4 + மாத குழந்தையின் உணவுகள்

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவை தேர்ந்தெடுப்பதில் தான் பலருக்கும் சிரமம்..அதனால் இங்கே த்ரெட்டில் 4 + ,6+ 8+ என தனிதனியாக உணவுகளை பிரித்து தெரிந்த உணவுகளை கொஞ்சம் விளக்கமாக கொடுப்போம்..பின்னாளில் அட்மின் இதற்கு தனிபிரிவு கொன்டுவந்தால் இங்குள்ள உணவுகளை அங்கே கொடுக்க வசதியாக இருக்கும்....

6 மாதத்திற்கு முன்னேயே சில இடங்களில் குழந்தைகளுக்கு திட உணவை கொடுக்கும் பழக்கம் உண்டு..ஆனால் 4 மாதமாவது காத்திருப்பது நல்லது...4 மாதத்தில் கொடுப்பதானால் முழு ராகிப் பொடியில் கூழ் காய்ச்சினால் அது குழந்தைக்கு கொஞ்சம் ஹெவியாக இருக்கும்...கேரளாவில் இந்த முறையில் கூழ் காய்ச்சி சிறு குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்

முழு ராகி விதை 1/4 கப் இரவே தன்னீரில் ஊறவைத்து காலியில் மிக்சியில் இட்டு அரைத்து தனீர் சேர்த்து வடிகட்டி கிடைக்கும் ராகிப் பால் 4 ஸ்பூனுடன் 3/4 கப் பசும்பாலும் கொஞ்ஹம் வெல்லமும் சேர்த்து கிளறிக் கொன்டே அடுப்பில் மிதமான தீயில் வைத்தால் சிறிது நேரத்தில் கொதித்து கூழ் கெட்டியாகத் தொடங்கும்..கொதித்தவுடன் தீயை குறைத்து விட்டு 3 நிமிடம் முடி இட்டு வைக்க வும்..இப்பொழுது சுவையான குழந்தைகளுக்கு ஏற்ற ராகிபால் கூழ் தயார்....
இதனை தினம் தினம் செய்ய இளம் அம்மாக்களுக்கு சிரமம்...அதனால் ஊருக்கு போகும்போதே ஒரு 2 கிலோ ராகியை ஊறவைத்து க்ரைன்டெரில் தன்னீர் சேர்த்து ஆட்டி வெள்ளை காட்டன் துனியில் வடிகட்டி அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு வைத்து 2 மனிநேரம் விட்டால் தன்னீர் மேலேயும் அதன் மாவு கீழேயுமாக தங்கி நிற்கும்....தன்னீரை மட்டும் கொட்டி விட்டு மாவை வெயிலில் கிள்ளி கிள்ளி வைத்து காயவிட்டு மிக்சியில் இட்டு பொடித்து வைத்துக் கொன்டால் அது குழந்தைக்கு 8 மாதம் ஆகும்வரையில் நிற்கும் அளவு இருக்கும்..இதிலிருந்து 1 ஸ்பூன் பொடியை எடுத்து பாலுடன் கலந்து கூழ் செய்தால் போதும்

மேலும் சில பதிவுகள்