பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

அன்புள்ள பாபு!!!

“ கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழு பிணியிலாத உடலும்
சலியாத மனமும்
அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும்-
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் “

என்று கூறும் அபிராமியம்மைப் பதிகப்படி, இவ்வனைத்து
வளங்களும் என்றும் அமைந்திருக்க,
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

பாபு அண்ணா,

இதோ இதோ பிறந்தநாள் வந்திடுச்சு :-) சந்தோஷமா என்சாய் பண்ணுங்க :-) போட்டோஸ் எல்லாம் சீக்கிரம் அப்லோட் பண்ணுங்க :-)

இந்த தங்கையிடமிருந்து இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :-)

Many More Happy Returns of the Day :-)

பாருங்க மனோ அத்தை, உங்களுக்கு எவ்வளவு அழகான வாழ்த்து மடல் போட்டிருக்காங்க. அதுப்போல எப்பவும் இருக்க வாழ்த்துக்கள் :-) சரீங்களா:-)

சீக்கிரமா எங்களுக்கு அண்ணி கிடைக்க நீங்க மனசு வையுங்க :-) அதுக்கும் வந்து முதல்ல வாழ்த்து சொல்லனும் நானு :-)

அறுசுவை தோழிகள் சார்பாக
http://www.123greetings.com/view/7HE21117172046333
சென்று பாருங்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நான்காம் வருடம் அடியெடுத்து வைக்கும் அறுசுவை இணையதளத்திற்க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் அட்மின் அவர்களுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

அட்மின், இதே தெளிவு,புத்துணர்ச்சியுடன்,இளமைத்துணிவுடன் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
ஹர்ஷு சொன்னது போல உங்கள் மனதிற்கு இசைந்த நல்ல துணையும் விரைவில் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்!!!
வள்ர்க நலமுடன்!!!

அன்புடன் விமலா.

இன்று பிறந்த நாள் காணும் அருசுவைக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...........

அருசுவையை எங்களுக்கு அளித்து எங்களில் பலரின் வயிறுக்கு பாலை வார்க்கும் வெங்கடெஷ் பாபு அண்ணானுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

பிறந்த நாளில் வந்து வாழ்த்தனும்ன்னு நினைத்தேன். வாழ்த்திட்டேன்.

அறுசுவைக்கும், பாபு அண்ணாவுக்கும் இந்த தங்கையின் இனிய பிறந்தநாள் வாந்த்துக்கள்.ஆரோக்கியமான உடலும், மகிழ்ச்சியான,தெளிவான மனமும் கொண்டு நிம்மதியான வாழ்க்கை வாழ வாழ்த்த வயதில்லை, என்பதால் மனதார இறைவனை வேண்டுகிறேன்.
அண்ணா சீக்கிரம் புகைபடங்களை எங்களுக்கு அப்லோட் செய்ங்க.பார்க்க ஆவலா இருக்கோம்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்னையின் பிள்ளையாய்
அறுசுவையின் மன்னனாய்
ஆற்றல் பல பெற்று
ஈகை குணத்துடன்
உவகை என்றும் நிலைத்து
ஊருக்கு நல்லது செய்து
என்றும் வாழ்வினிலே
ஏற்றம் பல பெற்று
ஐயம் (மற்றவர்களுடைய) களைந்து
ஒருத்தியை திருமணம் செய்து
ஓருயிர் ஈருடலாய்
ஔடதம் தேவையே இல்லாமல்

என்றும் வாழ்வாங்கு வாழ
மனதார வாழ்த்துகிறேன்
அன்புடன்
ஜெயந்தி

என்றென்றும் நலத்துடனும் , எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் .அறுசுவைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

self-confidense is the key to open the door of happiness in your life
அன்புள்ள பாபு அண்ணாவிற்க்கும், அறுசுவை தளத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

self-confidense is the key to open the door of happiness in your life

அட்மின் அவர்களுக்கும் அறுசுவைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அறுசுவைக்கும் தள நிர்வாகி அண்ணனுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்!
மாலினி

மேலும் சில பதிவுகள்