ஊர்ப்பாடல்கள்

அன்பார்ந்த அறுசுவை அங்கத்தினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்த திரியானது உர்ப்பாடல்களுக்காக அறிமுகமாகிறது.
எங்கே பாடுங்கள் உங்கள் ஊர்ப்பாடல்கலை இங்கே!

உதாரணம்:
1. மதுரைக்கு போகதடி அந்த மல்லிகைப்பூ கண்ணு வைக்கும்
தஞ்சாவூர் போகதடி தளியாட்டாம பொம்மை நிக்கும்
துதுக்குடி போனா சில கப்பல் தரை தட்டும்
கொடைக்கானல் போனா மேகம் ஒன்ன சுத்தும் (அழகிய தமிழ் மகன்)

2. மானாமதுரை குண்டுமல்லிகை வாடமனா தலையில் சுஉடுற வா மாமா.... (மேட்டுக்குடி)

இப்படிக்கு
இந்திரா

எந்த ஊர் என்றவனே, இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட, அறிந்த ஊர் அல்லவா

உடலூரில் வாழ்ந்திருதேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடிபுகுந்தேன் மண்ணூரில் வீழ்ந்துவிட்டேன்,
கண்ணூரில் தவந்திருந்தேன் கையூரில்வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன், காளையூர் வந்துவிட்டேன்

வேலூரைப் பார்த்துவிட்டேன் விழியூரில் கலந்துவிட்டேன்
பாலூரும் பருவம் என்ற பட்டிணத்தில் குடிபுகுந்தேன்
எந்த ஊர்...

காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்
பள்ளத்தூர் தன்னில், என்னை பரிதவிக்க விட்டுவிட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேரி நின்றுக் கொண்டாள்

கீழூரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேலைவர வில்லையடா
எந்த ஊர்...

நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாலாம்
பொட்டு வெச்சு பூ முடிச்சு நின்னாலாம்

ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொண்ணே சிலையே

தேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட்டெல்லாம் இறங்கு. (என் கண்மணி என் காதலி)

சைதாபேட்ட ராணிப்பேட்ட குரோம்பேட்ட பேட்ட ராப்
அம்மாபேட்ட ஐயம்பேட்ட, தேனாம்பேட்ட தேங்காமட்ட
ஞானப்பழமே ஞானப்பழமே செவ்வாப்பேட்ட ஞானப்பழமே பேட்ட ராப்

காலை ஜப்பானில் காஃபி
மாலை நியூயார்க்கில் காப்ரே
இரவில் தாய்லாந்தில் ஜாலி
இதிலே நமக்கென்ன வேலி
இங்கும் அங்கும் நம் உலகம்
உலகம் நமது பாக்கட்டிலே
வாழ்க்கை பறக்கும் ராக்கட்டிலே(எங்கேயும் எப்போதும்)

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைப் போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெற வேண்டும்.

மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல் கீதம் முழங்கும்
கவி மன்னர் காவியம் பொங்கும்
அதை காதலர் உள்ளம் வணங்கும்.

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலைக் கூறவா

பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே
நான் போயிருந்தேனா அவ புடவ நல்லாயில்லே
மந்தவெளியிலே ஒரு மனுஷன் முன்னாலே
நான் மயங்கி நின்னேனா அவன் மூஞ்ஜி நல்லாயில்லே

இலங்கை நகரத்துலே இன்ப வள்ளி நீ இருந்தால்
இந்து மகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்
மேலம் போல வான வீதியிலே நடந்திடுவேன்
இடி மின்னல் மழை புயலானாலும் துணிந்து இறங்கிடுவேன்
உனக்காக எல்லாம் உனக்காக....

டியர் இந்திரா ரொம்ப நன்றிமா.பழைய ரெக்கார்ட் பெட்டிடை ஓடவிட்டதற்கு. ஞாபகம் வரும் போதெல்லாம் எழுதுகின்றேன்.

மூக்கு செய்த மண்ணு அது மூனாறு
பட்டு கண்ணம் செய்த மண்ணு அது பொன்னாறு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூறு
கருப்பு கூந்தல் செஞ்சது கரிசல்காட்டு மண்ணுங்க
சங்கு கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லாம் வைகை ஆற்று மண்ணுங்க
பல்லழகு செஞ்சதெல்லாம் முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்ய மண்ணெடுக்க சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க

தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணி தண்ணீரை விட்டு
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்ம
இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம

தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு
தாமிரபாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழைய்யூரு மண்ணெடுத்தேன் வயிற்றுக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுரம் வீதியிலே மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னபோண்ணு விரலுக்கு
பட்டுக்கோட்ட ஓடையிலே மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங் குறிச்சியிலே மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசிர நான் கொடுத்து உசிரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே

தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணி தண்ணீரை விட்டு
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்ம
இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம
எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா
அது அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லமா,போடு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே.

Dear manohari madam,
How are you, your songs are so good. After two days i will come and join with you to add some more songs.
(PS: I will change this message into tamil soon. so dont worry admin sir).

with regards
indira

indira

மனோகரி மேடம் கலக்கிட்டீங்க போங்க

மனோகரி மேடம் அளவிற்கு முழு பாடலும் எனக்கு தெரியாது..
இருந்தாலும் சில வரிகளை எழுதுகிறேன்..

" அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு"
என்பது விஜயகாந்த் படத்தில் வரும் பாடல் ..
இது எமது ஊரை குறிக்கும்.

1. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (திருமலை தென்குமரி)
2. திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
3. மருதமலை மாமணியே, முருகைய்யா
4. காதல் யாத்திரைக்கு ராமேஸ்வரமும் திருச்செந்தூரும்
தீர்த்த யாத்திரைக்கு கொடைக்கானலும், (பழைய பாட்டு ஜெமினி கணேசன் படம்)
5. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்.

இன்னும் வரும்

அன்புடன்
ஜெயந்தி

ஹலோ இந்திரா நீங்க எப்படி இருக்கீங்க? நான் நன்றாக இருக்கின்றேன் நன்றி. இதுப் போன்ற பாடல்கள் அடங்கிய திரட்டை எற்ப்படுத்திய உங்களுக்கும், ஒவியாவிற்கும் மிக்க நன்றி. எனக்கு பாட்டு பாடுவது ரொம்ப பிடிக்கும் என்பதால் மிகவும் உற்சாகமாக இதில் கலந்துக் கொள்ளமுடிகின்றது.இதோ இன்னுமொரு பாடல் மே மாதம் படத்திலிருந்து,

மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடுகட்ட போறேன்
லைட் ஷவுஸில் ஏறி நிற்க்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாறேன்.

மெட்ராஸ சுத்தி காட்ட போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கி தாறேன்
இது தானே ரிப்பன் பில்டிங் பாரேன்
அதுக்கு உங்கபம்பேர வெக்க சொல்லைபோறேன்

அட சினிமா புடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்பிளேன் இறங்கும் மீனம்பாக்கம்
ஃபாரின் சரக்கு பர்மாபஜாரு
நம்ம உள்ளூர் சரக்கு ஜாம்பஜாரு

ஏ பொண்ணூ ஏ பொண்ணு இத பாக்காத
கண்ணு என்ன கண்ணு
ஏ பொண்ணு ஏ பொண்ணு என்ன இட்டுக்கினு
போடி என் கண்ணு

வெள்ளக்காரன் கோட்ட அது பழைய மெட்ராஸ்
ராணியம்மா பேட்ட இது புதிய மெட்ராஸ்
ஒன்வேயில் புகுந்துகூட மெட்ராஸ சுத்தி பார்கலாம்
சென்ட்ரலையும் எஃமோரையும் சுத்திகாட்டி துட்டு சேர்க்கலாம்

சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்
இங்க இல்ல ஜோலி, பாக்கட் காலி
ஆனா லைப் ரொம்ப ஜாலி ஜாலி.

ஹலோ சுபா டியர் எப்படி இருக்கீங்க? ஊரிலிருந்து வந்துட்டீங்களா? உங்களை மீண்டும் மன்றத்தில் பார்ப்பதில் ரொம்ப சந்தோசம்.ஊரில் அனைவரும் நலமா, குழந்தை திவாகரும் உங்க கணவரும் எப்படி இருக்கின்றார்கள். உங்கள் விடுமுறை அனுபவங்களைப் படித்தேன், ஏகப்பட்ட கோயில்களுக்கு சென்றிருக்கின்றீர்கள்!. ஆமாம் எப்படி உங்க அண்ணன் பாபுவை மிஸ் பன்னீர்கள் அட்லீஸ்ட் தொலைப் பேசியிலாவது பேசியிருக்கலாமே, நேரம் கிடைக்கவில்லையா?உங்களை விட அவர் ரொம்ப வருத்தப்பட போகிறார் பாருங்கள். ஒகே டியர் இனி எப்போதும் போல் வந்து அறுசுவையில் கலந்துக் கொள்ளுங்கள்.இந்த திரட்டினால் மறந்திருந்த நிறைய பாடல்களை நினைவுக் கூற முடிகின்றது, நீங்களும் வந்து பாடுங்கள் நன்றி மீண்டும் சந்திக்கலாம்.

குருவயூரப்பா குருவயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி (புதுபுது அர்த்தங்கள்)

பல்லேலக்கா பல்லேகக்கா சேலத்துக்கா திருச்சிக்கா
மதுரைக்கா மெட்ரசுக்கா திருத்தணிக்கா
அண்ணன் வந்தா தமிழ் நாடும் அமெரிக்கா (சிவாஜி)

இப்படிக்கு
இந்திரா

indira

மேலும் சில பதிவுகள்