மயக்கம்

வயதானவர்களுக்கு வரும் மயக்கத்திற்க்கு ஒரு நல்ல கைவைத்திய மருந்து சொல்லுங்கள்

ஹாய் சிமுகே,
என் பாட்டி எப்பவும் தினம் காலையில் ஒரு 11 மணியளவில் கோதுமை ரவையை பாலில் காய்ச்சி குடிப்பாங்க...அது நல்ல தெம்பா இருக்குமாம்..அதை குடிக்காட்டி மயக்கம் வரும் மாதிரி இருக்கும்பாங்க....வயசானவங்க அதிகம் சாப்பிட மாட்டாங்கில்லையா அப்ப இது மாதிரி பன்னி கொடுத்தா ஈசியா குடிப்பாங்க திடீர் தெம்பு கிடைக்கும்பாங்க எந்தளவுக்கு இது வர்க் பன்னும்னு எனக்கு தெரீல.

நன்றி தாளிகா மேடம் ஆனால் நீங்க சொல்ற அளவுக்கு ரொம்ப வயசானவங்க இல்லை தாளிகா மேடம் எங்க மாமியாருக்காகதான் கேட்டேன். அவங்களுக்கு அடிக்கடி தலை சுற்றல் வருகிறது அதற்கு மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்துவதை விட கைவைத்தியம் எதாவது செய்யலாம் என்றுதான் கேட்டென். அவங்களுக்கு வயது 55

hi simuke,கழுத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் அடிக்கடி தலைசுற்றல் வரும்.தலையணை இல்லாமல் படுக்க சொல்லுங்கள்.கழுத்து பிரச்சினையால் தலை சுற்றல் என்றால் குணம் கிடைக்கும்.நிரந்தர தீர்வுக்கு டாக்டரை பார்ப்பதே நல்லது.வேறு பிரச்சினை ஒன்றும் இல்லைன்னா கை வைத்தியம் செய்யலாம்.
எனக்கு தெரிந்த கை வைத்தியம் சொல்கிறேன்/ஒரு கைப்பிடியளவு முருங்கை கீரையை(காம்புகளோடு)
1 1/2கப் தண்ணீரில் பாதியாக சுண்டும் அளவு கொதிக்க வைத்து 3 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பலன் கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி! kavisiva மேடம் நீங்கள் சொன்ன கைவைத்திய முறையை செய்து பார்க்கிறேன்.

சிமுகே
நாலைந்து முறை இந்த பகுதியில் வந்தேன் நுழிஅய முடியவில்லை.
பசி இருந்தால் கூட மயக்கம் வரும் ஆதாவது சாப்பிடும் போது அவர்களால் நிறைய சாப்பிடமுடியாது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏஅதாவது சாப்பிட காலை நேரமாக இருந்தால் சூப் (அ) பழம் அல்லது ஜூஸ் மயக்கத்திற்கு குளுக்கோஸ் தான் நல்ல மருந்து என் மாமியார் அது தான் குடிக்கிறார்கள்.
ஆரஞ் ஜூஸ், தலை சுற்றல் வந்தால் உடனே குள்க்கோஸ் தண்ணீரில் ஒரு பின்ச் உப்பு போட்டு கொடுங்கள். பிரெஷர் இருக்கும் செக் பண்ணுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்