காய் மிளகு பொரியல்

தேதி: November 12, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - ஒன்று
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வாழைக்காயை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவிடவும்.
தேங்காய், மிளகு, பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாழைக்காய் வெந்த பின் தண்ணீரை வடித்து பின் குளிர்ந்த தண்ணீரில் ஒரு முறை அலசிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை வெந்த வாழைக்காய், அரைத்த விழுது, உப்பு போட்டு நன்றாக கிளறி மிதமான தீயில் வைக்கவும்.
வாழைக்காய் நன்கு முறுகும் வரை வைத்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்