தூதுவளை கீரை பருப்பு குழம்பு

தேதி: December 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுத்தம் செய்த தூதுவளை கீரை - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் - 1/4 கப்
மிளகாய்வற்றல் - 1
மிளகு - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 1 பல்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
சின்னவெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து


 

துவரம்பருப்புடன் பெருங்காயம் சேர்த்து குழைய வேகவைக்கவும். கீரையை சுத்தம் செய்து பொடியாக வெட்டவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கீரையை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் உப்பு, சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
அரைக்க வேண்டியவற்றை தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். கீரை வெந்ததும் வேக வைத்த பருப்பு, அரைத்த கலவை, தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்க்கவும்.


தூதுவளை கீரை சளி இருமலுக்கு நல்ல குணம் தரும். சாதத்தில் கலந்து நெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும். லேசான கசப்பு தெரியும்.

மேலும் சில குறிப்புகள்