அறுசுவையோடு நகைச்'சுவை'யையும் சேர்த்துக்கலாமா..?

"படம் பார்க்கிறப்ப பாட்டு ஸீன் வந்தபோது தம் அடிக்க
வெளியே போனதுலே அடிபட்டதா எப்படி?"

"வீடியோ பஸ்ல படம் பார்த்துக்கிட்டே போனப்ப
நினைவில்லாம தம் அடிக்க வெளியே போயிட்டேன்!"

************************************
"என்னுடைய ஹார்மோனிய வாசிப்புக்கே நிறைய
பாம்புங்க மயங்கி வந்திருக்குது தெரியுமா?"

"எப்படி நம்பறது?"

"இந்த ஹார்மோனிய பெட்டிக்குள்ளே கையை
விட்டுப் பாருங்க.... எத்தனை பாம்பு இருக்குன்னு
தெரியும்?!!"

************************************
"பந்த பாசங்களை அறுத்துவிட்டுதான் இங்கு வந்து
சேரவேண்டுமா குருவே?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... பத்து பவுன் செயினை
அறுத்துட்டு போலீசிடமிருந்து எஸ்கேப் ஆகித்தான்
நானே இங்கு வந்து சேர்ந்தேன்.!"

************************************
கூவத்துல ஒரு பிணம் ஒதுங்கி கிடக்குது சார்..."

"உடனே யாருன்னு விசாரிங்க.."

"நாலு தடைவை விசாரிச்சுப் பார்த்துட்டேன்.
வாயே திறக்க மாட்டேங்குது!"

************************************
இன்றைய வேடிக்கை விடுகதை...

பொதுவா எதுவும் உடைஞ்சுட்டா பயன்படாது..
ஆனா இது உடைஞ்சாதான் நமக்கு பயன்படும்..
'இது' எது..?

************************************

நகைக்க வைத்த நல்லசுவைக்கு நன்றி!

புதிருக்கு விடை தேங்காய் தானே?? (முட்டை என்று கூடச் சொல்லலாமோ???)

ஏண்டி முனியம்மா..? "உனக்கு என்ன அனுபவம் இருக்கு?
மூணாவது தெரு ராமசாமி வீட்லயும், அண்ணா நகர்
அழகேசன் வீட்லேயும் நீ வேலை செஞ்சதுக்கு என்ன
அத்தாட்சி?"

"என்னம்மா இப்படிச் சொல்லிட்டீங்க... அவங்க ரெண்டு
பேரும் கட்டின தாலியை பாருங்கம்மா!"
____________________________________________________

ஏம்பா பெயிண்டர்..? "ஆபரேஷன் தியேட்டருக்கு தமிழாக்கம்
என்னனு தெரியலைன்னா என்னைக் கேட்க வேண்டியதுதானே.
அதை விட்டுட்டு 'கொலைக்களம்'னு உன் இஷ்டத்துக்கு எழுதி
வெச்சுடறதா?"
_____________________________________________________

எங்க வீட்டு நாய்க்கு ஆறு அறிவு இருக்குமோன்னு சந்தேகமா
இருக்கு.."

"ஏன்..?"

"என் மனைவி பண்ற எந்த அயிட்டத்துலேயும் தப்பித் தவறிக்கூட
வாய் வைக்காது."'
_____________________________________________________

"தூங்கும்போது என் மனைவியோட வாய்க்குள்ளே கொசு
போயிடுச்சு!"

"தூங்கும்போதுகூட உங்க மனைவி வாயை மூட மாட்டாங்களா?"
______________________________________________________

இன்றைய வேடிக்கை விடுகதை..

ஒருத்தன் அதிசய வீடு கட்டினான்.. வாசல் பக்கத்தைத் தவிர
மற்ற 3 பக்கமும் தெற்கு பார்த்து இருந்தது... அது எப்படிங்க
சாத்தியம்..?
_______________________________________________________
தமிழ் ஜோக்ஸ். நகைச்சுவைத் தனியினம்.23-11-07.
_______________________________________________________

______________________________________________
அடிமை போல உழைக்க வேண்டும்; அரசன் போல உண்ண வேண்டும்.

______________________________________________________
அடிமை போல உழைக்க வேண்டும்; அரசன் போல உண்ண வேண்டும்.

இரண்டுமே சரி விதுபா..! பாராட்டுகள்..!

அடிமை போல உழைக்க வேண்டும்; அரசன் போல உண்ண வேண்டும்.

______________________________________________________
அடிமை போல உழைக்க வேண்டும்; அரசன் போல உண்ண வேண்டும்.

மேலும் சில பதிவுகள்