தேதி: November 29, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அரைக்க:
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
ஆலிவ் ஆயில் (அ) எந்த எண்ணெயானலும் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு பின்ச்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
உளுந்து மாவில் கலக்க:
உப்பு - தேவைக்கு
ஆப்ப சோடா - ஒரு பின்ச்
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி, கறிவேப்பிலை - ஒரு கொத்து (பொடியாக நறுக்கியது)
முதலில் மிக்ஸியில் ஒரு தேக்கரண்டி தண்ணீரில் பெருங்காயத்தை கரைத்து அத்துடன் எண்ணெய், இஞ்சி சேர்த்து அரைத்தெடுக்கவும். எண்ணெய் ஊற்றி அரைப்பதால் மிக்ஸியில் அதிகம் ஒட்டாது.
அரைத்து வழித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு வடை மாவில் கலக்க வேண்டிய பொருட்களை போட்டு கலக்கி வைக்கவும்.
ஒரு இரும்பு வாணலியில் எண்ணெயை சூடாக்கி கையை நல்ல கழுவி கொண்டு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து கொண்டு கையை நனைத்து விட்டு மாவை எடுத்தால் ஒட்டாமல் வரும். அப்படியே கட்டை விரலால் நடுவில் ஒரு ஓட்டை போட்டு எண்ணெயில் ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.
பொரித்து எண்ணெயை நல்ல வடித்து இதற்கு எல்லா வகை சட்னி துவையலும் பொருத்தமாக இருக்கும்.
நம் தமிழ் நாட்டில் பொங்கல் என்றால் உளுந்து வடை இல்லாமல் சாப்பிட முடியாது விழுந்து போன இடுப்பையும் தூக்கி நிறுத்தும் குணம் இந்த உளுந்துக்கு உண்டு. வெள்ளைபடுதலுக்கும் நல்லது. உளுந்து களி, கருப்பு உளுந்து சுண்டல் இதெல்லாம் பெண்களுக்கு ரொம்ப நல்லது.
பொட்டுக்கடலை சட்னியும், புதினா துவையலும் சூப்பர் காம்பினேஷன். இதை பொங்கல், உப்புமா, பாயசத்துக்கு ஏற்றது. உளுந்து வடைக்கு சர்க்கரை தோட்டு சப்பிட்டாலே ருசி அபாரமாக இருக்கும். சின்ன வயதில் எங்க அம்மா ஞாயிற்று கிழமைகளில் காலை டிபனுக்கு கொடுப்பார்கள்
Comments
Thank u Jaleela banu Madam
Really nice taste ulunthu vadai, i tried yesterday, gud taste, this s 1st time i prepared vadai, i could not do the hole in the vadai, next time i wil do with center hole. Thank u for ur recipy madam bye by Hema Prasanna at London.
வாழ், வாழ விடு