நூறு சமையல் குறிப்புகள் கொடுத்த திருமதி.நர்மதாவிற்கு வாழ்த்துக்கள்

அன்புள்ள நர்மதா, குறிப்புகளில் 100 என்ற முதல் இலக்கினை அடைந்த உங்களுக்கு அறுசுவை நேயர்கள் சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.

உங்களுடைய இலங்கை சமையல் குறிப்புகளையும்,அதில் கொடுக்கும் குறிப்பையும் விரும்பி படிப்பேன். உங்கள் சமீபத்திய வேப்பம்பூ வடக ரெஸிப்பியிலுள்ள குறிப்பை ரசித்துப் படித்தேன்.

நீங்கள் மேன்மேலும் பல குறிப்புகளை கொடுக்க வாழ்த்துகிறேன்.

நீங்கள் 100 குறிப்புகள் கொடுத்து அசத்திடீங்க. உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சென்ட்சுரி போட்ட நர்மதா வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரம் டபுள் சென்ட்சுரி அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்கள் குறிப்புகள் எல்லாம் படிப்பேன் செய்து பார்க்க தான் முடியவில்லை கண்டிப்பாக செய்து பார்த்து பின்னூட்டம் அளிப்பேன்.

ஜானகி

வாழ்த்துக்கள் திருமதி நர்மதா. மிக குறுகிய காலத்திற்குள் விதவிதமான பன்நாட்டு குறிப்புகளாக கொடுத்து சதம் அடித்து சாதனை புரிந்துவிட்டீர்கள் பாராட்டுக்கள். சமையலில் மட்டுமல்லாது கைவேலையிலும் நல்ல திறமைச்சாலியாக சிறந்து விளங்குகின்றீர்கள். இதைப் போலவே என்றென்ரும் தங்களின் சேவை,அறுசுவையில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர மனதார வாழ்த்துகின்றேன் நன்றி.

நார்தனா உங்களுக்கு நிறைய பதில் எழுத வேண்டி இருக்கு கொஞ்சம் பிஸி. என்ன என்ன அயிட்டம் டஎய்லி செய்யாலாம் என்று மெதுவாக எழுதுகிறேன்.
ஜலீலா

Jaleelakamal

சரிக்க ஒண்ணும் அவசரம் இல்லை .... நீங்க வேலைய கவனிங்க ... எதோ சும்மா கேட்டேன் ... நீங்க பதில் சொன்னதால இன்னும் கேட்டேன் ... அவ்ளோ தான் க்க

அருமை சகோதரி நர்மதா வாழ்த்துக்கள் உங்கள் குறிப்புகள் அனைத்து டிப்ஃரென்டா இருக்கு. இன்னும் மென்மேலும் குற்ப்புகல் கொடுத்து அசத்த வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

சைவக் குறிப்பு (சரிதானே) 100 கொடுத்த நர்மதா மேன் மேலும் குறிப்புகள் கொடுத்து கூட்டாஞ்சோறில் முன்னேற வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயந்தி

வாழ்த்துக்கள் நர்மதா. நல்ல வெரைட்டியான புது புது குறிப்புகளா குடுத்துருக்கீங்க. இன்னும் நிறைய குறிப்புகள் தொடர்ந்து கொடுக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

நூறு குறிப்புகள் கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் பல நூறு குறிப்புகள் கொடுக்கனும்னு வாழ்த்துகிறேன் சமயலில் மட்டுமல்லாது கைவேலைகளிலும் அசத்துகிறீர்கள் உங்களின் பங்களிப்பு அறுசுவை சகோதரிகளுக்கு என்றும் தேவை நன்றி மீண்டும் சந்திப்போம்.

அன்புடன் கதீஜா

அன்புள்ள நர்மதா,
வாழ்த்துக்கள். மிக குறுகிய காலத்தில் 100 என்ற இலக்கை அடைந்துள்ளீர்கள். சமையல் மட்டுமன்றி கைத்திறன்களிலும் கலக்குகிறீர்கள். மேன்மேலும் எல்லா விதமான வித்தியாசமான குறிப்புகள் கொடுக்கவும், இன்னும் பல நூறுகளை கடக்கவும் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்