கார அடை

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்,
பச்சரிசி - 2 டம்ளர்,
கடலை பருப்பு - 3/4 டம்ளர்,
துவரம் பருப்பு - 1/2 டம்ளர்,
பாசி பருப்பு - 1 கைப்பிடி,
சின்ன ஜவ்வரிசி - 1 கைப்பிடி,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
தேங்காய் துருவல் - 1/4 மூடி,
காய்ந்த மிளகாய் - 6,
தனியா - 2 தேக்கரண்டி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
பூண்டு - 5 பல்,
மிளகு - 1 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
கொத்துமல்லி - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது.
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க:-
கடுகு - 1/2தேக்கரண்டி,
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,


 

புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, சின்ன ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு கிரைண்டரில் போட்டு, மிளகாய், தனியா, சோம்பு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மிளகு, உப்பு சேர்த்து ரவை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும்.
வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், எல்லாவற்றையும் வதக்கி மாவில் கொட்டி, நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து, சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றி எண்ணெய் விட்டு, திருப்பி வேக விட்டு எடுக்கவும்.


தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, அவியல், வெல்லம் + வெண்ணெய் பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் செல்வி எப்படி இருக்க? நேற்று மத்திய உணவுக்கு இந்த அடையைச் செய்தேன், ரொம்ப நல்லாயிருந்தது,அளவுகளில் மட்டும் சிறிது குறைத்துக் கொண்டேன் ஜவ்வரிசி சேர்த்த சுவை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.நன்றி.

அன்பு தோழி மனோகரி.
மதிய உணவுக்கா? எனக்கு கூட சாதத்தை விட டிபன் தான் பிடிக்கும். உங்களுக்கும் பிடிச்சிருந்தா ரொம்ப சந்தோஷம். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.