உபயோகமான செடிகள்?

நர்மதா, இந்த கேள்வி உங்களுக்கு தான்! நீங்க வீட்ல செடி ஏதும் வளர்க்கறீங்களா? அதாவது இந்த மல்லி, புதினா, வெந்தயம் போன்று சமையலுக்கு உபயோகமான செடிகள்.. வெயில் அடிக்கத போதும் வளர்க்க முடியுமா? உங்களுக்கு தான் இங்க இருக்கும் க்ளைமேட் பத்தி தெரியும்னு கேட்கறேன்!! தெரிஞ்சா சொல்லுங்களேன்.

அன்புடன்,
ஹேமா.

அன்பின் ஹேமா,
எனக்கும் பக்கங்கள் திறக்கிறதுல பிரச்சனை தான். அதால உங்கட கேள்விய நான் கவனிக்கவில்லை. சாரி.

நான் மல்லி, புதினா, வெந்தயம் எதுவும் வளர்க்கவில்லை. ஆனால் வீட்டினுள்ளே வைத்து செவ்வரத்தை (செம்பருத்தி), மல்லிகை, ரோஜா, மணி பிளான்ட், மூங்கில்(), கக்டஸ், மற்றும் சில க்ரோட்டன் வளர்க்கிறேன். பட்டுப் போகாமல் வளருகின்றது. ஆனால் வள்ர்ச்சி வீதம் குறைவுதான். பூக்களும் குறைவு.

இம்முறை பேசில் செடி வளர்த்தேன் (3 வாரங்களிற்கு முன்) ஆனால் பட்டுப் போய் விட்டது. நான் பூச்சட்டியும் மண்ணும் மாற்றவில்லை. அதனாலோ தெரியாது. நீங்கள் சொல்லும் புதினா, மல்லி எப்படி வளர்ப்பது என்று தெரியவில்லை. கனடாவில் இதனை வீட்டினுள்ளே வளர்க்கலாம் என்று மனோஹரி மேடம் சொல்லியிருந்தார்கள் தானே. அப்படியென்றால் இங்கும் தாராளமாக வளர்க்கலாம் என்றே நினைக்கிறேன். கனடாவின் குளிருடன் ஒப்பிட்டால் நாங்கள் குடுத்துவைத்தவர்கள்தான். இடையிடையே வெயிலும் தலைகாட்டுதுதானே :) (இன்றும்கூட)

வெயில் வரும் போது செடிகளை ஜன்னலிற்கு கிட்டே எடுத்து வைத்தால் வெளிச்சமும் சூடும் கிடைக்கும். வெளியே வைத்தால் தான் குளிர். நான் அப்படித்தான் செய்கிறனான். (அதுவே பெரிய எக்சர்சைஸ் மாதிரி) :)

நானும் இந்த செடிகளை ட்ரை பண்ணுறேன். பார்க்கலாம். நீங்களும் ட்ரை பண்ணுங்க.
-நர்மதா :)

ஹேமா, நான் மூனு வருஷமா இந்த தக்காளி, புதினா, கொ.மல்லி வளர்க்க ட்ரை பண்றேன். ம்ஹூம், ஒரு இலை கூட விட மாட்டுது. முதல் வருடம் மண்ணில் நட்டேன். அப்பவும் வளரவில்லை. அதற்கு அடுத்து தொட்டியில் வெச்சு பாத்தேன். அப்பவும் வளரவில்லை. தக்காளி மட்டும் வளர்ந்து ஒரே ஒரு காய் வந்தது. அதையும் என் பையன் பாலில் அடித்து கீழே விழுந்து போச்சு:-( இதற்கு மேல் என்ன பண்ணுவது? இங்கு US-ல் யாராவது தொட்டியில்/மண்ணில் செடி வளர்த்து வெற்றிகரமாக பறித்து சமைத்து இருக்கிறீர்களா? அப்படியென்றால் எப்படி செய்தீர்கள் என்று ஹேமாவிற்கு சொல்லவும்.(அப்படியே நானும் தெரிஞ்சுக்கிறேன்)

நானும் போன சம்மர்ல தக்காளி செடி வச்சேன்..அதுக்கு தொட்டி,மண்,ப்ளாண்ட் ஃபுட் கூட வாங்கி பயன்படுத்தினேன்.. என்னமோ செடி ரொம்ப ஸ்லோவா வளந்தது..இப்போ குளிர் ஆரம்பிக்கும்போதுதான் ஒரு 10 காய் வந்தது..எல்லாம் சின்ன சின்ன காயா இருந்தது..ப்ச்.. ஒன்னும் யூஸ் இல்ல.. எனக்கும் வீட்டுக்குள்ள வைக்கிற மாதிரி செடி இருந்தா சொல்லுங்க..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

விதைகள் வாங்கி ஸ்பிரிங்கில் போட்டால் லேட் சம்மரில் அல்லது ஃபாலில் காய்கள் பிடுங்கலாம். எனக்கு தெரிந்த ஒருவர் செர்ரி தக்காளி, கத்தரி இவ்வாறு பயிரிட்டார். இந்த வருடம்தான். தக்காளி நிறையவே காய்த்தது.

அம்பிகா உங்களுக்காகவே Ziti பாஸ்தா குறிப்பு போட்டேன். பார்த்தீர்களா?
-நர்மதா :)

வணக்கம் நாங்கள் பாஸ்டனில் இருக்கிறோம் வீட்டில் செடிகள் ரெம்ப அருமையாக வரும் 5 வருஷமாக நாங்கள் வளர்க்கிறோம். ஆனால் இதுseason time அல்ல ஒவ்வொரு வருடம் பிப்ரவரி மாதம் தக்காளி, பெப்பர், ஆனியன், கொத்தமல்லி வாங்கி அதனை வேற பெரிய pot ல் மாத்தி தண்ணிர் விட்டு வெயிலில் ஜன்னல் கிட்ட வைக்கவும் தினமும் தண்ணிர் விடவும் மே அல்லது ஜுன் மாதம் வெளியில் கொண்டு வைக்கவும் பாட்டோட வைக்கலாம் அல்லது நேரடியாக மண்ணில் வைக்கலாம் கண்டிப்பாக தக்காளிக்கு வெயில் தேவை மே ஜுன்க்குள்ளே தக்காளியில் பூ பூக்க ஆரம்பித்துவிடும்last summer ல் திடீரென்று இந்தியா செல்லவேண்டியிருந்ததால் 2 மாதம் கவனிக்க முடியாமல் போயிருச்சு. ஆனாலும் நான் வந்த பிறகும் தக்காளி 50 காய் பறித்தேன் பெப்பர், ஆனியன் நல்லா வந்தது.
கொத்தமல்லி விதை போடவும் வெந்தயம் சீக்கிரம் வரும் புதினா மட்டும் நான் ட்ரை பண்ணியது இல்லை எனக்கு புதினா பிடிக்காது

தங்க தலைவி நர்மதா வாழ்க....மன்னிச்சிடுங்க கொஞ்ச நாளா ஊரில் இல்ல....இப்போதான் பாஸ்தா குறிப்பை பார்த்தேன்..கண்டிப்பா செய்யறேன்..இந்த குறிப்பு போதுமென்று நினைக்கிறேன்...100 க்கும் மேல் குறிப்புகளை கொடுத்து அசத்தி இருக்கீங்க..என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

ஹாய் ஸ்வேதா.. நீங்க எங்க கொத்த மல்லி விதை வாங்குனீர்கள்?? க்ரோகரில் சிலான்ட்ரோ விதைதான் கிடைத்தது...அதுல நம்ம கொத்த மல்லி வாசமே வரல..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

கிடைக்கும்

மேலும் சில பதிவுகள்