மூலிகை இட்லி

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - கால் கிலோ
உளுந்து - 175 கிராம்
துளசி இலை - ஒரு கைப்பிடி
தூதுவளை இலை - ஒரு கைப்பிடி
கற்பூரவல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப


 

அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து எடுத்து இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
சுமார் ஆறு அல்லது ஏழு மணி நேரம் அதனை வைத்திருந்து புளிக்க விடவும்.
மூலிகை இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த இலைகளை மாவுடன் கலந்து, தேவையான உப்பையும் சேர்த்துக் கொண்டு, இட்லியாக ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்