ஊருக்கு போயி வந்தா...

தோழிகளே ஊருக்கு போயிட்டு வந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
முதலில் என் அனுபவத்தை கூறுகிறேன்...
தொடர்கிறது...

இந்த இந்தியா ட்ரிப் ரொம்ப நல்லா இருந்தது. ஊரு ஊரா சுத்தினோம். ஒரு இடத்தில் தங்கல.. வீட்டுக்கு தூங்க மட்டும் தான் வர வேண்டிய நிலை...

குழந்தைக்கு வேற வைரல் ஃபீவர் வந்து விட்டது..
103.5 டெம்ப்ரேச்சர் வந்து விட்டது.

டாக்டர் வேற ஃபிட்ஸ் வந்துவிடும் அப்படி இப்படின்னு பய முறுத்திட்டாங்க... பயந்து விட்டேன்... இப்ப சரியாகிவிட்டது.

கொசு மிகவும் பயமுறுத்திவிட்டது... திவாகரின் உடம்பில் கடிக்காத இடம் இல்லை.

ஃபேட், மஸ்கிட்டோ மேட், லிக்விடேட்டர் போட்டும் பயனில்லை. இதை எல்லாம் பார்த்து கொசு சிரிக்கிறது... அப்டேட் பண்ணுங்கப்பா எங்க டெக்னாலஜி ஜாஸ்தி ஆகிவிட்டது என்கிறது...
நாங்களும் வேக்ஸினேஷன் போடுறோம்ல என்கிறது....

மனுஷங்கதான் பாவம்.

தீபாவளியை 3 வருடத்திற்குப் பிறகு வெடி வெடித்து கொண்டாடினோம். மிகவும் சந்தோஷமாக கொண்டாடினோம்.

கோவில் கோவிலாக ஏறி ஏறி இறங்கினோம். குற்றாலம் போனோம். சுருளி போனோம்.

பழனி,குற்றாலம், சுருளி, வீரபாண்டி, குச்சனூர், தென் காசி, ஸ்ரீ வில்லி புத்தூர், தென் திருப்பதி எல்லாம் சுத்தி சுத்தி ட்ராவல் என்றாலே பயமா இருக்கு...

இன்னும் தொடரும்...

இத வச்சு ஒரு மெகா சீரியலே எடுக்கலாம் போல...

/நாங்களும் வேக்ஸினேஷன் போடுறோம்ல /...
ஹா ஹா ஹா.....அக்கா ... நீஙக கிரேட்.... கொசுவுக்கு கூட எவ்ழொ முக்கியதுவம்.....கொசுகடிய விட உங்க கடி....ஹா ஹா...

அப்புரம் ... தென் திருப்பதி எஙக இருக்கு.....

ஹாய் நர்த்தனா...
தென் திருப்பதி என்பது .. ஸ்ரீ வில்லிபுத்தூரின் அருகில் 3 கீ.மீ தூரத்தில் உள்ளது . ஊரின் பெயர் திருவண்ணாமலை என்பது . இரண்டு திருவண்ணாமலை என்றால் குழப்பும் என்பதாலும் மேலும் இங்கே ஸ்ரீ வெங்கடேஷப் பெருமாளுக்கு ஆலயம் உள்ளதாலும் இதை தென் திருப்பதி என்று அழைக்கிறார்கள். ஓகே நர்த்தனா.. ரொம்ப போர் அடித்து விட்டேனா?? (அது என்ன அக்கா???) புரியலையே???

அப்புறம் உங்களை எப்படி கூப்பிட...
போர் லாம் இல்லை...நன்றாக இருக்கு...இன்னும் எழுதுங்க ...அப்புறம் தளிகா க்கு வைரஸ் காய்ச்சல் பத்தி சொல்லுங்க.. ரொம்ப பயந்து பொய் இருகாங்க..

ஹாய் நர்த்ஸ்,
இது எப்டி இருக்கு?
கொஞ்சம் நியாபக மறதி ... நீங்க கொஞ்சநாளைக்கு முன் விளையாடிய விளையாட்டில் உங்கள் அக்கா பெயர் என்ன?? (அக்கா பேரு என்னன்னு கேட்டா உங்க அக்காகிட்ட இருந்து உதை விழும் ) அதான் சுத்தி வளைச்சி இப்டி....

அடுத்த முறை இந்தியா வரும்போது எங்க வீட்டுக்கு வந்துடுங்க. சத்தியமா கொசு ரொம்ப கம்மியான இடம். அதுவும் மாடிக்கு வராது. திவாகரும் ஜாலியா இருப்பான்.
அன்புடன்
ஜெயந்தி

//நீங்க கொஞ்சநாளைக்கு முன் விளையாடிய விளையாட்டில் ...........//
சுபா...இது தான் பெட்டேர் ன்னு நினைக்கிர்றேன் ....சுபா ....எனக்கு புரியவில்லை.. நீங்க என்னை என்ன சொல்ல வரிங்க......நான் என்ன விளையாடினேன் ? நான் இங்கு கொஞ்சம் பேரை அக்கா என்று தான் கூபிடுகிறேன் .... உங்களில் பலர் என்னை விட பெரியவர்கள்..என்பதினால் ....

அருமை தங்கை நார்த்தனா உங்கள் ஹஸ்பன்டுகாக தான் பாதாம் பால் கொடுத்துள்லேன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஹரிரா பால், டெய்லி மட்டன் சம்மந்த பட்ட அயிட்ட்ம். இதெல்லம் செய்து கொடுங்கள். அவ்வளோ செய்து விட்டு நிங்க வேடிக்கை பார்க்க வேண்டாம் கொஞ்ச மாக எடுத்துகொள்ளுங்கள்.கொண்டாக்கனும் என்றீர்களே.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா....பாதாம் பால் கொடுக்கறேன் அக்கா..கொடுத்துவிட்டு உங்களிடம் சொல்கிர்றேன்.. .அப்புறம்.. நாங்கள் மட்டன் சாபிடுவது இல்லை...சிக்கன் கூட எப்போதாவது தான்...ரொம்ப நன்றி அக்கா...

மேலும் சில பதிவுகள்