கொள்ளு துவையல் - 2

தேதி: December 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கொள்ளு - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் வற்றல் - 2
பூண்டு - 1 பல்
உப்பு - தேவையான அளவு


 

கொள்ளை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். வறுத்த கொள்ளுடன் மீதமுள்ள எல்லாப்பொருட்களையும் சிறிது தண்ணீரும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
சாதத்தில் பிசைந்து சாப்பிட துவையல் தயார்.


கொள்ளு மையாக அரைய வேண்டாம். சிறிது நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கவி உங்களுடன் முதன்முதல் பேசுகிரேன். கொள்ளை எப்பொ கழுவறது? ஏன்னா என்னிடம் இருக்கும் கொள்ளில் வண்டு(இறந்து) உள்ளது. இது என்னிடம் சுமார் 3 வருடங்களாக உள்ள்து.ப்ரிட்ஜில் தான் வைத்து இருந்தேன். உங்க ரெஸிபி பார்த்ததும் செய்யலாமெ என்று கேட்டேன்.

மாலினி

ஹாய் மாலினி உங்களோட பேசுறதுல ரொம்ப சந்தோஷம்.அப்புறம் உங்க கேள்விக்கு செல்விம்மா பதில் கொடுத்துட்டாங்க.கொள்ளை வறுத்துட்டு அப்புறமா கழுவிட்டு அரைக்கலாம்.ஆனா இப்போ உங்ககிட்ட இருக்குற கொள்ளை அப்படியே தூக்கி கொட்டிடுங்க. வண்டு வந்த எந்த பொருளையும் வண்டை நீக்கிவிட்டு யூஸ் பண்ண கூடாது.வண்டை நீக்கி விட்டாலும் அதன் முட்டையை நீக்க முடியாது.தேவையில்லாத வியாதியெல்லாம் வர வைக்கணுமா?
இதனால் அறிவிக்க படுவது என்னவென்றால் வண்டு வந்த பொருட்களை உடனே தூக்கி எறிந்து விடவும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!