மிளகு தோசை

தேதி: November 12, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
கருப்பு உளுந்து - கால் கப்
மிளகு - 1 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
மிகப்பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3/4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - சுடுவதற்கு
உப்பு - தேவையான அளவு


 

புழுங்கலரிசி, பச்சரிசி இரண்டையும் கழுவி ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை கழுவி தனியே ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் உளுந்தை போட்டு அரைக்கவும். உளுந்து பாதி அரைந்ததும் அரிசியை போட்டு அரைக்கவும். அவை அரைந்ததும் உப்பு போட்டு கலக்கவும்.
3 மணி நேரம் கழித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், பொடித்த மிளகு, கறிவேப்பிலை சிறிதளவு எண்ணெய் விட்டு நன்றாக கலக்கவும்.
தோசைக்கல் சூடான பின் 1 1/2 கரண்டி மாவெடுத்து மெல்லியதாக இடவும். தோசையை சுற்றி அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெந்த பின் திருப்பிப் போட்டு சுடவும்.


மாவு அரைத்த உடனேயே தோசை சுடலாம். மிளகை லேசாக நுணுக்கி போடவும். இதற்கு தேங்காய் சட்னி, கறிவேப்பிலை சட்னி நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் லக்ஷமி,உங்க மிளகு தோசை தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருந்தது.நன்றி லக்ஷமி.

அன்புடன்
நித்திலா