தேதி: March 31, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி - 3 டம்ளர்
கருப்பட்டி - கால் கிலோ
தண்ணீர் - 2 டம்ளர்
பச்சரிசியை இடித்து அவித்து சல்லடையில் சலித்து வைக்கவும்.
பிறகு ஒரு சட்டியில் கருப்பட்டியை தட்டிப் போட்டு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
கருப்பட்டி கரைந்து கொதித்ததும் இறக்கி வடிகட்டவும்.
வடிகட்டின கருப்பட்டி கரைசலை சூடாகவே மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
மாவினை இடியாப்பக் குழலில் இட்டு, பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தேங்காய்ப் பூ தூவி பரிமாறவும்.
Comments
கருப்புகட்டி இடியாப்பம்
மாவை அவிப்பது என்றால் என்ன?. தயவு கூர்ந்து பதில் கொடுக்கவும்.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா