200 சமையல் குறிப்புகளை கொடுத்த சகோதரி சுபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

சுபா, ஊருக்குப் போய் வந்து அதே வேகத்திலேயே 200 குறிப்புகள் கொடுத்து சாதனைப்படைத்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.

மிகவும் நன்றி வினோதா அவர்களே,
வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி.
இது மிகுந்த ஊக்குவிப்பாக அமையும்.

சுபா, போகிற போக்கில் எதை சமைப்பது, எதை விடுப்பதுன்னு தலையைப் பிச்சுக்கப்போறோம்னு நினைக்கிறேன். அறுசுவை தளத்தில அப்படியே குறிப்புகளா வந்து கொட்டுது.

கூடிய சீக்கிரம் 300, 400ன்னு ஸ்பீடா போய்டுங்க.
வாழ்த்துக்கள்.
குட்டிப் பையன் திவாகரையும் சமாளிச்சுண்டு இவ்வளவு ஸ்பீடா குறிப்புகள் கொடுக்கறதுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

சுபா டபுள் செஞ்சுரி போட்டாச்சா.ஜெட் வேகம்தான்.வாழ்த்துக்கள் சுபா.சீக்கிரமா ட்ரிபிள் செஞ்சுரியும் போட்டிடுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயந்தி'கா,
மாமா எப்டி இருக்காங்க?
ஆபிஸ்க்கு லீவு போட்டீங்களா?

வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி. சந்தோஷமாக உள்ளது.

சுபா கண்ணு, வாழ்த்தியது நானு, வின்னி என்கிற வானதி. சரி, சரி யார் வாழ்த்தினா என்ன. இதே ஸ்பீடில் போனா சீகிரம் 300 குறிப்பை எட்டிடுவீங்கன்னு நினைக்கிறேன்.

இரட்டை சதத்துக்கு இனிய வாழ்த்துக்கள்!!!
நாளை பாசிப்பருப்பு பாயசம் செய்து கொண்டாடிடலாம்!

கவி,
என்ன இது ஆசை யாரை விட்டது?
300, 400 இதை நினைக்கவே பயமாக உள்ளது..
கடவுள் நினைத்தால் முடியும்..

அன்புள்ள சுபா

இன்னும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

வின்னி ,வானதி ---> வினோதா??
மன்னிக்கவும் வானதி முதலில் வின்னி என்றே எழுதலாம் என்று உணர்ச்சிவசப்பட்டு வினோதா என கரெக்ட்டாக எழுதுவதாக நினைத்து தப்பாக எழுதிவிட்டேன்...
சாரி

இரட்டை சதமடித்த சுபாவிற்கு என் வாழ்த்துக்கள்.ஊருக்கு போய் நிறைய குறிப்புகள் செய்து எல்லொரையும் அசத்தி விட்டீர்களா?

மாலினி

மேலும் சில பதிவுகள்