கறிச்சுண்டைக்காய் கோலா

தேதி: November 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறிச்சுண்டைக்காய் - 200 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
பச்சைமிளகாய் - 2 நம்பர்
அரைக்க:
தேங்காய் - 3 சில்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க;
கடுகு, ஊளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பட்டை, இலவங்கம் - சிறிதளவு
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித்தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

ஒரு கடாயில் கடலைப்பருப்பை கழுவி ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும்.
வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, ஊளுத்தம் பருப்பு, பட்டை, இலவங்கம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை வதக்கி, சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி சேர்த்து வதக்கவேண்டும்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு போட்டு வதக்கி, ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவிடவேண்டும்.
பிறகு கடலைப்பருப்பைச்சேர்த்து, அரைத்தவற்றையும் சேர்த்து கிளறி, தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும்.


சுண்டைக்காயில் 2 வகை உண்டு. வற்றல் சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய்.

மேலும் சில குறிப்புகள்