தேதி: November 27, 2007
பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - 2 கப்,
இளசான முருங்கக்கீரை - 2 கைப்பிடி,
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
வாணலியில் எண்ணெய் விட்டு முருங்கக்கீரையையும், சிறிது உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
மாவுடன், வதக்கிய கீரை, சீரகத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து, மாவு தொட்டுக் கொண்டு மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி கல்லில் லேசாக எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்.