உருளை மசாலா

தேதி: November 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 250 கிராம்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வினிகர் - ஒரு தேக்கரண்டி
சோளமாவு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை நீளவாக்கில் நான்காக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கின கிழங்குடன் மிளகாய் தூள், உப்பு மஞ்சள் தூள், வினிகர், சோளமாவு, இஞ்சி, பூண்டு விழுது ஆகியவை சேர்த்து ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு ஊறவைத்த உருளைக்கிழங்கை போட்டு, கிளறி ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு சிறு தீயில் சுருள கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hi friends,

can u please help me to prepare potato masala without boiling them. the crispy potato, looks sort of fried too.. I am trying to do but either it gets smashed or doesnt get fried properly.

Thanks...
Kavi

hi friends,

can u please help me to prepare potato masala without boiling them. the crispy potato, looks sort of fried too.. I am trying to do but either it gets mashed or doesnt get fried properly.

Thanks...
Kavi

நானே உருளை பொரியல் ரெசிப்பி மிளகுத்தூள் போட்டு செய்வது கொடுத்திருக்கிறேன். அது அவிக்காமல் செய்வதுதான். இந்த ரெசிப்பிகூட அவிக்காமல் உருளையை முக்கோணமானதாக நறுக்கி, எல்லாம் இதேபோல் தாளித்து தக்காளி வதங்கியவுடன் போட்டு சிறுதீயில் வதக்கினால் பாதி வெந்துவிடும். கடைசியாக 1/4கிளாஸ் தண்ணீர் விட்டு சுருள கிளறி மூடி சிறுதீயில் வேகவிடவும். தண்ணீர் வறியதும் கிளறினால் சூப்பரான உருளை மசாலா கிடைக்கும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

நேத்து உங்க உருளைமசாலா செய்து, மோர் குழம்பு வைத்தேன் ரொம்ப டேஸ்டாக இருந்தது. நன்றி

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மிக்க நன்றி தனிஷா. உருளை மசாலா செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை