அரிசியை உப்புமாவுக்கு உடைக்கும் முறை

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 1 கிலோ,
கடலைப்பருப்பு - 1 கைப்பிடி,
துவரம் பருப்பு - 1 கைப்பிடி,
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - 2,
சீரகம் - 2 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது.


 

அரிசியை கழுவி காய வைக்கவும். பருப்புகள் மூன்றையும் தனித்தனியே வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.
காய்ந்த அரிசி, வறுத்த பருப்புகள், சீரகம், மிளகாய், பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து மிஷினில் ரவை போல் உடைத்து வைத்துக் கொள்ளவும்.
தேவையான போது வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து ஒரு டம்ளர் ரவைக்கு இரண்டரை டம்ளர் தண்ணீர் வைத்து உப்பு சேர்த்து கொதித்த பின் உடைத்த ரவை சேர்த்து கிளறி பொலபொலவென வெந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Mixie yil udaikalama madam?

Mixie yil udaikalama madam?

அன்பு தோழி
அரிசி உப்புமா இந்த முறையில்ஈசியாக செய்யமுடியுது.உப்புமா அதிக ருசியுடன் இருக்கு.thankyou செந்தமிழ் செல்வி

அன்பு தோழிகளே,

அன்பு விஜி,
இந்த முறையில் அரைத்து வைத்துக் கொண்டால் மாதத்திற்கும் வைத்திருக்கலாம். சுலபமும் கூட. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம் நேற்று உப்புமாவுக்கு அரிசி உடைத்தேன் உங்கள் குரிப்பை பார்த்துதான்.என் மாமியார் இதனுடன் மிளகு போட்டு அரைப்பார்கள்.என் ஹஸ்ஸுக்கு அதில் மிளகு இருப்பதால் பிடிக்காது ஆனால் இப்போ இது பிடிக்கும் என நினைக்கிரேன்.தேங்ஸ் மேம்.

அன்பு தனு,
எனக்கும் மிளகு சேர்த்தால் பிடிக்காது, அதன் இந்த அரிய (!) கண்டுபிடிப்பு. உப்புமா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.