அறுசுவை.காம் எப்படி அறிமுகமானது

அன்பு சகோதிரிகளே வணக்கம்,

எல்லோருக்கும் அறுசுவை.காம் எப்படி தெரியவந்தது. இங்கே சொல்லுங்களே.... எனக்கு இங்கிருக்கும் தமிழ் மன்றத்திலிருந்து ஒரு மெயில் வந்தது அதில் அறுசுவை.காமின் விளம்பரத்தை பார்தேன். பிறகு தான் அறுசுவை.காமை பற்றி தெரிய வந்தது. ஒரு வருடத்துக்குள் எவ்வளவு மாற்றங்கள். எப்படி இருந்த அறுசுவை எப்படி ஆகிவிட்டது. உங்கள் பதில்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்கிறேன். மீண்டும் சந்திப்போம்.அட்மின் அண்ணா இந்த தலைப்பு நன்றாகவில்லை என்றால் நீக்கிவிடுங்கள். மிக்க நன்றி.
முத்துலெஷ்மி

எனக்கு அறுசுவை பற்றி எனது கணவர் தான் சொன்னார்கள் நான் குழந்தை பெறுவதற்க்காக இந்தியா வந்திருந்தேன் அப்பொழுது அவர்கள் இந்த வெப்சைட் போய்தான் நான் ரெசிபி பார்த்து சமயல் செய்றேன் உனக்கு தான் வெரைட்டியாக செய்றது பிடிக்குமே அதனால இந்த தளத்துக்கு போய் பாரு என்று இந்த லின்க் அனுப்பினார்கள் அப்பொழுதில் இருந்து எனக்கு பிடித்து விட்டது இந்த தளத்தை நான் பார்க்கமட்டுமே செய்வேன் உறுப்பினராக ஆகவில்லை கடந்த வருடத்தில் தான் உறுப்பினர் ஆனேன். நான் முன்னாடி பார்த்த அறுசுவைக்கும் இபொழுது பார்க்கும் அறுசுவை மிகவும் மாறிவிட்டது மேலும் இந்த அறுசுவை மென் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் இதனால் நமக்காக எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக இந்த தளத்தை உருவாக்கிய நம்ம அண்ணன் பாபு அண்ணாவிற்க்கும் எனது பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன் கதீஜா.

எனக்கு எப்பவுமே சமையல் ரொம்ப பிடிக்கும். சமைச்சு பரிமாறுவது, அதுவும் நல்லா சாப்பிடறவங்களுக்கு பரிமாறுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் எதேச்சையா ப்ரௌஸ் பண்ணும்போது இந்த வெப்சைட் கிடைச்சது. முதலில் பேசியது ஹேமா, திவ்யா அருணுடன். அப்புறம் ஜோதியில் கலந்து, வாராவாரம் பட்டங்கள் வாங்கி, ஒரே மஜாதான். பலாப்பழத்தை மொய்க்கும் ஈக்களைப்போல், பூக்கடையை மொய்க்கும் தேனீக்கள்போல் இந்த தளத்தையே சுற்றிச் சுற்றி வருகிறேன், வேறு எங்கும் போகாமல்.
ஒரே ஒரு வருத்தம்தான். முன்பே இந்தத் தளத்திற்கு வரவில்லையே என்று.
அன்புடன்
ஜெயந்தி

சகோதரி முத்துலெட்சுமி அவர்களுக்கு,

இதனை நீக்குவதா? சான்ஸே இல்லை. மிக அருமையான த்ரெட் இது. யாருக்கு பயன்படுகின்றதோ இல்லையோ. இதில் வரும் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். என்னால் நிறைய விசயங்களை அனுமானிக்க முடியும். தொடரட்டும்.

ஆனால், விளம்பரம் பார்த்து அறுசுவையை பற்றி ஒருவர் அறிந்து கொண்டதாக தெரிவித்து இருந்தீர்களே.. எனக்கு கொஞ்சம் குழப்பம். இதுநாள் வரை அறுசுவைக்காக எந்த விளம்பரமும் நாம் செய்தது கிடையாது. சென்னை அலுவலகத்தில்கூட இன்னமும் போர்டு வைக்கவில்லை. அவர் விளம்பரம் என்று குறிப்பிட்டது வேறு எதையாவது இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

இதனை நீக்குவதா? சான்ஸே இல்லை. மிக அருமையான த்ரெட் இது. என்னுடையக் கருத்தும் அதே தான்.எனக்கு இந்த தளம் இங்கு(சவூதி) உள்ள என் தோழி மூலம் அறிமுகம் ஆனது.சமையலுக்கு நான் புதியவள் என்பதாலோ என்னவோ என்னை அறுசுவை மிகவும் கவர்ந்துவிட்டது.என் கணவர் எப்போழும் இதே தளம் தானா என்று கேட்கும் அளவுக்கு என்னை ஆக்கிரமித்து விட்டது.இவற்றில் சிலவற்றை முயற்சித்து என்னவரிடம் பாராட்டும் வாங்கிவிட்டேன்.இட்டீஸ் வெறி,வெறி இன்ரஸ்டிங்$வெறி,வெறி குட்.

திருமதி முத்துலெட்சுமி அவர்களுக்கு, வாழ்த்துக்கள் நல்ல த்ரெட் கொண்டு வந்ததற்கு .அட்மின் அண்ணாவுக்கு இந்த த்ரெட் கண்டிப்பாக பயனளிக்கும்.
நான் இன்டெர்னெட்டில் சமயல் இனையத்தளம் தேடும் போது தான் அறுசுவை.காம் பார்க்க நேர்ந்தது . நான் கிட்ட தட்ட ஒன்றரை வருடமாக அறுசுவை.காம் படித்து வருகிறேன் ஆனால் உறுப்பினர் ஆனது பத்து மாத்ததிற்கு முன்பு தான். செல்போன் அழைக்கிறது பிறகு எழுதுகிறேன்.

யுவா

நான் யுவராணி அவர்களை வழி மொழிகிறேன் :) அறுசுவை.காம் பெண்களுக்கு இனிய அன்பளிப்பு மட்டும் அல்ல. என் போன்ற சமையல் அதிகம் தெரியாத தற்குறிகளுக்கு ஒரு வரப்ரசாதம் :)

நான் ஒரு நாள் என்ன சமைப்பது என்றே தெரியாமல் முழித்து கொண்டு இருந்த போது கூகிள் தளத்தில் இந்த அறுசுவை எனக்கு அறிமுகம் ஆனது. அன்றிலிருந்து தினமும் இங்கே ஒரு விசிட்!

உமா

எலோருக்கும் வணக்கம்.என் கணவருக்கு வித வித மான சாப்பாடு ரொம்ப புடிக்கும் அதனால அவருக்கு வேண்டி ஒரு நாள் ஃப்ரொஸ் பண்ணும் போது கிடச்சுது. ஆறுமாசமா இதை பார்துட்டு இருக்கென் கூடவே நிறைய உணவு வகைகளும் பண்ணி பார்திருக்கிறென்.இது கிடச்சது எனக்கு ஒரு வரப்ரசாதம் தான்னு சொல்லுவேன்.அறுசுவைக்கு என் மனமார்ந்த நன்றி.

அன்புடன்
சங்கீதாஜகராஜன்

vazhga vazhamudan

குரான் ஓஅதுவதற்காக ஆபிஸில் ஒருவர் இந்த சைட்www.islamkalvi.com சொல்லும் போது அதில் அறுசுவையும் இருந்தது ரொப நாளாக பழைய தளத்தைதான் பார்வையிட முடிந்தது. பிறகு ஃபான்ட் பிராப்ளம். பிறகு எப்படி உள்ளே நுழைவது என்று தெரியாயாமல் இருந்தது,பிறகு டைப் பண்ண தெரியவில்லை, இப்படி ஒரு வருடம் கழித்து நோன்புக்கு
முன்புதான் எல்லாம் புரியவந்தத்து ஒவ்வொரு நாளும் குறிப்புகலை படிக்கும் போது எல்லாம் டெய்லி நம்ம செய்வது தானே நம்மால் கொடுக்கமுடியவில்லயே என்று ரொப நலா வறுத்தம். இன்னும் ஒரு முக்கிய காரணம் என்னாதான் நல்ல சமைத்தாலும் இப்போதும் இந்தியாவுக்கு சென்றால் பின்னாடி ஹெல்பர்தன் எங்க வீட்டுக்கு போனாலும் தங்கைகள் யாரும் விடமாட்டார்கள். அவங்க எல்லாம் எண்ணை விட நல்ல சமைப்பார்கள்.
துபாய் வந்த புதிதில் எல்லாம் தெரியும் எவவளவு அளவு செய்யனும் என்று தெரியாது.அப்படி தான் ஒரு தடவை முதன் முதலி அண்ணன் வீட்டி தங்கி இருந்தோம் ஜூலைமாதம் நல்ல கொளுத்துகிற வெயில். எங்க ஹஸ்,அண்ணன் பிரென்ஸ் ஒரு எட்டு பேர் சேர்ந்து கார்கோ பிரிட்ஜ்,வாஷ்ங்க் மிஷின் எல்லாம் பேக்கிங் என்னை சமைக்கசொன்னார்கள்.எனக்கு முதல் முதல் எட்டு பேருக்கு என்ன செய்வது எவ்வளவு அளவு போடுவது ஒரே டென்ஷன் கடைசீயில் தக்காளி சாதம் இறால் வறுவல் செய்தேன்.
ஆனால் எங்க ஹஸ் முஞ்சி சுழித்தார் எங்க அண்ணன் ஒகே என்றார் என்ன ஒரு பிரியாணி செய்திருக்கனும் போல இருக்கு. பிறகு உப்பு ஊரில் கல் உப்பு பன் படுத்திவிட்டு இங்கு வந்து தூள் உப்பு எவ்வளவு போடனும் என்று தெரியவில்லி.
இப்ப ஒன்றும் பிரச்சனை இல்லை இப்ப என்ன நினைக்க்றேனோ உடனே பத்து நிமிடத்தில் செய்து சாப்பிடுவேன் எல்லொருக்கு செய்தும் கொடுத்துவிடுவேன்.
அதான் என் குறிப்புகளை சில நீட்டி முழக்கி இருக்கும் புதுசாக செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.என் பிள்ளைகளுக்கும் என்ன கொடுப்பது என்று தெரியாது யார்கிட்ட கெக்கனுமுன்னும் தெரியாது. அதான் நான் பட்ட கழ்டத்தை மற்றவர்கள் படவேண்டாம் என்று குறிப்பு கொடுக்க ஆரம்பிப்பேன் யாராவது டௌட் கேட்டுக்கொண்டிருந்தால் உடனே அதை நிறுத்திவிட்டு அதுக்கு ஏதவது எனக்கு பதில் தெரிகிறதா என்று பார்ப்பேன்.

ஜலீலா

Jaleelakamal

ரொமப டிப்ரெஷனாக இருந்தேன் அருசுவையில் இனைந்ததிலிருந்து கவலயெல்லம் பஞ்சாக பறந்து விட்டது தினமும் எவ்வளவு வலி இருந்தாலும் இந்த அருசுவையில் நான் என்னை மறந்தேன். மற்றவருக்கும் பதில் கொடுக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
ஜலீலா

Jaleelakamal

எனக்கு தமிழ்மன்றத்தில் இருந்து ஒரு இ.மெயில் வந்ததது. அதில் அறுசுவை.காம் பற்றி ஒரு ஒரத்தில் குறிப்பிட்டிருந்தது. பிறகு தான் இந்த தளத்தை பற்றிய தகவல்கள் கிடைத்தது. நான் தவறாக விளம்பரம் என்று புரிந்துகொண்டேன். தோழிகள் அனைவரும் அறுசுவையின் அறிமுகத்தை பற்றி இங்கு பகிர்ந்து கொள்வது நன்றாக இருக்கிறது. மேலும் அறுசுவையை பற்றி இன்னும் பேசலாம்.

மேலும் சில பதிவுகள்