டிசம்பர் 8 பிரிடிஷ் ஏர்வேயில் INDIA செல்பவர்கள் யாரேனும் இருந்தால் தெரிவிக்கவும். நான் 2 குழந்தைகளுடன் தனியாக செல்வதால் பயமாக இருக்கிறது. உதவி செய்யுங்கள்.
டிசம்பர் 8 பிரிடிஷ் ஏர்வேயில் INDIA செல்பவர்கள் யாரேனும் இருந்தால் தெரிவிக்கவும். நான் 2 குழந்தைகளுடன் தனியாக செல்வதால் பயமாக இருக்கிறது. உதவி செய்யுங்கள்.
பயம் வேண்டாம்
ஹாய் ஷர்மிளா, எதுக்கு பயப்படுகிறீர்கள்? குழந்தைகளுக்கு தேவையானதை ஹாண்ட் லக்கேஜில் எடுத்துக்கொள்ளுங்கள். விமானத்தினுள் எந்த உதவி தேவைப்பட்டாலும் ஏர்ஹோஸ்டஸிடம் தயங்காமல் கேளுங்கள். குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு பயணத்தின்போது அவர்கள் நேரத்தை செலவழிக்க விளையாட்டு பொருட்கள், கலரிங்க் புக் இதுபோல் ஏதாவது கொண்டு செல்லுங்கள்.பயப்படாமல் இந்தியா சென்று வாருங்கள்.
thank u
நன்றி. லண்டன் ஏர்போர்டில் கனெக்டிங் பிளைட் பிடிப்பதில் இரண்டு குழந்தைகளுடன் சிரமமாக இருக்குமோ என்று பயமாக இருக்கிற்து.
ஷர்மிளா
ஹாய் ஷர்மிளா, நீங்க லண்டன் ஏர்போர்ட்டில் கனக்டிங் ஃபிளைட் எந்த டெர்மினலில் பிடிக்க வேண்டும் என்று உங்கள் போர்டிங் பாஸிலேயே இருக்கும் அல்லது விமானம் இறங்கும் போதும் அறிவிப்பார்கள். அந்த டெர்மினலின் எண்ணை வைத்து எளிதாக சென்று விடலாம். அப்படியே ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் அந்த ஏர்போர்ட்டில் பணியில் இருப்போரை கேளுங்கள். ஒரு குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்துக்கொள்ளுங்கள். தைரியமாக சென்று வாருங்கள்.
வசந்தி
ஹலோ வசந்தி துங்களையா
யாரோ எனக்கு பதில் எழுதி இருக்கிரார்கள் யாருன்னு தெரியல ந்த பகுதியில் உள்ளே நுழைய முடியவில்லை.
ஜலீலா
Jaleelakamal
ஷர்மிளா
ஷர்மிளா சொல்ல மறந்துவிட்டேன். flight take off,landing ஆகும்போது குழந்தைகள் ஸ்ட்ராவில் வைத்து உறிஞ்சுமாறு ஜீஸ், சிறிய குழந்தையாயிருந்தால் பாட்டிலில் ஜூஸ் அல்லது தண்ணீர் குடிக்க வைக்கவும்.ear plug காதில் வைக்க முடிந்தால் வைக்கவும்.
thank u very much
மிகவும் நன்றி வின்னி. மறக்காமல் ஜூஸ் எடுத்து செல்கிறேன்