பீன் ஸ்ப்ரௌட் எக் மசாலா

தேதி: November 26, 2007

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 2
பீன் ஸ்ப்ரௌட் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லிக்கீரை - 2 தண்டு
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் பீன் ஸ்ப்ரௌட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
மிளகாய்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறவும். முட்டை ஓரளவு வெந்ததும் 1/4 கப் தண்ணீர் விட்டு கிளறவும். மல்லிக்கீரை தூவி இறக்கவும்.


சப்பாத்திக்கு ஏற்றது. ப்ரெட் ஸ்லைசின் இடையே வைத்தும் சாப்பிடலாம். பீன் ஸ்ப்ரௌட் அதிகம் வெந்தால் சுவை குறைந்து விடும். சத்தான விரைவாக சமைக்க கூடிய ஒரு சைட் டிஷ்.

மேலும் சில குறிப்புகள்