சடங்கு, சம்ரதாயங்கள் பற்றி...

தோழிகளே நாம் இங்கே சாதி,மத, இன,மொழி(?) வேறு பாடுகள் இல்லாமல் ஒன்றாக கலந்து ஆலோசிக்கிறோம்.
எனக்கு தெரியாத சாதி சடங்குகள் பற்றியும், மத சடங்குகள் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் கலந்து ஆலோசிக்கலாம்......

பிறந்த குழந்தையின் வாயில் சர்க்கரை தண்ணீர் வைப்பது பற்றி விளக்கவும்.

குழந்தையின் கழுத்தில் கொடி சுத்துவது என்றால் என்ன?
கூருங்களேன்...
ஒவ்வோரு வருக்கும் ஒரு விதமான சடங்குகள் இருக்கும் அதை பற்றி

பட்சிலம் குலந்தைக்கு தாய்பால் தவிர எதுவும் கொடுபது ரொம்ப தவறு இது என் கருத்து,,,மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

குழந்தைக்கு முதன் முதலில் நாவில் தேனை தடவி இரண்டு காதிலும் தொழுகைக்கு உரிய பாங்கு சொல்வோம்.
ஜலீலா

Jaleelakamal

ஆமாம்,பாங்கு சொல்லுவோம்...ஆனால் தேன்லாம் கொடுக்கமாட்டோம் ஜலீலாக்கா,உன்கள் பிஸ் பிரை ரொம்ப அருமை..HUSBAND பாராட்டு எனக்கு.....என் பாராட்டு உன்களுக்கு..THANK YOU...மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பிறகு பிறந்த குழந்தையின் முடியை மொட்டை அடித்து அந்த முடிக்கு எடைபடி வெள்ளி தானம் செய்யனும்னு சொல்வாங்க..முடியை அளக்க கஷ்டம்கரதால பொதுவா எல்லாரும் ஒரு யூகத்தில் காசை இல்லாதவங்களுக்கு கொடுப்பாங்க.

தளிகா:-)பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் ஆன் குழந்தைக்கு 2 ஆடும் அறுத்து கறியில் பெரும்பங்கை ஏழைகளுக்கு கொடுப்பது வழக்கம்.அதனை அகீகா ந்னு சொல்வாங்க...பொதுவாக அது பிறந்து ஏழாவது நாள் முடி மொட்டை அடித்து விட்டு கொடுப்பது வழக்கம்.

குழந்தை கருவில் இருக்கும் போது உணவு தாயிடமிருந்து பிளசென்டா(தொப்புள் கொடி) மூலம் தான் babykkuசெல்லும்.சில நேரங்களில் baby பிறக்கும் போது இந்த கொடி கழுத்தை சுற்றி இருக்கும்.இதைத் தான் கொடிசுற்றுவது என்பர்

நம்ம ஊரில் இன்றும் குழந்தையின் நாவில் சக்கரைத் தண்ணீரை பிறந்தவுடன் முதலில் கொடுப்பது வழக்கம். அது எதற்கு என்று தெரியவில்லை. வாழ்க்கை என்றும் இனிக்க வேண்டும் என்ற ரீதியில் ஆரம்பித்தார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் அது நல்லதோ கெட்டதோ நாம பிறந்தப்பவும் அப்படித்தான் செய்திருப்பார்கள். எனக்கென்னவோ அதனால் பெரிய ஹெல்த் இஷ்யூ வந்ததாக தெரியவில்லை. சுத்தமில்லாமல் தாய்ப்பால் கொடுத்தாலும் அது குழந்தைக்கு நல்லதல்ல என்பது என் கருத்து. ஒரு ஸ்பூனில் குழந்தைக்கு ஒரு சொட்டுத்தான் வாயினுள் போகும். நானும் என் பையனுக்கு அம்மா சொன்னபோது மறுப்பேதும் சொல்லல. என் அக்கா பொண்ணுக்கு நான் தான் முதலில் சக்கரைத் தண்ணீரை ஒரு ட்ராப் வாயில் ஊற்றினேன்.

அடுத்ததாக கொடி சுற்றிப் பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்பார்கள். இதற்கு பரிகாரமாக குழந்தையை மாமா முதலில் பார்க்கும்போது ஒரு வெள்ளிக் கொடியை(செயினை) கழுத்தில் போட்டு விட்டு பிறகு குழந்தையை தூக்க சொல்ல வேண்டும் என்றும் சொல்வார்கள். எனக்கென்னவோ இது நகையை வாங்குவதற்கு ஒரு நல்ல ஐடியாவா இருக்கேன்னு ஆரம்பிச்சதா இருக்கும்னு தோணுது. நம்ம ஊரில் அந்த காலத்தில் இந்த மாதிரி பிசி லைப் இருந்திருக்காது. அதனால் கிராமத்தில், ஆலமரத்து அடியில் உட்கார்ந்துட்டு நல்லா கதை பேசிட்டு இருந்தவங்க ஆரம்பிச்சதுதான் இதெல்லாம்னு தோணுது.

கண் திருஷ்டியும் அப்படித்தான். யாரோ வேறு பதிவில் கேட்டதுக்கு இங்கே பதில் கொடுக்கறேன். ஆனாலும் நாமெல்லாம் பல விஷயங்களை வழி வழியாக கேள்வி கேட்காமல் செய்ய பழகிட்டோம். நான் சிறு வயதில் இதைப் பற்றி ரொம்ப கேட்டாலும் வீட்டில் பாட்டிக்கிட்ட திட்டுதான் கிடைக்கும். அதேபோல் தனக்கென்று வரும்வரை ஆயிரம் கேள்வி கேட்டுக் கிண்டலடிக்கும் நாமே நமக்கென்று வரும்போது மாறிப் போய் விடுகிறோமோ என்றும் தோன்றுகிறது. இந்த கண் திருஷ்டி கழிப்பதும் அப்படித்தான். இது போன்ற பழக்கங்கள் அழியாமல் தொடர்வதும் அதனால்தான். என் அத்தை ஒருத்தவங்க கண் திருஷ்டி போக தினமும் மூணு விளக்கமாறுக் குச்சியை எடுத்து பையனை எச்சில் துப்ப வைத்து அதனை பிறகு காஸ் ஸ்டவ்வில் பற்ற வைத்து தூக்கிப் போடுவார்கள். பிறகு எலுமிச்சையை வைத்து சுற்றுவார்கள். என் பிரெண்டோட அம்மா மிளகாய், உப்பு சுற்றுவார்கள். என் பெரியம்மா பொண்ணு உப்பை கையில் குழந்தையை சுற்றிப் போட்டு பிறகு உப்பை தண்ணீரில் போடுவார்கள், உப்பு கரைவது போல திருஷ்டியும் கழிந்துவிடுமாம். என் பையன் பிறந்தப்ப என் அம்மா மிளகாய், உப்பு போட்டு சுற்றி அதை நெருப்பில் போட அதன் நெடி யாரையும் டிஸ்டர்ப் பண்ணிடக்கூடாதேன்னு என் கணவர் அந்த மண் சட்டியை எங்கேயோ காடு மாதிரி உள்ள இடத்தில் வெச்சுட்டு வந்து, இனி திருஷ்டி சுத்தவே கூடாதுன்னு சொல்லிட்டார். விவேக் சொல்ற மாதிரி ஆயிரம் பெரியார் வந்தாலும் நம்மளை திருத்த முடியாதுன்னு சொல்லிக்க வேண்டியதுதான்.

கண் திருஷ்டி உண்மைன்னா இப்ப சினிமா, அரசியல்னு கொடிக்கட்டி பறக்கற எத்தனையோ பேரைப் பார்த்து எவ்வளவு பேர் பொறாமைப் பட்டிருப்பார்கள். அவர்களின் கண் திருஷ்டி இவர்களையெல்லாம் என்ன பண்ணும். நல்லா தானே இருக்கிறார்கள். என் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி, என் பையனை தூங்கும்போது கொஞ்சாதே, பொட்டு வைக்காதேன்னு சொல்றாங்க. தாய்க் கண் பொல்லாததுன்னு வேற சொல்வாங்க. என் பையனை நான் அப்போது கொஞ்சினால்தான்ன் உண்டு. மற்ற நேரங்களில் ஒரு இடத்தில் நிற்க மாட்டான்.

அதிகம் படிக்காத இன்று பிரபலமாக இருக்கும் பலர் அதற்கு முன்பு அவர்கள் வீட்டில் அதிர்ஷ்டத்துக்காக பெங்ஸ்யூ, வாஸ்துன்னு வைத்திருந்தார்கள் என்று சொல்ல முடியாது. திறமை மட்டும் இல்லாம இது போன்ற அதிஷ்டம் வரும்னு சில பொருட்களை வீடு முழுசும் நிரப்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. சிலர் வீட்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பூக்களை நிரப்புவார்கள். அது பார்க்க அழகாக இருக்கிறது என்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல் Wind Chimes நல்லா இருக்கும். மீன் தொட்டி வைப்பதும் நன்றாக இருக்கும். இப்படி அழகுப்படுத்தும் பொருட்களை அதிர்ஷ்டப் பொருட்களாக கருதுவதுதான் சரியில்லை. மற்றவர்களும் அவர்களுக்கு தெரிந்த சம்பிரதாயங்களை எழுதினால் நன்றாக இருக்கும். ரொம்ப நாள் கழித்து அறுசுவையில் எழுதுவது சந்தோஷமாக இருக்கிறது.

குழந்தை பிறந்ததும் பாங்கு எனும் தொழுகையின் அழைப்பை காதில் சொல்லுவதும்,லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ் (இறைவன் ஒருவனே.அவனுடைய தூதர் முஹம்மது நபி(ஸல்)என்ற அரபி வார்த்தைகளை சுத்தமான தட்டில் தேன் கொண்டு எழுதி அதை ஜம்ஜம் நீர் கொண்டு கரைத்து குழந்தைகளுக்கு புகட்டுவோம்
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்