சாத ஊத்தப்பம்

தேதி: November 28, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாதம் - 2 கப்,
அரிசி மாவு - 1 கைப்பிடி,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
தயிர் - 1 மேசைக்கரண்டி,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - சுடுவதற்கு.


 

சாதத்தை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சாதத்துடன் அரிசி மாவு, தயிர், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கெட்டியாக சிறிது தண்ணீர் விட்டு கரைக்கவும்.
தோசைக்கல்லில் சிறிது மொத்தமாக ஊற்றி, எண்ணெய் விட்டு, சிவக்க விட்டு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.


தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi selvi akka,

neenga sonna mari rice uththappam senju pathen.dosai kallula otikiruthu.dosai mariyae varala.dosai thirupavae varala.nan ena pana?

எந்த தோசையும் எடுக்கவராவிட்டால் சிரிது கோதுமாய் மாவு போட்டு கலந்து தோசை செய்தால் மிக நன்ட்ராக எடுக்க வரும். சைது பார்க்கவும்

டியர் மது,
அரிசி மாவு இன்னும் கொஞ்சம் சேர்த்து பார்த்திருக்கலாம். மாவை ரொம்ப தண்ணியாக கரைக்கக் கூடாது. ஊத்தப்பம் போல கொஞ்சம் மொத்தமாக ஊற்ற வேண்டும். விஜயா சொன்னது போல கோதுமை மாவு, அல்லது சிறிது மைதா கலந்தும் ஊற்றலாம். தணல் அதிகமாக வைக்காமல், மீடியமாக வைக்கணும். தோசைக்கல்லில் பிரச்னை இருந்தாலும் பிடிக்கும். இதில் எல்லாம் சரி பார்த்து, அடுத்த முறை செய்து பாருங்கள். சாதம் மீதும் போதெல்லாம், நான் சரளமாக செய்யும் ஒரு குறிப்புதான் இது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சாத ஊத்தப்பம் ரொம்ப நல்லா இருந்தது..

ஆஃபிஸ் விட்டு வீட்டுக்கு போய் செம்ம பசி...சீக்கிரமா செய்யற மாதிரி யோசிச்சேன்...எப்பவோ உங்க குறிப்பு படிச்ச ஞாபகம் வந்துச்சு... சாதமும் நிறைய இருந்தது.. அப்பறம் என்ன...

ஆனா செய்யறப்ப பயமாதான் இருந்தது...நல்லா வருமான்னு...என் ஹஸ் க்கும் தங்கைக்கும் எச்சரிக்கை பண்ணிட்டுதான் செஞ்சேன்...ஆனா சூப்பரா வந்துச்சு... ஒரே பாராட்டுதான்...என் தங்கை மீந்த சாதத்துலதான் செஞ்சேன்னு நம்மவே இல்ல :-)

பெரியாளாயிட்டோம்ல :-)

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

மொய் வச்ச மாதிரி 501 குறிப்புகள் குடுத்து அசத்தி இருக்கீங்க.... வாழ்த்துக்கள்...இன்னம் நிறைய குறிப்புகள் குடுத்து என்னை மாதிரி ஆளுங்களையும் பெரிய ஆளாக்குங்க :-)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அன்பு சங்கீதா,
சாத ஊத்தப்பம் சாதம் மீதும் போதெல்லாம் சுலபமாக, சுவையாக செய்யலாம். சாதம்னு தெரியவே தெரியாது.
இப்பத்தான் பெரிய ஆளா ஆனாயா? உயரத்திலேயா? அகலத்திலேயா? எனக்கு என்னமோ இரண்டாவது தான் சரின்னு தோணுது:-))

ஹாஹாஹா, மொய் வச்ச மாதிரியா? நல்லா இருக்கு, போ. பாராட்டுக்கு மிக்க நன்றி.
பொங்கல் வாழ்த்துக்களா? பொண்ணே! கிறிஸ்மஸ் வாழ்த்து போயே போச்சு. உனக்கு என் வொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.

டவுட்டே இல்லாம அகலத்துலதான் :-)

நீங்க கிறிஸ்டியனா?

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

ஆமாம்.

அன்புடன்,
செல்வி.

சேம் பின்ச், எப்படி மது இது அய்யோ நானும் நேத்து இது செய்தேன். மது எனக்கு தோசை நல்லா வந்துச்சு. ஆனா நான் கொஞ்சமாத்தான் செய்தேன். சாதம் கொஞ்சம் இருந்துச்சு. உங்க தோசை கல்லில் வெங்காயத்தை கட் பண்ணிட்டு தேய்த்துவிட்டு பிறகு ஊற்றி பார்க்கவும் மது. bye madhu

செல்விமா தோசை சூப்பர் எப்படி செல்விமா உங்களால மட்டும் இப்படி டிபரண்டா யோசிக்க முடியுது. இது உங்க ஓன் ரெஸிபியாமா?

அன்பு தீபா,
நல்லாயிருக்கியா? ரொம்ப நன்றிம்மா உன் பாராட்டுக்கு. நாங்க சாதம் ஒரு வேளை மட்டும்தான் சாப்பிடறதால, சாதம் மீந்து போனா அதை வேறி வழில மாத்திடுவேன். இதுபோல சாத ரெசிபி நிறைய இருக்கும். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.