முகத்தில் கட்டிகள்

Dear Friends,

எனக்கு அடிக்கடி முகத்தில் கட்டிகள் வருகிறது.குறிப்பாக மூக்கின் கீழே.நன்றாக பழுத்து அப்புறம் தான் போகிறது.அதுவரை வலியும் எரிச்சலும் தாங்க முடியவில்லை.கட்டிகள் போக எதாவது கைவைத்தியம் இருக்கிறதா?

ஷுபா
கட்டிகளுக்கு உடனே உடைய மஞ்சள் கிராம்பு பவுடர் செய்து குழைத்து தடவுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

Dear Jaleela,

ரொம்ப நன்றி.

cheers
Shuba

cheers
Shuba

ஜலீலாக்கா, ஒரு சந்தேகம்!

மஞ்சள், கிராம்பு பவுடர் வைத்தால் கட்டி உடையும் என்று சொன்னீர்கள். இப்படி உடையும் இடத்தில் தழும்பு தெரியுமா?! அதாவது கட்டி வந்த அடையாளம் இருந்துவிடுமா?!

இன்னொன்று, கட்டி வருவதுபோல் தெரியும்போதே அதை பெரிதாக விடாமல், அப்படியே subside பண்ண வழி ஏதும் இருக்கா?

ப்ளீஸ், ப்ளிஸ்... எனக்கு சொல்லுங்களேன்.

வேறு யாருக்கேனும் இது குறித்து தெரியுமானால் ,தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...ப்ளீஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

எனக்குதாஅன் இருந்ததுப்பா எல்லாத்தையும் விட பெஸ்ட் நம்ம எச்சில் தான் அதை எட்த்து போடுங்க சீக்கிரம் போகும் ஜலிலாக்கா இன்று லீவு நாளை வருவாங்க அவ்னக்க வந்து சொல்லுவாங்க கிராம்பு பற்றி ஆமா உங்களுக்கு பருவா?கட்டியா?கட்டினா அக்கா சொன்னது ரொம்ப நல்லா கேட்கும் போடுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

டியர் மர்ழியாநூஹு ,

மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு... பருவா? கட்டியா? என்றொரு நல்ல கேள்வி-ஐ கேட்டீர்கள்...

எனக்கு இப்பொழுது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. கன்னம் மற்றும் தாடை (சின்) பகுதியில் , பெரிதாக வந்து ஒரு வாரம், பத்து நாட்கள் போல இருந்து , உடைந்து இரத்தம் வந்து, பிறகு மெல்ல ஆறி, அப்பறம் கருப்பாக தழும்பு தெரிவது கட்டி-தானே சொல்ல வெண்டும்?! பரு...விற்க்கான symptoms என்னென்ன?! எப்படி இருந்தால் பரு? அதற்கு என்ன treatment?! ப்ளீஸ்... கொஞ்சம் எல்லோரும் உதவுங்களேன்!

என் முன்கூட்டிய நன்றிகள் பல!

அன்புடன்
சுஸ்ரீ

உங்களுக்கு அது பருதான் அதான் போஇடே கவலை வேணாம் பி ஹேப்பி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எனக்கும் இதே ப்ரச்சனை உண்டு.தாடையிலும் ,மீசை வருமே அங்கேயும் வந்து சரியா சாப்பிட,பேச,பல் தேய்க்க கூட முடியாது..ஒரு மாதிரி மூட் அவுட்டாகவே இருக்கும்..ஆனால் யார்ட்டயாவது சொன்னால் ப்ஹூ இதுவா வலி என்பார்கள் அப்படி அது.
மர்ழியா எச்சிலை வைக்க ஒரு மாதிரி அறுவருப்பா இருக்காது?மாறுமா?மாறும்னா வேற வழியில்ல என் பொண்ணு வேஸ்டா ஜொள்ளு விட்டுட்டிருப்பா கொஞ்சம் எடுத்து வெக்க வேண்டியது
கட்டி/பரு உள்ள எல்லோரும் நல்ல உணவு habits கவனிங்க..எது சாப்பிட்டா இது அதிகம் வருதுன்னு...irregular periods, எண்ணை உணவுகள், முட்டை,உழுந்து போன்றவையால் கூட வரும்.

தளிக்கா எச்சில் நபி வாக்குப்பா..நான் சொன்னது நபி சொன்ன அரு மருந்து...பரு என்று இல்லை எல்லா புண்ணுக்கும் வைக்கலாம்ம் தெரியுமா?

அதெல்லாம் முதல் முறை வைக்குறப்பதான் இருக்கும் நான் வாவாவாலிப வயதில் வைத்தேன் காலை முழித்ததும் பரு இருக்கும் இடத்தில் வைப்பேன் எண்ணி மூனே நாளில் போயிடும்..ஆமாம என்னை உணவுகலுக்கு பரு அதிகமாவே வரும்..ரீமா க்கு ஜொள்ளுவலியுமா? நல்லா பேட்சு வரும்னு சொல்லுவாங்க..இவளுக்கு1 வயதில் வந்தது இப்ப இல்ல்லை..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அட, எச்சில் வைத்தால் பரு 2, 3 நாளில் போய்விடுமா?! புதுசாக இருக்கே?! நீங்க அனுபவத்தில் பலன் கண்டு சொல்வதை பார்த்தால் ஆச்சரியமாகவும் இருக்கு!. கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் ட்ரை செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி மர்ழியாநூஹு!!

ஆமாம் தளிகா, எப்ப பார்த்தாலும் கன்னம் பகுதியில், வந்து ஒரு 10 நாளாவது தங்கிவிட்டுதான் போகும். நான் இது அடிக்கடி நடப்பதால், அவ்வளவாக கண்டுக்கொள்ள மாட்டேன். இந்த முறை ஏனிந்த கவலை? இன்னும் இரண்டு வாரத்தில் இந்தியா போக தயாராகிக்கொண்டு இருக்கிறென் இல்லையா?, அதான்.

எனக்கு இந்த மாதிரி முகத்தில் வருவது பார்த்து என் அம்மாதான் என்னை விட ரொம்ப அதிகம் வருத்தப்படுவாங்க... அதான் , அங்க போறதுக்கு முன்னாலே சரிப்பண்ணிட்டு போகலாம்னு நினைச்சேன்... வீணா பாவம், எங்க அம்மாவை கஷ்டப்படுத்த வேண்டாமே என்று நினைத்தேன். அப்புறம், எல்லாம் ஆண்டவன் விட்ட வழி! பதிலுக்கு ரொம்ப நன்றி தளிகா!

அன்புடன்
சுஸ்ரீ

ஆமாம் Susri போஇடும் எச்சில் கூட ஒரு மருந்துதான் நமக்கு..ஆனா ஒரு நாளைக்கே அடிக்கடி நியாபகம் வரும் நேரம்லாம் போடனும்..அடுத்தவங்க எச்சிலா உங்களோடதுதானே போடுங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்