சேனைக்கிழங்கு டிக்கீஸ்

தேதி: November 28, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேனைக்கிழங்கு - 250 கிராம்,
பொட்டுக்கடலை - 100 கிராம்,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
பெரிய வெங்காயம் - 1,
காய்ந்த மிளகாய் - 4,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.


 

சேனைக்கிழங்கை தோல் சீவி குக்கரில் 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
தண்ணீரை வடித்து நன்கு மசிக்கவும்.
பொட்டுக்கடலை, சோம்பு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் நைசாக பொடித்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அத்துடன் மசித்த சேனைக்கிழங்கு, பொடித்த பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தட்டவும்.
தட்டிய டிக்கீஸை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். (எண்ணெய் அதிகம் காய்ந்திருக்கக் கூடாது, மிதமான சூட்டில் இருக்க வேண்டும்).


சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்