வாங்க வந்து பேசிவிட்டு போங்க

சகோதரர் & சகோதரிகள் அனைவரும் எங்கு ஆளைக்காணோம்? செல்வி அக்கா, கவி ,நர்மதா & ஜலீலா சைலண்டா சமையல் குறிப்புகள் கொடுத்துட்டு போறீங்க. சரி அனைவரும் இந்த த்ரெட்டில வந்தாவது ஜாலியா பேசிட்டு போங்க.

இங்க தான் இருக்கேன்..இங்கே நேஷனல் டேக்கு நாலு நாள் லீவு அதனால சுத்தோ சுத்தோன்னு ஊர் சுத்திட்டு அறுசுவையை இடையிடையே ஒரு விசிட் போடதான் முடிஞ்சுது..பதிவு போட முடீல..ஜலீலாக்கா அபு தாபிக்கு எங்க வந்தீங்க?கலீஃபா பார்குக்கா?

தளிகா நலமா? ரீனா குட்டி எப்படி இருக்கிறாள். இப்பொழுது நன்றாக சாப்பிடகிறாளா? ஊர் சுத்தினதை ரீனா குட்டி எனஜாய் பண்ணினாளா?

ஜானகி

ரீமா குட்டி நல்லா இருக்கா...இப்ப பரவால தேவைக்கு சாப்பிடரா..ஜானகிட்ட பேசி ரொம்ப நாளாச்சுல்ல...இப்ப எப்படி இருக்கீங்க?எங்க இருக்கீங்க?ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?எப்ப ஊர்கு போரீங்க?
இல்ல ஜானகி அவள்கு வெளிய நேத்து போனது பிடிக்கில....அவள்கு பார்க் ,மாள் அந்த மாதிரி தான் பிடிக்கும்...நேத்து அக்வேரியத்துக்க் போனோம் அப்ரம் அங்க நிறைய க்லவுன்ஸ் இருந்தாங்க..அவளுக்கு க்லவுன்ஸை பிடிக்காது அதனால மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு உக்காந்திருந்தா...அக்வேரியத்துலயும் உள்ள டார்க் ரைட்னால இருட்டுல அவளுக்கு ஒன்னும் புடிக்கல..போலாம் போலாம்னு சொல்லிட்டே இருந்தா..பெரிய மின்ன்லாம் பாத்தா அவள்கு புடிக்கும்னு நெனச்சேன்..பாத்தா "மீன் பாத்தா பேட் கேர்ல்" மாதிரி இருக்காம்:-)

தளிகா:-)

குழந்தைகள் வளர வளர அவர்களுடைய ரசனையும் மாறிக் கொண்டே இருக்கும். அதும் இருட்டில் எதையும் ரசிக்க மாட்டார்கள். நான் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கிறேன். ஜீன் மாதம் ஊருக்கு போகலாம் என்று பிளான். தம்பிக்கு பெண் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் அப்படி கல்யாண்ம் வைத்தால் போவேன். தேவாவிடம் பேசும் போது நீங்கள் போட்டோவில் அழகாக இருப்பதாக சொன்னார்கள். உங்கள் போட்டொவை நான் பார்க்கலாமா? நீங்கள் எஸ் என்று சொன்னால் தேவாவை எனக்கு அனுப்ப சொல்லுவேன்.

ஜானகி

ஒரு வேலை செய்யலாம் ஜானகி..தேவாவிடம் உங்கள் ஐடி கேட்டு வாங்கரேன்...அப்ரம் பேசலாம் இஷ்டம்போல் அப்ப நான் ஃபோடோ அனுப்பரேன்..சரியா.ஆமா கேக்கனும்னு நெனச்சேன்..உங்களுக்கு அக்க,அண்ணா குழந்தைகளை பாத்து பாத்து நல்ல பழக்கம் இருக்கு போல..நல்ல அனுபவசாலி போல பேசரீங்க ஜானகி.

தேவாவிடம் என்னுடைய ஐடி வாங்கி கொள்ளவும். எனக்கு ஒரு தம்பி, தங்கை தான். ஆனால் எனக்கு குழந்தைகள் என்றால் உயிர். எனக்கு ஏற்பட்ட கசப்பை மறக்க என்னுடைய மாமா பையனை நான் ஒரு வயதில் இருந்து வள்ர்த்தேன். அவனுக்கு 3 வயது ஆகிறது இப்பொழுது கூட என்னை அம்மா என்று தான் கூப்பிடுவான். பிரகு ஐடியில் நிறைய பேசுவோம்.

ஜானகி

ஹய் ரூபி.
நான் உங்க போட்டோவை பாத்துட்டேனே.எப்படினு கன்டுபிடீங்க பாக்கலாம்?.
-ஹிபா.

அய்யோ என் ஃபோடோவா ...ஹா ரீல் தான?:-)

ஆன் நியாபகம் வந்துடுச்சு...ஃபோடோ பக்கெட்லயா?
சரியா?அது என் கசின்கு லின்க் குடுக்க அப்லோட் பன்னினேன்..அப்ரம் இங்க லின்க் கொடுத்த நியாபகம் வந்தது அந்த ஃபோடோவை டெலிட் பன்னிட்டேன்..அந்த கேப் ல பாத்தீங்களா?

ஹா...ஹா..சூப்பரா இருக்கீங்க.
சரி.உங்க ஊர் பொண்ணுக்கு உங்க ID தரமாட்டீங்கலா?

மேலும் சில பதிவுகள்