தேதி: November 14, 2007
பரிமாறும் அளவு: 2 குழந்தைக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஆட்டு கால் - நான்கு துண்டு
வெங்காயம் - அரை பாகம்
தக்காளி - அரை பாகம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
முழு சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
தேங்காய் பால் - கால் கப்
கொத்தமல்லி - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு பின்ச்
நெய் - ஒரு சொட்டு
காலை நல்ல தேய்த்து கழுவி அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் (தேங்காய் பால் தவிர) சேர்த்து குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து இருபது நிமிடம் வேகவிடவும்.
மூன்று விசில் வந்ததும் தீயை குறைத்து வைத்து வேகவிடவும்.
வெந்து இறக்கியதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு அதை பெரிய புளி வடிகட்டியில் வடித்து அதில் ஒரு சொட்டு நெய் சேர்த்து குழந்தைகளுக்கு சாதத்திலோ, இட்லி, தோசை, இடியாப்பத்திலோ பிசைந்து கொடுக்கவும்.
இல்லை குடிக்க வைக்க முடிந்தால் குடிக்கவைக்கவும்.
குழந்தைகளுக்கு நடக்க ஆரம்பிக்கும் போது இந்த கால் சூப் மற்றும் ஆட்டின் எலும்பு சூப் கொடுத்தால் நல்லது.
பல்லு உள்ள பிள்ளைகளாக இருந்தால் காலையும் சேர்த்து கொடுங்கள். குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் கூட இதை செய்து கொடுங்கள் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
Comments
Super soup..
Thanks romba nalla irundhathu..Chennaila hotela saapta same taste..En husband romba congratulate panaar..
ராணி கால் சூப்
ராணி கால் சூப் இது குழந்தைகளுக்காக கொடுத்தது,
கால் பாயா இரண்டு விதம் கொடுத்துள்ளேன்,செய்து பாருங்கள்.
இதில் தாளிப்பில்லை.
இது குழந்தைகளுக்கும் பிள்ளை பெற்றவர்களுக்கும் கொடுப்பது.
அதை செய்து பாருங்கள் இன்னும் டேஸ்டாக இருக்கும்.
ஜலீலா
Jaleelakamal