அச்சு முறுக்கு

தேதி: December 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா மாவு - 1/4 கிலோ
சீனி - 150 கிராம்
முட்டை - 1
தேங்காய் - பாதி மூடி
கருப்பு எள் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க


 

முதலில் தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.

மைதாமாவில் தேங்காய் பால்,சீனி, முட்டை இவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.

முறுக்கு சுடும் பதத்திற்க்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். எள் சேர்த்து நன்கு மாவை கலக்கி அச்சு முறுக்கு சுடும் அச்சை மாவில் முழுவதுமாக முக்காமல் பாதி அச்சுவரைக்கும் முக்கி எண்ணெய்யை சூடாக்கி பொரித்து எடுக்கவும்.


எண்ணெய்யை பொரிக்க சூடாக்கும் போது அதில் அச்சையும் போட்டு வைக்கவும் அந்த அச்சு சூடான பின்புதான் அச்சை மாவில் முக்கவும் அப்பொழுதுதான் மாவு அச்சில் ஒட்டும்

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள கதிஜா
நேற்று உங்கள் ரெசிப்பி அச்சு முறுக்கு செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.செய்து பார்க்கனும் என்று எனது நீண்ட நாள் கனவு.படம் எடுத்து வைத்திருக்கேன்.ஏதோ என் சிஸ்டம்ல பிரச்சனையா இருக்கு.சரி ஆனதும் எப்படியும் இன்ஷா அல்லாஹ் அனுப்புவேன்னு நம்பிக்கை இருக்கு.உங்களுக்கு எனது அன்பான நன்றி.

அன்புடன் பர்வீன்.

சகோதரி பர்வீன் பானு அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தான் தயாரித்த அச்சு முறுக்கினை படம் எடுத்து அனுப்பியுள்ளார்.

<img src="files/pictures/murukku.jpg" alt="Achu murukku" />

நலமாக இருக்கிறீர்களா. எனது குறிப்பை செய்து பாராட்டியதோட இல்லாமல் போட்டோவும் எடுத்து அனுப்பியதற்க்கு மிக்க நன்றி.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதிஜா நலமா?பையன் நலமா? உங்க தாத்தா இறந்துவிட்டதாக மர்ழியா சொன்னார்கள் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன் தீபா

எப்படி இருக்கிறீர்கள். நானும்,பையனும் நல்லா இருக்கிறோம்.உங்களிடம் பேசி நிறைய நாள் ஆகிவிட்டது.

அன்புடன் கதீஜா.

கதீஜா,
முதலில் எனது அனுதாபங்கள். நானும் யோசித்துக்கொண்டே இருந்தேன், ஏன் காணவில்லை என்று. துயரத்திலும் ஒரு நல்லகாலம்... நீங்கள் இந்தியாவிலேயே நின்றதால் தாத்தாவின் கடமைகளைக் காணக்கூடியதாக இருந்திருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருக்கிறீர்கள் பிள்ளைகள் நலமா. ஆமாம் அதிரா நீங்கள் சொல்வது போல துயரத்திலும் ஒரு நல்ல காலம் தான் இதற்க்காகத்தான் என் பயணம் தள்ளிக்கொண்டு போனது போல அதை நினைத்துதான் நான் மனதை தேத்திக்கொள்கிறேன். நான் பார்த்தே என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை பார்க்காவிட்டால் இன்னும் மனசு தாங்காது.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா,
இன்று அச்சு முறுக்கு செய்தேன். (- எள்ளு, வீட்டிலிருக்கவில்லை.) சுவையாக இருந்தது. பல வருடங்கள் கழித்து முயன்றிருக்கிறேன். குறிப்புக்கு நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அச்சு முறுக்கு செய்து பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

திருமதி. இமா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த அச்சு முறுக்கின் படம்

<img src="files/pictures/aa90.jpg" alt="picture" />

அச்சு முறுக்கு செய்து போட்டோ எடுத்து அனுப்பியதுக்கு நன்றி. இப்ப தான் நான் இதை பார்க்கிறேன்.

அன்புடன் கதீஜா.