இனிப்பு கொத்தமல்லி துவையல்

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்தமல்லி தழை -- இரண்டு கட்டு (சுத்தம் செய்து கனமான காம்புகளை நீக்கிவிடவும்)
நீள சிவப்பு வத்தல் -- 5 என்னம் (குண்டு வத்தல் எனில் 8 என்னம்)
புளி -- சிறிய எலுமிச்சை அளவு
உப்பு -- ருசிக்கேற்ப
கருப்பட்டி -- ருசிக்கேற்ப (துருவிக்கொள்ளவும்)
நல்லெண்ணைய் -- 5 ஸ்பூன்


 

வெறும் வாணலியில் வத்தலையும் புளியையும் வதக்கி பின் ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு கொத்தமல்லி தழையை போட்டு ஒரு வதக்கு வதககி அடுப்பை அணைத்து விட்டு அதை வாணலியின் சூட்டில் அப்படியே வைக்கவும்.
பின் சூடு ஆறியதும் இவற்றை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
வாணலியை காயவைத்து மீதியுள்ள எண்ணையை ஊற்றி அரைத்த கலவையை போட்டு ஒரு நிமிடம் வதக்கி பின் கருப்ப்பட்டியை சேர்க்கவும்.
ஊற்றி எண்ணைய் மேலெ வரும் வரை வதக்கி இறக்கவும்.
சுவையான இனிப்பு கொத்தமல்லி துவையல் ரெடி.


தண்ணீர் அதிகம் ஊற்றினால் துவையாலக இல்லாமல் சட்னி போன்று ஆகி விடும்.
கருப்பட்டி, சூட்டில் இளகி இன்னும் தண்ணீராக ஆகிவிடும்.
எனவே துவையல் கெட்டியாக இருக்கவேண்டும்.

மேலும் சில குறிப்புகள்