ஆலு டிக்கி

தேதி: November 28, 2007

பரிமாறும் அளவு: 10 டிக்கிகள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

டிக்கிக்கு:-
========
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது),
கடலைப்பருப்பு - 50 கிராம் (வேக வைத்தது),
பச்சை பட்டாணி - 100 கிராம் (வேக வைத்தது),
பனீர் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 3,
மிளகாய் தூள் - 5 தேக்கரண்டி,
சாட் மசாலா - 2 தேக்கரண்டி,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - சுடுவதற்கு.
இனிப்பு சட்னிக்கு:-
===============
புளி கரைசல் - 1 கப்,
வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
சுக்குப் பொடி - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

உருளைக்கிழங்கை நசுக்கி, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், சிறிது உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.
வெந்த பச்சை பட்டாணி, கடலைப்பருப்பு, பனீர் சேர்த்து பிசையவும்.
அதனுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஏற்கனவே பிசைந்து வைத்த உருளைக்கிழங்கை சிறு சிறு கிண்ணம் போல் செய்து, உருட்டிய உருண்டைகளை அதனுள் வைத்து மூடி வட்டமாக தட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு 4, 5 டிக்கிகளாக போட்டு, ஒருபுறம் சிவந்ததும், திருப்பிப் போட்டு பொன்னிறம் வந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.
புளிக்கரைசலுடன் வெல்லம், சுக்குப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கெட்டியான பின் சிறிது எண்ணெயில் சீரகம் பொரித்து கரைசலுடன் சேர்த்து இறக்கவும்.
டிக்கிகளை இனிப்பு சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்