ராகி மாவு இனிப்பு தோசை

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேப்பை/ ராகி மாவு -- ஒரு கப்
வெல்லம் -- ஒரு கப்
ஏலக்காய் -- 2 என்னம் (நசுக்கியது)


 

முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து ஒரு கொதி கொதிக்கவிடவும். அப்பொழுது உள்ள அழுக்கெல்லாம் வெளியே வந்து விடும். அதை வடிகட்டி தனியே வைக்கவும்.
ராகி மாவுடன் வடிகட்டி வைத்த வெல்லதை சேர்க்கவும். அதனுடன் ஏலக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
பின் இவற்றை தோசை கல்லில் விட்டு தோசையாக வார்க்கவும்.
சுற்றிலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு திருப்பி போட்டு வெந்ததும் பரிமாறலாம்.
சுவையான இனிப்பு ராகி தோசை ரெடி.


மேலும் சில குறிப்புகள்