பதில் Plz..........

என் இனிய அன்பு சகோதிரிகளுக்கு வணக்கம்

நான் அலோசனை கேட்கணும்னா ஒரு பெரிய கதையே சொல்லனும். என் கணவருக்கு ஏப்ரல்-06 Piles Problem வ்ந்தது அப்புறம் ஊரில் இருந்து மருந்து வாங்கி சாப்பிட்டு இப்பொ குண்மடைந்து விட்டார் நானும் சமயலில் மருத்துவர் மற்றும் எல்லொரும் கூறும் அறிவுரைகளும் பின்பற்றுகிறேன். ஆனால் அவருக்கு motion problem(it's very thick) இருக்கு.காலையில் மிகவும் கஷ்டபடுகிறார்.என் அக்காவுக்கு கர்பிணி காலத்தில் தினமும் காலையில் இரவு முளுவதும் ஊறிய உலர்திராட்சை சாப்பிட சொன்னார்களாம் அதுவும் ட்ரை பண்ணி பார்தேன்.ஒரு வாரம் நல்ல பலன் கிடைத்தது மீண்டும் அதே பிரச்சனை தான். அவர் திருமணதிற்கு பிறகு தொப்பை போட்டு விட்டாரம் நானும் குண்டு அதுனால இருவரும் diet-ல் இருக்கிறொம்.காலையில் 2 தோசை 1 கப் காபி குடிப்பார் ஆபிஸில் தினமும் 8 கப் தண்ணீர் குடிப்பார் மதியம் 1 கப் சாதம் 2 சப்பாத்தி இரவு 4 சப்பாத்தி or 4 தோசை சாப்பிடுவார்(alternative days).இப்பொ அவருக்கு தான் சப்பாத்தி சாப்பிடுவதால் தான் இந்த பிரச்சனை யென்ற்று தோன்றுகிறது.அதனால் நான் இரவு கஞ்சி குடிக்கிறென் என்கிறார்.ஆனால் இரவு கஞ்சி குடித்தால் ரொம்ப குண்டாகிவிடுவாரொ என்று எனக்கு பயமா இருக்கு ஆகவே யாரவது என்க்கு பதில் கொடுங்கள் motion கஷ்டம் இல்லாமல் எளிதாக போவதற்கு.இதற்கு உதவியாக உள்ள வேறு ஆலொசனை இருந்தாலும் கூறவும் Plz.............

பதிலை எதிர் நோக்கும் உங்கள்
சங்கீதாஜகராஜன்

அன்பு சங்கீதா,
1. காலையில் எழுந்ததும் பல் விளக்கிட்டு பொறுக்கும் சூட்டில் 1 டம்ளர் சுடுதண்ணீர் குடித்து விட்டு பிறகு டாய்லெட் போனால் சிரமம் இராது.

2. ஆலக்கீரைன்னு ஒரு கீரை இருக்கு. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

3. பிடி கருணையை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

4. சின்ன வெங்காயத்தை (1 கைப்பிடி)பொடியாக நறுக்கி கால் தேக்கரண்டி விளக்கெண்ணெயில் வதக்கி தினமும் உணவுடன் சேர்த்து வந்தால் நல்ல பலன் தெரியும்.

5. சின்ன வெங்காயத் தோல ஒரு தலையணை உறையில் போட்டு வைத்துக் கொண்டு உட்காரும் போதெல்லாம் அதை அடியில் போட்டு உட்கார்ந்தால் குணம் தெரியும்.

6. பிஞ்சு கத்தரிக்காய், வாழைக்காய், கீரைகள், வெங்காயத்தாள் எல்லாமே ரொம்ப நல்லது.

7. நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்கள் எல்லாமே நல்லது.

சப்பாத்தி வேண்டாம். வேறு என்ன சாப்பிடலாமென எங்கள் டாக்டரிடம் கேட்டு வேண்டுமானால் சொல்கிறேன்.

இரவில் படுக்குமுன் உள்ளங்கையில் 1/2 தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி அப்படியே விழுங்கி விடலாம். நல்ல பலன் தெரியும்.

வெள்ளை வெங்காயத்தை பொடியாக நறுக்கி காலையில் நீராகார தண்ணீரில் சேர்த்து, உப்பு, 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து குடிக்க மூன்றே நாளில் பலன் தெரியும் (அப்படின்னு சொல்வாங்க)
எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். முயற்சியுஙகள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

முன்னொரு பதிலில் பப்பாளி சாப்பிடலாம் என்று சொல்லியிருந்தேன்..யோசித்தபொழுது நான் சொன்னது அது கான்ஸ்டிபேஷனுக்கு ஆனால் பைல்ஸ்கு ஒத்துக்கொள்ளுமான்னு தெரீல....நாளைக்கு சொல்றெண்

தினமும் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் தங்கள் ப்ராபளம் குறையும்.
lakshmi sri sundar

lakshmi sri sundar

hai sangeetha,
if u are in india,especially,tamil nadu.you can easily get a type of leaf,which is called துத்தி இலை which is a good remedy for piles.pls try this and let me know.
admin,sorry for typing in english.

Hello Friends,
எனக்கு கொஞ்ச நாளா வெள்ளை படுதல் இருக்கு.கொஞமாக தான் என்றாலும் solve பன்ன விரும்புகிறென்.friends any home remedies pls

cheers
Shuba

cheers
Shuba

எனது பன்னிரண்டு வயது சின்ன பெண்ணை ஒரு மாதகாலம் ஒரு பார்ட் டயிம் வேலயாள் வைத்து கணவரின் பொறுப்பில் விட்டுவிட்டு நான் பெரிய பெண்ணின் கல்யாண ஏற்பாடுகள் செய்ய சொந்த ஊருக்கு சென்ட்ருவிட்டேன்.அவளுக்கு பிடிக்கிரெதென்ட்ரு ஹோட்டெலில் அடிக்கடி சிக்கென் வாங்கி கொடுதிருக்கிரார்.இஞ்சி ஊருகாயென்ட்ரால் அவளுக்கு உயிர்.அதுவும் ஒரு மாததில் இரண்டு பாட்டில்.கேக்கனுமா விளைவை வெளியே பொகும்போது இரத்தமும் சேர்ந்து போக ஆரம்பித்து விட்டது.டாக்டரிடம் சென்ட்ரால் piles இதுன்னு சொல்லி ஆயின்மென்ட் குடுத்தார் ஒண்னும் சரியாகலை.ஆயுர்வேதம்,ஹொமியோபதி என்ட்ரு இரண்டு மாதகாலம் பார்தேன்.ஆரு என்ன கை வைத்தியம் சொன்னாலுன்ம் செய்தேன் ஒன்ட்ரும் பலன் இல்லை.ஒரு நாள் என் அம்மாவீட்டு டிரைவர் சொன்னார் மேடம் பண்ணிக்கறி ஒருதடவை கொடுத்தீஙன்னாபோரும்ன்னு.அய்யோ அதெல்லம் எப்படி வீட்டில் செய்வெதென்ட்ரு முதலில் தயங்கினேன்.அனால் ஒருனாள் குழந்தயை விட ஒன்ட்ரும் பெரிதல்லன்னு முடிவு செய்து ஒரு ஞாயிரன்ட்ரு பக்கத்து கிராமத்திலிருந்து வாங்கி சமைத்து மட்ட்ன்னு சொல்லி மூன்ட்ரு நாள் ப்ரிட்ஜில் வைத்து கொடுதேன்.ஒரு வாரதில் பலன் தெரிந்தது.இரண்டு முறை அப்படி கொடுதேன்.இப்பொ பூர்ணமாக குணமாகிவிட்டது.ஒரு வருடமாகிவிட்டது.

Today is a new day.

Buy round dry fig fruits and immerse 2 slices into 1/2 tumbler water during the night. Early morning drink the water with the fig fruits with the seeds. Try this for 10 days it will be very helpful.

இப்படி உடம்பும் அதிகம் பைல்ஸும் கான்ஸ்டிபேஷனும் எல்லாம் ஒன்னு சேந்ததால நீங்க இதுக்கு ஒவ்வொருத்தரின் தனிதனி ஆலோசனையை பின்பற்றி அது இருக்கர நிலமையை மோசமாக்குவதைவிட ஒரு நல்ல டயடீஷியனை சந்தித்து விவரமா ப்ரச்சனையை சொன்னால் அவங்க இது மூன்ன்றும் குணமாகும்விதத்தில் அழகா ஒரு டயட் சார்ட் கொடுப்பாங்க..அதை பின்பற்றினீங்கன்னா கன்டிப்பா நல்லது

பைல்ஸ்ச பொருத்தவரை உணவு மூலமாக கட்டுபடுத்தலாம்.(உணவே சிறந்த மருந்து என்பது இதுக்கு 100 சதம் பொருந்தும்).
இரவில் நேரமா சாப்பிடுவது நல்லது.
1)இரவு சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து 1 சாத்துகுடி சாப்பிடவும்.(இது ஒரு மருத்துவர் கூறியது.சிறந்த பலனளிப்பது)கண்டிப்பாக நல்ல பலன் தெரியும்.
2)நார்சத்து அதிகம் உள்ள உணவுகள் அதிகம் எடுத்து கொள்ளவும்.
3)சிக்கன்,மட்டன் தவிர்த்தல் நலம்.
4)அதிக மசாலா உணவும் தவிர்க்க வேண்டும்.
5)நிறைய தண்ணீர் குடிப்பது, வாக்கிங் போவது நல்லது.குறிப்பாக காலையில் எழுந்தவுடன் 2 - 3 கிளாஸ் தண்ணி குடிப்பது நல்லது
6)ஒவ்வொரு வேளை உணவுடனும் நார்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள் சேர்த்து கொள்ளுங்கள்.
முக்கியமாக எந்த மாதிரி உணவு ஒத்துகொள்ளவில்லை என்பதை கவனித்து அதை தவிர்த்துவிடுங்கள்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

டியர் சங்கீதா
கறி கருனைகிழங்கு சால்னா(குழம்பு அதில் கொஞ்சம் தனியா நல்ல் சேர்த்து கொள்ளனும்). செய்து கொடுங்கள் கறி நல்ல வெந்து இருக்கனும்.

முள்ளங்கி சாம்பார், பூசனிக்க்காய் கூட்டு நைட் ரொட்டி, சப்பாத்தி சாப்பிடவேண்டாம்.

அதற்கு பதில் இட்லி, தோசை அந்த மாதிரி லேசானா அயிட்டம் எடுத்து கொள்ள சொல்லுங்கள்.

சிக்கன் சாப்பிடலாம் ஆனால் நல்ல அதற்கு ஏற்ற மாதிரி தயிர் லெமென் போட்டு செய்யனும்.

மாதுளை, தர்பூஸ்,அத்தி பழம், போன்றவை சாப்பிடலாம்.

காலையில் வெறும் வயற்றில் சூடான வெண்ணீர் அருந்த வேண்டும்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்