வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

சகோஸ், நான் ஊருக்கு போயிட்டு வந்துட்டேன், ரொம்ப எஞ்சாய் செஞ்சேன் 4 நாள்! :-) தலை தீபாவளி நல்ல கொண்டாடின மாதிரி ஆச்சு! இப்போ மூட்டை மூட்டையா லாண்ட்ரி :-|

எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், ஏன்னா ரெண்டு நாள்ல அருமை கணவரின் பிறந்த நாள்- என் கூட கொண்டாடும் முதல் பிறந்த நாள் :D

அவருக்கு இதெல்லாம் கொண்டாடுறதுல நம்பிக்கை இல்லை, இருந்தாலும் நான் விட முடியுமா? அதனால நாளைக்கு ஸ்பெஷல் சமையல்- ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் (எப்படி வருமோ ஆண்டவா), மசால் வடை, நான் (சே சே சாப்பிடற நான் சொல்றேன்), பனீர் மட்டர் மலாய், ஃப்ரைட் ரைஸ், ராய்த்தா, ரோஸ்டட் ராக்கி ரோட் கஸ்டர்டு செய்யலாம்னு ப்ளான். இது போதும இல்ல இன்னும் வேற எதூம் செய்யலாமான்னு சொல்லுங்கப்பா. கிஃப்ட்னு ஏதும் வாங்கலை ஏன்னா அது சர்ப்ரைசா இருக்காதுனு. அதுல அவருக்கு ஆர்வமும் இல்லை. வீக் எண்ட் வேற வெளில போற வேலை இருக்கறதால் நாளைக்கே கொடுத்துடலாம்னு.. ஓகே தானே?

வேறு ஏதவது எக்ஸ்ட்ரா ஐடியா இருந்தா சொல்லிட்டு போங்க அக்காஸ்/ஆண்ட்டிஸ்.

செல்வி ஆண்ட்டி, உங்க கதையை படிச்ச உடனே எனக்கு கண்ணூல தண்ணி வதுடுச்சு.. அப்படியே என் அம்மா தான் நீங்க. எங்களுடைய விபத்து, ஆஸ்பத்திரி அனுபவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்துட்டு போச்சு. நீங்க உங்க குடும்பத்தோட பூரண ஆரோக்கியமா இருப்பீங்க கண்டிப்பா.
300 குறிப்பு கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள் :-) 3000 கொடுங்கன்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன், இந்த 300 சமைக்கவே 4 -5 வருஷம் ஆகிடும் ஹிஹி..

நர்மதா, 100 அடிச்சு சாதனை செஞ்சதுக்கு வாழ்த்துக்கள். பக்கத்துலயே இருந்துட்டு இந்த போடு போடுறீங்க, நானும் இருக்கேனே :-( இன்னிக்கு க்ளைமேட் எவ்ளோ அருமையா இருக்கு பார்த்தீங்களா?

உஙளை எல்லாம் போல எனக்கும் கைவேலை செய்ய ரொம்ப ஆர்வம். பொறாமையா இருக்கு.. கொஞ்ச நாள் கழிச்சு உங்க கிட்ட விபரம்லாம் கேட்கறேன் எங்க எது வாங்கணும்னு :-)

அனுசிவா, வாங்க வாங்க புது பொண்ணா நீங்க.. வாழ்த்துக்கள்! எங்க இருக்கீங்க அமெரிக்கால?

எந்த கேள்விக்கும் பதிலளி ஆப்ஷனே வர மாட்டேங்குது, அதான் புது த்ரெட். என்னோட பிரச்சனை தீர்ற வரைக்கும் இப்படி தான் புது த்ரெட் ஆரம்பிச்சுட்டே இருப்பேன், பாபு மாமா. :-)

வேற என்னலாம் நடந்துது மன்றத்துல.. அப்டேட் பண்ணுங்கப்பு..

அன்புடன்,
ஹேமா.

அன்பின் ஹேமா, வாழ்த்துக்கு நன்றி. தாராளமா கேளுங்க. சொல்லித்தாறேன்.:
காலைல நல்ல வெதர், நல்லாத்தான் இருக்கு. மதியத்துக்கு பிறகுதான் மிகவும் குளிருது.:)

உங்கள் கணவரது பிறந்தநாளிற்கு பரிசுப்பொருட்கள் கடையில் வாங்காமல் ஏதாவது கைவினைப்பொருட்கள் நீங்களே செய்து பரிசளிக்கலாமே. அது சர்பரைசாகவும் இருக்கும் நீங்கள் செய்தது என்று பெருமையாகவும் இருக்கும். நான் அப்படித்தான் செய்வது. எனது கணவரின் அலுவலகத்தில் அவரது அறை முழுவதும் நான் செய்த எனது பரிசுப் பொருட்கள்தான். :) நீங்களும் ஏதாவது சிம்பிளாக முயற்சித்து பாருங்களேன். மைக்கல்ஸ், ஜோ-ஆன் போன்ற கடைகளில் சென்று பாருங்கள் ஏதாவது செய்ய ஐடியா கிடைக்கும்.
-நர்மதா:)

பாபு மாமா உங்களுக்கும் அறுசுவைக்கும் வர்ற 18ஆ பிறந்த நாள்?? என் கணவருக்கும் அன்னிக்கு தான் :-) சேர்த்து கொண்டாடிடுவோம்!

உங்க ஐடியாக்கு ரொம்ப நன்றி நர்மதா. மைக்கேல்ஸுக்கு எத்தனையோ தடவை போயிட்டேன் ஆனா இப்போ போனா என்ன எதுக்குனு விபரம் கேட்டு துளைசு எடுத்துடுவார். எங்க போகணும்னு சொல்லாமலே கார் ஓட்ட சொல்ல முடியாது பாருங்க ;-)

வீட்டில் இருப்பதை வைத்தே ஏதாவது செய்ய இயலுமானு பார்க்கறேன்.. ஆமா போன வருஷம் பிறந்த நாளைக்கு நான் கூட இல்ல, ஆனா புது ட்ரெஸ் வாங்கி வச்சு இருந்தேன் கல்யாணத்துக்கு அப்புறம் கொடுக்கலாம்னு. அதையே இன்னும் போட்ட பாடில்லை. எ.கொ.ச.இ!!!

சரி வெள்ளி இரவு என் வீட்டில் சிறப்பு டின்னர் எல்லா சகோஸும் வந்திடுங்க ஓகே? பாபு மாமா எனக்கு ஒரு வைர நெcக்லcஎ வங்கிட்டு வந்துருங்க, கஷ்ட பட்டு சமைக்க போறேன் பாருங்க :-) (நாங்க கஷ்ட பட்டு சாப்பிடணுமே அதுக்கு என்ன பண்ணறதுனு கேட்க கூடாது)

இந்த ஒரு த்ரெட்டை தவிர வேற எங்கயுமே பதிலளி வர மாட்டேங்குதே என்ன தான் பிரச்சனை எனக்கும் அறுசுவைக்கும் :-/

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

பாபு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எதை நோக்கமாக கொண்டு இந்த தளத்தை ஆரம்பித்தீர்களோ அந்த நோக்கம் நிறவேற வாழ்த்துக்கள்.இத தள்த்தினால் பல பெண்கள் பயன் அடைகிறார்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஹேமா, வெரி குட், அவங்களுக்கு இஷ்டம் இல்லையின்னலும் நாம விட முடியாது!ஏதவது பண்ணி அசத்திடணும்.(அப்பத்தானெ நம்ம பிறந்தனாளுக்கு ஏதாவது கிடைக்கும் ஹி ஹி ) நான் ஒருதடவை சர்ப்ரைஸ் கிஃப்ட் ஆன்லைனில் ஆர்டர் பண்ணி ஆனால் அவர் 1or 2 தடவை தான் போட்டிருப்பார்!

malimi

anbudanசகோதரர் பாபு அவர்களுக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வித்யாவாசுதேவன்.

anbudan

உங்களிடம் சுவரில் மாட்டக் கூடிய Frame இருக்கா? அல்லது Table top frame என்றாலும் பரவாயில்லை. வீட்டை விட்டு வெளில வந்து பார்த்தீங்கண்டா எவ்வளவு அழகழகான நிறம் நிறாமான விதவிதமான ஃபால் இலைகள் (Fall leaves).

அதில கொஞ்சத்த எடுத்து ஒரு கனமான புத்தகத்தினுள் வையுங்க. அதற்கு மேல் நிறைய பாரம் வையுங்க. Frame இற்கு அளவாக ஒரு மட்டை(card board) எடுத்து கொள்ளுங்கள்.(Cerial வர்ற பெட்டி எண்டாலும் சரிதான்) அதன் ஒரு பக்கத்தில் கறுப்பு துணி அல்லது உங்களிடம் உள்ள டார்க் நிற எதாவது துணியை அயர்ன் பண்ணிவிட்டு ஒட்டுங்கள். பின்னர் புத்தகத்தில் வைத்த இலைகளை எடுத்து பிடித்த விதமாக ஒழுங்கு படுத்தி ஒட்டுங்கள். Frame இல் போடுங்கள். Wrap paperஆல் சுத்துங்கள். பரிசு தயார்.:)

-நர்மதா:)

பி.கு: நிறைய பாரம் வைத்தால் 4 - 5 மணித்தியாலத்திலேயே இலைகள் படிந்து விடும். உங்களிடம் உள்ள பழைய பாவிக்காத ஆடைகள் இருந்தால் அதன் துணியைகூட வெட்டி உபயோகிக்கலாம். மேப்பிள் இலை பார்க்க மிகவும் அழகாக இருக்கும். table top frame ஆயின் உங்கள் இருவருடைய படமோ அல்லது உங்களது படமோ நடுவில வைத்து சுற்றிவர சிறிய இலைகள் கிடைத்தால் அல்லது பைன் இலைகளை வைத்து ஒழுங்குபடுத்தி அலங்கரிக்கலாம். கொஞ்சம் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்:)

சதம் அடித்த நர்மதாக்கா, மனோ மேடம்,...பிறந்த நாள் கொண்டட போற அருசுவை , பாபுண்ணா, திரு.ஹேமா.....எல்லொருக்கும் என் வாழ்த்துக்கள்......

தாளிகா ரீமா எப்படி இருக்கா..நீங்க எப்படி இருகிங்க? குட்டி பொண்ண நல்லா பார்த்துக்கோங்க....

செல்விக்கா உங்க விபத்த படிச்சு எனக்கு ....அப்பா நினைக்கவே பயமா இருக்கு ... கிரேட்...

என்ன மாலினி அக்கா இது,

உங்க பேரே உங்களுக்கு மறந்து போச்சா? ஹி ஹி :-)
எப்படிகா இருக்கீங்க? குழந்தைகள் நலமா?

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஆஹா... என்ன ஒரு ஒற்றுமை பாரு, ஹேமா, உனக்கும் அறுசுவைக்கும்:-) அறுசுவை தொடங்கிய அன்னைக்கு உங்க வீட்டுலயும் செலப்ரேஷன்:-) நல்லா ஜமாய்:-) ஏதேனும் வித்தியாசமா சென்சு தந்து அசத்திடு:-) அப்புறம் எங்களுக்கும் வந்து சொல்லு, என்ன பண்ணினேன்னு :-).

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹலோ ஹேமா என் முதல் அறுசுவை தங்கையே (திவ்யாவும்தான்)
நாளை பிறந்த நாள் காணும் உன் கணவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது அடுத்த பிறந்த நாளில் அவர் அப்பாவாக வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்