தக்காளி சூப் ( குழந்தைகளுக்கு)

தேதி: November 29, 2007

பரிமாறும் அளவு: இரண்டு குழந்தைகளுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

பழுத்த தக்காளி - இரண்டு (நான்காக வெட்டியது)
சாம்பார் வெங்காயம் - கால் கப் (பொடியாக அரிந்தது)
இஞ்சி - அரை இன்ச்(பொடியாக அரிந்தது)
பட்டர் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
வெல்லம் - ஒரு பின்ச்
கார்ன்ஃப்ளார் - அரை தேக்கரண்டி


 

குக்கரில் தக்காளி, வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்து வேக விட்டு மூன்று விசில் வந்ததும் இறக்கி ஆற வைத்து வடிகட்டவும்.
தனியாக ஒரு சட்டியில் பட்டர் போட்டு வடிகட்டிய தக்காளியை ஊற்றி அதில் வெல்லம், மிளகு தூள் சேர்த்து கார்ன்ஃப்ளார் மாவு கரைத்து ஊற்றி இறக்கி குழந்தைகளுக்கு பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலாக்கா தக்காளி சூப்பையும் வெங்காய இறாலும் செய்துவிட்டேன்...ரெண்டும் சூப்பெர்..இறால் எனக்கு பிடித்தமான ஒன்று..நல்ல தொண்டை வலி இப்ப அதுக்கு சூடா தக்காளி சூப் குடிச்சப்ப ஆஹா அப்படியே நடுவில் நான் அரியாசனத்தில் உக்கார இருபுறமும் மயிலிரகை வெச்சு வீசி விட்ட மாதிரி ஒரு சுகம்.தொண்டை வலி பாதி போன மாதிரி இருக்கு..நான் எல்லா பொருட்களைய்டும் ஒன்றாஇ வேக வைத்து கசைசியில் கொஞ்சம் மிளகுத் துள் மட்டும் சேர்த்தேன்.மிக்க நன்றி.

தளிக்கா குழந்தைக்கு கொடுத்டீங்களா நீங்க குடிச்சீங்களா.
இங்கதான் நமக்கு ஆப்பிள் தக்காளி கிடைக்குதே.நானும் செய்யனும். இப்போதைக்கு பாலக் கீரை சூப் தான் பசங்க அடிக்கடி கேட்கிறார்கள் கட் பண்ணி கவரில் கட்டி வைத்துள்ளேன் நாளைக்கு செய்ய்லாம் என்று.
செய்து பார்த்ததற்கு மிகவும் நன்றி.இன்னோரு கிரீமாஃப் டொமேடோ சூப் இருக்கே அதை பார்க்க வில்லையா அது ஏதாவது பங்ஷனுக்கு செய்யலாம்.
ஜலீலா

Jaleelakamal

முதலில் நான் அதை எழுதும்போது பொன்னு குடிக்கல..அப்ப நான்ட் ஹான் குடிச்சேன்..அப்ரம் இப்ப வந்து கொடுதப்ப அவளும் குடிச்சா..இல்லை ஒவ்வொன்னா செய்யலாம்..இன்னொரு நாள் இன்ஷால்லாஹ் மத்ததை ஒவ்வொன்னா செய்து பாத்துடரேன்..அந்த கீரை சூப்பும் குறிப்பில் இருக்குல்ல?அதையிம்ம் அப்ரம் செய்து பார்த்துடலாம்.

அக்கா,
இதோடு உங்க இந்த தக்காளி சூப்,இரண்டு முறை செய்தாச்சு.ரொம்ப நல்லா வந்தது.ஆத்திக்காவும் விரும்பி குடிக்கிறாள்.அக்கா,என் கணவருக்கும் பிடித்துவிட்டது.எனக்கும் தொண்டை வலி,ரூபி சொன்ன மாதிரி ரொம்ப இதமாக இருந்தது.எல்லாரும் சுலபமாக செய்யக்கூடியது,நன்றிஅக்கா.
பாலைகீரை சூப், இன்ஷால்லா, நாளை செய்யலாம்னு பிளான்.அக்கா,எப்படி வந்ததுனு சொல்ரேன்.

ஜலீலாக்கா

என் பெண்ணுக்கு 8 மாதம் தொடங்க போகிறது. இந்த சூப் கொடுக்கலாமா.
மற்றும் புளி எல்லாம் குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாமா? அல்லது ஒரு வ்யதுக்கு பிறகுதான் கொடுக்க வேண்டுமா?
அவள் எதையும் சாப்பிட மறுக்கிறாள். நான் வேலைக்கு செல்வதால் இரவு 7 மணிக்கு மேல் இட்லி, பால் சாதம் இவையெல்லாம் தரலாமா. (தற்சமயம் நான் அவளுக்கு இரவு வலுக்கட்டாயமாய் "cerelac wheat" தருகிறேன். மாற்று உணவு என்ன தரலாம்.)

டியர் தளிகா, நீங்களும் உதவிக்கு வந்து சில குறிப்புகள் சொல்லவும்..

எனக்கு மிகவும் குழப்பமாகவும் , அழுகையாகவும் வருகிறது. என் பெண்ணை எனது மாமியார் பார்த்துக் கொள்கிறார். நான் இல்லாத சம்யங்களில் பால் அல்லது கேழ்வரகு கஞ்சி இதைதான் அவர்களால் தரமுடிகிரது.

சில சமயம் அவள் பருப்பு சாதம், செரெலாக் இதை சாப்பிடுகிறாள். சில சமயம் துப்புகிறாள் அல்லது அழுது அடம் பிடிக்கிறாள்.

காலையில் என்னால் முடிந்த அளவுக்கு பருப்பு சாதம் அல்லது சூப் இவை செய்து வைத்து விட்டு வருவேன். இரவு போய் பார்த்தால் அவை அப்படியே இருக்கும். கேட்டால் அவள் சாப்பிடவில்லை என்று சொல்வார்கள். அவர்களையும் குறை சொல்லமுடியாது.

தயவு செய்து எனக்கு உதவுங்கள்.

சாரதா இந்த சூப் கொடுக்கலாம் ஆனால் காரம் கம்மி பண்னிக்கொள்ளுங்கள்
உங்க மாமியார் பார்த்து கொள்வதே பெரிய விஷியம் ஆகையால் லிக்விட் அயிட்டம் மே வைத்து விட்டு போங்கள் .
கொஞ்சமா பருப்பு சாதம், கிச்சிடி , அந்த மதிரி கொஞ்சமா வைத்து விட்டு போங்கள்
நான் கொஞ்ச பிஸியா இருக்கேன் கொன்ச்ஜ நேஎரம் கழித்து மீதையை எழுதுகீறேன்.
ஜலீலா

Jaleelakamal

நன்றி, உங்கள் பதிலை எதிர்பார்ப்பேன்.

நான் என் பெண்ணை வேலைக்காரியிடம் விட்டுச் செல்லும்போது, அவர்களுக்குப் பிசைய முடியாது என்பதால், பச்சரிசி, பயத்தம்பருப்பு இரண்டையும் லேசாக வறுத்து நைஸ் ரவையாகப் பொடித்து வைத்து குக்கரில் வேக வைத்து சிறிது ரசம், நெய் சேர்த்து செமி சாலிடாக ப்ளாஸ்கில் ஊற்றி வைத்து விடுவேன். அத்துடன் வேக வைத்து மசித்த காயும் சேர்த்து கலந்து வைக்கலாம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

sharda, dont worry, my sis son he is 5 yr old still very fuzzy eater, likes liquid kind of dietalways even my dauhter likes pasty kind of things.. try marliya's carrot juice which is is in mandram ,(kuzhandai alosanai mayam 2).. soups with few vegetable chunks(potato, carrot), u can feed her pongal, idli(may be dipped in hotwater or milk) try to introduce many tastes, u can give a peanut sized amount of almost all the things u eat, so that she'll get interested in tasting.by the age 1 u have to start introducing all kind of foods... suitable for them(less spicy, not very hard)..
when my girl is 8 months , i give her soft oothapam kind dosa dipped in water..paruppu sadam or rasasm sadam which is semisolid , idli..pongal.. u can give curd rice in weekend nnoons, its my daughters favourite..ok nan poi samaikiraen.. will come later..

ஜெயந்தி மாமி, சிவவேல்

இருவருக்கும் மிகவும் நன்றி. நான் கேட்காமலே வந்து பதில் சொன்னதற்கு.

காலையில் இருந்து நான் ஒரே "மூட்" அவுட். ஒரு வேளை நான் ஒரு சரியான அம்மாவாக இல்லையோ என்று. ஒரே அழுகைதான். உங்கள் மெசேஜ் வரும் வரை அழுகைதான். நல்ல வேளையாக இன்று என் பாஸ் வரவில்லை. அதனால் தான் என் அழுகையை வார்த்தைகளாக கொட்டிவிட்டேன்.

என்னால் வேலையயும் விட முடியாத சூழ்நிலையில் உள்ளதால் மிக அதிகமானதொரு மனகுழப்பம்.

நன்றி உங்கள் சப்போர்டிவ்வான வார்த்தைகளுக்கு,

மக்கு, எல்லாருமே நல்ல அம்மாதான். என்ன செய்வது இன்றைய கால கட்டத்தில் இருவர் சம்பாதித்தாலே குடும்பத்தை சமாளிப்பது கஷ்டமாக இருக்கிறது. வேலைக்குப் போவதைப் பற்றிய பழைய பதிவுகளைப் படித்துப் பாருங்கள். என் பையனை 5 முடிந்து 6 வது மாதத்தில் இருந்து க்ரீட்சில் விட்டு இருந்தேன். பெண்ணுக்கு அதைவிட மோசம். ஊர்க்கோடியில் வீடு. க்ரீச்சும் கிடையாது. 9 மாதம் லீவு போட்டேன். அப்புறம் வேலைக்காரி. ஒரு வயது ஆன பிறகு பக்கத்தில் வீடு கட்டி வந்த மாமி பார்த்துக் கொண்டார்கள்.
வேலைக்குப் போவது என்று முடிவு செய்து விட்டால் இதற்கெல்லாம் கவலைப்பட்டால்!
அதே போல் குழந்தை ஒரு நாள் நன்றாக சாப்பிடும். ஒரு நாள் சாப்பிடாது. இதற்கு கவலைப்பட்டால் உங்கள் உடம்பு என்னாவது?
ஒரு கால கட்டத்தில் குழந்தைக்கு விளையாட்டில் இருக்கும் நாட்டம் உணவில் இருக்காது. என் குழந்தைகள் ஒல்லிதான். எங்கள் வீட்டில் எல்லோரும் சரியான சாப்பாட்டு சோம்பேறிகள். பார்ப்பவர்கள் எல்லோரும் சோறு போடுகிறாயா இல்லையா என்றுதான் கேட்பார்கள்.
குழந்தை ஆரோக்கியமாக அடிக்கடி டாக்டர் வீட்டுக்குச் செல்லாமல் இருந்தால் போதுமே!
அன்புடன்
ஜெயந்தி மாமி

டியர் கே ஆர் ரொம்ப நன்றி உங்கள் மகள் விரும்பி குடித்தது ரொம்ப சந்தோஷம்.
சூப் எல்லாம் செய்தால் நல்ல இரண்டு நாலைக்கு வரா மதிரி செய்து விடுவேன்,
இன்று கூட கிரீம் ஆஃப் சிக்கன் சூப் தான் செய்து வைத்துவிட்டு வந்துள்ளேன்.
ஜலீலா

Jaleelakamal

டியர் சாரதா இரண்டு பேர் சம்பாதித்தால் தான் ஓட்ட முடியும்,
கவலை வேண்டாம் சில குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடும், சில குழந்தைகள்.வாயை இருக்கி பொத்தி கொள்ளும், சில குழந்தைகள் அம்மா கையால் கொடுத்தால் தான் சாப்பிடும்.

மற்ற படி என்ன கேட்டாலும் அழுது கொண்டே இருப்பார்கள் ஆனால் காரணமே இருக்காது.
நீங்க ஊட்டுவதை நீங்க ஊட்டி விடுங்கள் ஈசியா கொடுப்பதை அவர்கல்ள்டம் கொடுங்கள்.

//தொடரும்//

ஜலீலா

Jaleelakamal

அக்கா, உங்க இந்த தக்காளி சூப்,ரொம்ப நல்லா வந்தது.ரொம்ப நன்றி.

தக்காளி சூப்.
ஹாய் ரமணி உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

இன்று நோன்புக்கு நானும் தக்காளி சூப் தான். (ஆனால் கூட சிறிது பீட்ரூட் துருவலும் கேரட் துருவலும் போடு கொண்டேன்)

ஜலீலா

Jaleelakamal

தக்காளி சூப் தொண்டைக்கு நல்ல இதமா இருந்தது. என் மகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது.நான் இன்று கேரட், உருளை சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.
இந்த சூப் நிறைய தடவை செய்திட்டேன்.எனக்கு பிடித்தமான சூப். அமிர்த்தவர்ஷினிக்கு ரொம்பவும் இஷ்டம்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.