மீன் குழம்பு

தேதி: December 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
மிளகு - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6 (காரத்துக்கு ஏற்ப கூடுதலாகவோ குறைவாகவோ சேர்க்கவும்)
தனியா - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - 1 எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
உப்பு - தேவையான அளவு


 

மீனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு சேர்த்து வெடிக்க விடவும்.
மிளகாய் வற்றல், தனியா சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் சின்ன வெங்காயம் 1 கொத்து கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் எடுத்து சூடு ஆறியதும் ஏற்கெனவே வறுத்த பொருட்களோடு சேர்த்து மையாக அரைக்கவும்.
புளியை கரைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து கலக்கி உப்பு, புளி, காரம் சரிபார்க்கவும்.
மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
இடையிடையே சட்டியை சுழற்றி விடவும்.
கொதிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போனதும் தீயை குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி சூடான சாதத்தோடு பரிமாறவும்.


புளியை குறைத்து மாங்காய் சேர்த்தும் மீன் குழம்பு செய்யலாம். குழம்பு ஓரளவு கெட்டியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Portia Manohar
I tried your recipe today with maangai. it was quiet good. my hubby choosed your recipe to do it.
thanks.

Portia Manohar

நேற்று இந்தமுறையில் குழம்புவைத்தேன்.நன்றாக இருந்தது.

சவுதி செல்வி

சவுதி செல்வி

செல்வி குழம்பு நன்றாக வந்ததா? ரொம்ப சந்தோஷம் பா. மிகவும் நன்றி செல்வி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சாரி போர்ஷியா இப்போதான் உங்க பின்னூட்டம் பார்த்தேன். எப்படியோ கவனிக்காமல் விட்டுவிட்டேன். பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

yempa dont we not add fenugreek seeds for fish curry? anyway i will try this dish tomoro and share the taste with u all. bye!

eat healthy live wealthy

eat healthy live wealthy

ஹாய் ஜெயா சந்திரன், இந்த மீன் குழம்புக்கு வெந்தயம் போட தேவையில்லை. நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!