தேதி: March 31, 2006
பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் - 4
பெருங்காயம் - சிறிது
புளி - சிறு எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பில்லை இலைகளை உருவி, ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையுடன் புளி, ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து முதலில் அரைக்கவும்.
இலை நன்கு அரைபட்டவுடன், பருப்பைப் போட்டு சிறிது அரைத்து எடுத்துக் கொள்ளவும். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம்.